கணவன், மகள் என எந்த உறவை பற்றியுமே இந்த பெண் நினைத்து பார்க்கவில்லை.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி அருகே எரங்காட்டு கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம்.. இவருக்கு வயது 47... இவர் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்...
ஆறுமுகத்திற்கு ஜோதி (வயது 45) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 7ம் தேதி வழக்கம்போல் மருந்து கடைக்கு வேலைக்கு சென்ற ஆறுமுகம், அதன்பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை.
நீண்ட நேரமாகியும் அவர் வராததால் குடும்பத்தினர் பதற்றமடைந்தனர். இதையடுத்து கடந்த 9ம் தேதி அவரது மனைவி ஜோதி, தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மெடிக்கல் ஷாப் ஆறுமுகம்
இந்த நிலையில் மதிகோன்பாளையம் தூதரையான் ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சடலம் மாயமான ஆறுமுகம் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
பிறகு அந்த சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது... அதில் ஆறுமுகத்தின் தலையில் பல வெட்டுகாயங்கள் இருந்ததும், கொலை செய்து ஏரியில் வீசப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அபபோதுதான் ஆறுமுகத்தின் மனைவி ஜோதி மீது சந்தேகம் திரும்பியது... எனவே தங்கள் பாணி விசாரணையை ஜோதியிடம் மேற்கொண்டபோது, மொத்த உண்மையையும் சொல்லி விட்டார்..
அதாவது அவரது மருமகன் சீதாராமன் என்பவருக்கு 33 வயதாகிறது... இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். சீதாராமனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஜோதியின் லீலைகள்
ஆனாலும், சீதாராமனுக்கும் ஜோதிக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது... இந்த விவகாரம் தெரிந்ததும் சீதாராமனின் மனைவி கோபித்து கொண்டு, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனாலும் ஜோதியுடனான கள்ளக்காதல் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் சீதாராமன் ஜோதியிடம், உன் மூத்த மகளை எனக்கு திருமணம் செய்து கொடு என என்று வற்புறுத்தி உள்ளார்..
இதனால் ஜோதியும் தன்னுடைய மூத்த மகளை கட்டாயப்படுத்தி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சீதாராமனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்திற்கு ஆறுமுகத்திற்கும் அவரது மகளுக்கும் விருப்பமே இல்லையாம்... அதுமட்டுமல்ல, அப்போதுகூட சீதாராமன் ஜோதியுடன் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஜோதியின் லீலைகள் ஆறுமுகத்துக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.. உடனே மனைவியை கண்டித்தும் உள்ளார்.. இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஆறுமுகத்தை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டார் மனைவி ஜோதி..
உயிருடன் ஏரியில் வீசி
அதன்படி கடந்த 7ம் தேதி ஜோதி, சீதாராமன், அவரது நண்பர்கள் சரவணன் வயது 37, ஜெய்சங்கர் வயது 32, பிரவீன்குமார் வயது 25, முருகன் வயது 26 ஆகியோர் சேர்ந்து ஆறுமுகத்தை கடத்தி சென்றனர். அங்கு கல்லால் தாக்கியதில் ஆறுமுகம் மயக்கமடைந்தார்.
பிறகு ஆறுமுகத்தை அவரை தூதரையான் ஏரியில் வீசி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடும் அதிர்ச்சியும் சோகமும் நிலவி கொண்டிருக்கிறது...!! #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📺ஜனவரி 13 முக்கிய தகவல்😃


