ShareChat
click to see wallet page
search
#🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 #🙏🪔 ஓம் வராகி அம்மா போற்றி 🪔🙏 #வராகி அம்மன் பக்தி பாடல் #அம்மன் #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 வாராஹி கருப்பர் வணக்கம், உலகமக்கள் பொருள் வறுமையும்,அருள் வறுமையும் நீங்கி சகல செல்வங்களும் வாழ.. மக்களுக்காக மடியில் அமர்த்திய தேவியுடன் ஒருகையில் திரிசூலத்துடன் ஒருகையில் பூரணகலசம் ஒருகையில் டமருகம் வரத அஸ்தத்துடன் பூரண பொற்கிடாரங்கள் முன் நிரம்பிய ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரை இமயத்தில் தவமிருந்து தான் கண்ட தரிசனைத்தை மக்களும் பயன் பெறும் பொருட்டு ரூப லட்சணமாக வெளிப்படுத்திய ஸ்ரீ ல ஸ்ரீ துர்க்கை சித்தர் அவர்களின் திருபாத கமலங்களை சிந்தையில் கொண்டு அஸ்வாரூட வாராஹியை பற்றி நான் அறிந்தவரை தொடருகிறேன் அஸ்வாரூட வாராஹி இவளை பற்றிய வழிபாடு மற்றும் பலன்களை பின்பு பார்ப்போம்... முதலில் இவளை ஞான ரூபமாக முதலில் சிந்தித்து நம் சிந்தையில்அமர்த்துவோம் அஸ்வம் என்பது குதிரை மனம் குதிரை வேகம் பெற்றது அதற்கு கட்டுப்பாடு என்ற கடிவாளம் நாம் பிறப்பித்தாலும் அதை நேர்மையாக தர்மத்தின் வழி நடத்த ஒரு இறைத்தன்மை நம்மை இயக்க கட்டாயம் தேவை அந்த தேவதையின் பூரணத்துவமே அஸ்வாரூட வாராஹி வாராஹி அஸ்வத்தின் மீது ஏறி பரிபாலிப்பது அமைதியற்ற நம் மனதைக் கட்டுப்படுத்துவதைக் குறிக்கிறது, மேலும் இந்த ரூப லட்சண வழிபாட்டில் பாதுகாப்பு, வெற்றி மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கான மனோசக்தியை நாம் பெறுகின்றோம் காரிய சித்தி,தடை நிவர்த்தி,சகமனிதர்களுடான நேசம்,மனகட்டுப்பாட்டால் ஆன்மாவும் ஆயுளும் அடையும் சக்தி விருத்தி இந்த அஸ்வாரூட வாராஹியால் பக்தர்களுக்கு கிடைக்கும் இதை கருத்தில் கொண்டே துர்க்கை சித்தர் அவர்கள் நம் நலன் பொருட்டு அவரே எழுதிய பொக்கிஷம் தான் அஸ்வாரூட வாராஹி மாலை இதை தினம் பாராயணம் செய்தல் கேட்டல் என்பது சித்தரின் ஆசீர்வாதங்களை மட்டும் இன்றி அஸ்வாரூட வாராஹி அருளால் செயல் காரிய சித்தியும் மன முன்னேற்றமும் கிடைக்க பெறும் (Youtubeல் அஸ்வாரூட வாராஹி மாலை என தேட பாடல் கிடைக்கும்) மக்கள் ஒரு விசயத்தை விளங்கி கொள்ள வேண்டும் சித்தர்களும் ரிஷிகளும் லோக ஷேமத்தை விரும்பி பல நேரங்களில் இரண்டு வெவ்வேறு நிலைகளை உடைய சக்திகளை ஒருமித்து அதன் மூலம் மக்களுக்கு நன்மை பயக்க வழிபாட்டில் ரகசியமாய்விட்டு சென்று இருக்கிறார்கள். இதை தாந்தீரக சாஸ்திரம் அறிந்தவர்கள் அறிவர் அதன் அடிப்படையில் இங்குள்ள அஸ்வாரூட வாராஹி என்பது அஸ்வாரூடா என்ற தேவியின் ஆற்றலும் வாராஹி ஆற்றலும் ஒரு சேர்மித்த ஆற்றலாகும் ஒரு மனிதனுக்கு சத்ரு செயம்,காரிய விஜயம், பசுஜன வசீகரம் வாக்கு அதிகாரம் மற்றும் ஞானம் என்று இது அத்தனையும் ஒரு முக வழிபாட்டில் கிடைக்கவே வாராஹி வழிபாட்டில் இந்த ரூப லட்சன முறை இது பெரும்பாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் ஆளுமையை எதிரிகளிடம் இருந்து தற்காத்து கொண்டு வெற்றி பெற ஏற்படுத்தப்பட்டது.. இது ரூப லட்சணத்தில் மட்டும் அல்லாது மந்திர தந்திர ஹோம ப்ரயோகமுறையையும் சேர்த்தே ரிஷிகள் பரிமாணம் படுத்தி இருக்கின்றனர் .. இதைப்போலவே தான் மீதமுள்ள வாராஹி ரூபங்களும் இருசக்திகளை ஒன்றாய் கொண்ட ஆதிக்கத்தில் வழிபாட்டில் பிரதிபலிக்கும்.. வேண்டியது கிடைக்க நினைத்தது நடக்க இனி உங்களுக்கு இந்த பரியேறிய பல்லழகி போதும்.. நன்றி. (தொடரும்)
🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 - ShareChat