ShareChat
click to see wallet page
search
இரவு ஜெபம்* *ஆண்டவரே! இன்றைய நாளுக்காக நன்றி. இந்நாளை அமைதியோடு முடிக்க வழிநடத்தியதற்கு நன்றி அப்பா. நாங்கள் செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும், உமது கரங்களில் ஒப்படைக்கிறோம். இன்றைய நாளின் எனது தவறுகளை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளும். இன்று களைப்புற்ற எனது மனமும், உடலும் உம்மில் ஓய்வு பெறட்டும்.* *எங்கள் குடும்பத்தையும், உறவுகளையும் உமது பாதுகாப்பில் காப்பாற்ற வேண்டுகிறேன். நோயுற்றவர்களுக்கு ஆரோக்கியத்தையும், துயருருவோருக்கு ஆறுதலையும் தந்தருளும். நாளைய தினத்திற்கான நம்பிக்கையும், ஆற்றலும் எங்களுள் புதுப்பித்தருளும். எங்கள் மனதில் அமைதியும், எங்கள் வீட்டில் சமாதானமும் நிலைத்திருக்க அருள் தாரும். துன்மார்க்கத்திலிருந்து எங்களை விலக்கி, உமது ஒளியில் நடத்தும்.* *இன்றைய இரவில் எங்கள் கனவுகள், உமது அமைதியால் நிரம்பட்டும். எங்கள் வாழ்வில், உமது சித்தம் நிறைவேறட்டும். இயேசுவின் நாமத்தில் இவற்றையெல்லாம் உம்மிடம் ஒப்படைக்கின்றோம். - ஆமென்.* #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝பைபிள் வசனங்கள் - ண்டவரேஉன் ள்ளத்திற்குத் உ தெளிவூட்டுவார் ! நீவிரும்பும் ஞானத்தை உனக்கு அருள்வார் ! சீராக்கின்ஞானம் 6:37 ண்டவரேஉன் ள்ளத்திற்குத் உ தெளிவூட்டுவார் ! நீவிரும்பும் ஞானத்தை உனக்கு அருள்வார் ! சீராக்கின்ஞானம் 6:37 - ShareChat