ஜெகதீஷ் காவ்லேகர் மற்றும் கங்கம்மா ஆகிய இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில், ஜெகதீஷுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
ஜெகதீஷின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலில், அவர் தனது பிரசவத்திற்காகப் பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்த நேரத்தில் ஜெகதீஷ் தனது முன்னாள் காதலியான கங்கம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இது குறித்துத் தெரிந்ததும் தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த மனைவி, பின்னர் கணவரின் பிடிவாதத்தைக் கண்டு அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ளார். இருப்பினும் இவர்களது உறவுக்குக் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமூகத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் குடும்பத்தினரின் நெருக்கடியால் மனமுடைந்த காதலர்கள் இருவரும், மரணத்திற்குப் பின்னரும் பிரியக் கூடாது என்ற எண்ணத்தில் தங்களது உடல்களைத் துணிகளால் ஒன்றாகக் கட்டிக்கொண்டு மல்லப்பிரபா ஆற்றில் குதித்துள்ளனர். புதன்கிழமை அன்று ஆற்றில் சடலங்கள் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தத் தற்கொலைக்குக் குடும்பத்தினரின் சித்திரவதை ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔


