#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
கல்பதரு தினம் 2026 புத்தாண்டு ஆசி...
இதே நாள் ஜனவரி1ம் தேதி 1886 ம் ஆண்டு குரு தேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் காசிப்பூர் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த போது கிரீஷை நோக்கி,
'என்னை அவதார புருஷர் என்று ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாயே, அப்படியென்ன என்னில் கண்டுவிட்டாய்?' என்றார்.
அதற்கு கிரீஷ் குரல் நடுங்க, 'வியாசராலும் வால்மீகியாலும் சொல்ல முடியாத உங்கள் பெருமையை ஒன்றும் அறியாத நான் என்ன சொல்வது?' என்று கூறினார்.
இதைக் கேட்டதும் உருகிப்போன குரு தேவர், 'நான் என்ன சொல்ல இருக்கிறது?
உங்கள் அனைவருக்கும் ஆன்மீக விழிப்புணர்வு உண்டாகட்டும்!'
என்று கூறியவாறு பாவ சமாதியில் ஆழ்ந்தார்.
ஒவ்வொரு ஜனவரி முதல் நாள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கல்பதரு நாளாக கொண்டாடப் படுகிறது.
இதனைப் படிக்கும் அனைவருக்கும் சிறு முயற்சி செய்தால் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படும், குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆசியுடன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


