இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால்தான் ஏற்பட்டது.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:5292)
பனூ இஸ்ராயீல்களின் சமூகத்தில் பெண்கள் மூலம் ஏற்பட்ட குழப்பங்களில் முதலாவது
”அவர்கள் தங்களுக்குள் அழகுபடுத்திக்கொள்வதில் போட்டிப்போட்டனர், ஒரு பெண் உயரமாகவும் அழகாகவும் இருந்தால், குள்ளமாக இருப்பவள் அழகுசாதனங்களைப் பயன்படுத்தி உயரமானவளின் அழகுக்குச் சமமாகத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு அந்நிய ஆண்கள் இருக்கும் சபையில் தோற்றமளிப்பாள்.
அத்துடன் தனது கைகளில் வாசனைத் திரவியங்களை வைத்திருந்து அந்த சபையில் வெளிப்படுத்துவாள், இப்படியாக மானக்கேடான வரம்பு மீறிய காரியங்களில் அவர்கள் ஈடுபட அது தூண்டுதலாக அமைந்தது., அவர்களில் குழப்பங்கள் தோன்றி ஆண்களை மிகைக்கும் அளவுக்கு அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர் என்று இந்த நபிமொழிக்கு விளக்கமளிக்கும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யும் துணிகின்ற ஆண்களுக்கு அந்தப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் வேறு எந்தச் சோதனையையும் எனது வாழ் நாளுக்குப் பிறகு நான்விட்டுச் செல்லவில்லை.
என உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்கள்.
(புகாரி: 5096) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


