ShareChat
click to see wallet page
search
💞பெற்றோர்களுக்காக துஆ! அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்! அருளாளனே! கருணையாளனே! இன்றைய நாளின் அமல்களை நிறைவேற்ற அருள் புரிந்த உன்னைப் போற்றிப் புகழ்கிறோம். எங்கள் அமல்களை ஏற்றுக்கொள்வாயாக! எங்கள் பாவங்களையும் எங்கள் பெற்றோர் பாவங்களையும் மன்னித்தருள் வாயாக! எங்களுடன் வாழ்கின்ற பொற்றோர்களுக்கு நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளைத் தருவாயாக! அவர்களின் மனம் கோணாமல் அவர்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து அவர்களின் துஆவைப் பெற அருள்வாயாக! எங்கள் பெற்றோர்களில் யார் மறைந்து விட்டார்களோ அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்கள் இருக்கும் மண்ணறையை விசாலமாக்கி கப்ருடைய வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாயாக! சொர்க்கத்தில் அவர்களுடன் நாங்கள் இருக்கும் வாய்ப்பை உருவாக்குவாயாக! رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ  “எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ‏  “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ “என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக!. என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக! அல்குர்ஆன் : 27 : 19 ஆமீன் #📗குர்ஆன் பொன்மொழிகள்
📗குர்ஆன் பொன்மொழிகள் - ~UJ ِةَمخَّألا َنِم َّلُذلا حاَنَج اقُهَل ُضِفْخاو اًريِفَص يِنايَّبَد امَک امٔهفحذا َّبَ لُقَو இறைவனே ٥٥ சிறு பிள்ளையாக இருந்த நான் போது, என்னைப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக! Tyisha அல்குர்ஆன் 17:24 ~UJ ِةَمخَّألا َنِم َّلُذلا حاَنَج اقُهَل ُضِفْخاو اًريِفَص يِنايَّبَد امَک امٔهفحذا َّبَ لُقَو இறைவனே ٥٥ சிறு பிள்ளையாக இருந்த நான் போது, என்னைப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக! Tyisha அல்குர்ஆன் 17:24 - ShareChat