ShareChat
click to see wallet page
search
🌹வைகுண்ட ஏகாதசி மகிமை... தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதா கவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரை இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும், லோகத் தின் இரவை தட்சிணாயணம் என்றும் அழைப் பார்கள். இவ்வாறு நோக் கும்போது மார்கழி மாதம், தேவலோகத்தில் விடியற்காலையாகும். அந்த நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்கிறோம். மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பதால் பகவான் அதன்வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி. வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மார்கழி வளர்பிறை யில் வரும் ஏகாதசியான வை குண்ட ஏகாதசி மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை மோட்ச ஏகாதசிஎன்றும் அழைப்பர். 🌹விரதமுறை : பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விரத்தை தொடங்க வேண்டும். மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமை யைப் பேசுவதும், பெருமாளின் பாடல்களை ஓதுவதுமாக பொழுது போக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை காய்கறிகள் உணவில் இடம் பெற வேண்டும். இதில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் அவசியம் இடம்பெற வேண்டும். துவாதசியில் அதிகாலையில் உணவு சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது. 🌹ஏகாதசி விரத மகிமை : ஒருமுறை பார்வதிதேவி, மிகச்சிறந்த விரதம் எது என பரமேஸ்வரனிடம் கேட்டாள். தேவி! ஏகாதசி விரதமே விரதங்களில் சிறந்தது. இவ் விரதம் பாவங்களைப் போக்கும் விரதமாகும். இவ்விரத்தை அனுஷடிப்பவர்கள் அஸ்வ மேத யாகம்செய்த பலனை அடைவார்கள் முப்பத்து முக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரி த்து, விஷணுவின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்ற சிறப்புப் பெயருண்டு. ஏகாதசி நாளில் உணவு இல்லாமல் உப வாசம் இருப்பவர், எல்லாப் பாவங்களில் இருந்தும் முக்திபெற்று மோட்சம் கதியை பெறுவார் என்றார். 🌹சிறப்பு : வைகுண்ட ஏகாதசி அன்று அனைத்து விஷணு ஆலயங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். இந்த விழா அதிகாலை வேளை யில் நடைபெ றும். இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து, சொர்க்க வாசலின் வழியாக வெளியே வருவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் நீங்குவார்கள். மேலும் முக்திக்கான வழி யை அடைவீர்கள். ஏகாதசி விரதமிருப்ப வர்கள் சகல சௌபாக்கியங்க ளையும் அடைவர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. 🌹ஓம் நமோ நாராயணாய.... 🌹29.12.2025... நேசமுடன் விஜயராகவன்.... #💫விஷ்ணு புராணக் கதைகள்🙏🏻 #🔍ஜோதிட உலகம் 🌍 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஏகாதசி🕉️
💫விஷ்ணு புராணக் கதைகள்🙏🏻 - ShareChat