ShareChat
click to see wallet page
search
அண்டை தேசம் #பங்களாதேஷ் அண்டை தேசம்அண்டை தேசம்வங்கதேசத்தில் பிப்ரவரி 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்... வங்கதேச ஜவுளித் துறை நெருக்கடியில் இந்தியாவின் பங்கு ஷேக் ஹசீனா தலைமையில் ஜவுளித்துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்தது, வங்கதேசத்தின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 80% க்கும் மேல் ஜவுளித்துறையே பங்களித்தது... சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளராக வங்கதேசம் உருவெடுத்தது. ஆனால் வீதி யாரை விட்டது? அமெரிக்க ஆசியால் ஷேக் ஹசீனாவை விரட்டி இந்திய விரோத யூனிஸ் ஆட்சி வந்தது * இந்தியாவிலிருந்து நூல் இறக்குமதி செய்ய வங்கதேசம் 5 முக்கிய தரைவழிகளை தடை செய்தது. * இந்தியாவிலிருந்து வரும் அரிசி, மீன் மற்றும் புகையிலை மீது கட்டுப்பாடுகளை விதித்தது. * இந்திய சரக்குகள் வங்கதேசப் பகுதி வழியாகச் செல்வதற்குப் புதிய போக்குவரத்துச் சுங்கக் கட்டணங்களை (Transit Fees) விதித்தது. இதையெல்லாம் பார்த்த பாரதம் நாங்க அமெரிக்காவையே சுருட்டி அக்குள் ல வச்சிடுவோம் நீ என்னடா சுண்டக்கா பயனு ஆட்டத்தை ஆரம்பித்தது... 1. துறைமுகக் கட்டுப்பாடுகள் (Port Restrictions): 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் (RMG) மற்றும் சணல் பொருட்களைக் கொண்டு வர இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்தது... முன்னதாக 76% வர்த்தகம் பெட்ராபோல் (Petrapole) போன்ற தரைவழி எல்லைகள் வழியாக நடந்து வந்தது... ஆனால், இந்தியா இதைத் தடுத்து, கொல்கத்தா மற்றும் மும்பையின் நவா ஷேவா (Nhava Sheva) ஆகிய இரண்டு கடல் துறைமுகங்கள் வழியாக மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதித்தது... இதனால் போக்குவரத்துச் செலவு அதிகரித்ததோடு, 2-3 நாட்களில் நடக்க வேண்டிய வர்த்தகம் வாரக்கணக்கில் தாமதமாகிறது... 2. தரைவழி இறக்குமதித் தடை: சில குறிப்பிட்ட சணல் பொருட்கள் மற்றும் துணி வகைகளை நில எல்லைகள் வழியாகக் கொண்டு வர இந்தியா முழுமையாகத் தடை விதித்துள்ளது. இது வங்கதேச ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 3. 'டம்பிங்' (Dumping) - குறைந்த விலை நூல் விற்பனை: இந்திய அரசு தன் நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்குப் பல்வேறு மானியங்களையும் (Subsidies), குறைந்த வட்டி கடன்களையும் (சுமார் 6%) வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, இந்திய உற்பத்தியாளர்கள் வங்கதேச சந்தையில் அவர்கள் விலையை விடக் குறைவான விலைக்கு நூல்களைக் குவித்து வருவதாக வங்கதேச ஆலை உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வங்கதேச ஆலைகளின் சுமார் 12,500 கோடி டாக்கா மதிப்பிலான நூல் விற்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்... வங்கதேசத்தின் ஜவுளித்துறை (Textile Industry) தற்போது மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வங்கதேச ஜவுளி ஆலைகள் சங்கம் (Bangladesh Textile Mills Association - BTMA) வரும் பிப்ரவரி 1, 2026 முதல் நாட்டில் உள்ள அனைத்து நூல் உற்பத்தி (Spinning) ஆலைகளையும் காலவரையன்றி மூடப்போவதாக அறிவித்துள்ளது. ஆலை உரிமையாளர்கள் தாங்கள் வாங்கிய வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்... "சொத்துக்களை விற்றால் கூட கடனை அடைக்க முடியாது" என்று BTMA தலைவர் ஷவ்காட் அஜீஸ் ரசல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்... #Geopolitics #EconomicPower #modi
பங்களாதேஷ் - ) Go GADESH XA ) Go GADESH XA - ShareChat