ShareChat
click to see wallet page
search
🌺🌹மனதை கவரும் மரகத நடராஜர்:🌹🌺 💫2026 அருள்மிகு மரகத நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசன விழா: மரகத நடராஜர் மகா அபிஷேகம் 02:01:2026 ஆருத்ரா தரிசனம் 03:01:2026💫 நற்றுணையாவது நமசிவாயவே🙏 🌹பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் என்றால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் மங்கள நாயகி திருக்கோவில். இங்கு தான் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவானது. திருஉத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்புலிங்கம் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது. திருஉத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும் என்று நம்பப்படுகிறது. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும் இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும். அருள்மிகு உத்தர கோசை மங்கையில் தான் முதல் சிவன் கோயில் தோன்றியதாக வரலாறு. இங்கு இருக்கும் நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆன சிறப்புகள் கொண்டது. அந்த நடராஜர் திருப்பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர். ஒளி வெள்ளத்தில் இந்த சிலையைப் பார்க்கும்போது உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும். மேலும் இந்த நடராஜர் சிலையில் என்ன விஷேசம் என்றால் நம் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் போல் அந்த சிலையில் இருப்பதை காணமுடியும்.ஆக இந்த சிலையானது உலக அதிசயத்தில் ஒன்றாக இருக்கிறது. இந்த நடராஜர் விக்ரகம் மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்க இயலாத தன்மை கொண்டது. எனவே இந்த கோவிலில் மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படுவதில்லை. எந்த விதத்திலும் விக்கிரம் சேதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள். இந்த நடராஜர் விக்ரகம் மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்க இயலாத தன்மை கொண்டது. எனவே இந்த கோவிலில் மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படுவதில்லை எந்த விதத்திலும் விக்கிரம் சேதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள். வருடத்திற்கு ஒரு நாள் அதாவது மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் மட்டும் சந்தனக்காப்பு கலைக்கப்படும். அன்று முழுவதும் சந்தனக்காப்பு இல்லாத மரகதக் கல் மேனியால் ஆன நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதனைத்தொடர்ந்து நடராஜர் சிலைமீது சந்தனாதிதைலம் பூசப்பட்ட பின்னர் வெண்ணெய், சந்தனம், குங்குமம், மஞ்சள் திரவியம், தேன், பால், தயிர், இளநீர் உள்பட 32 வகையான அபிஷேகம் நடைபெறும். மேலும் நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதனை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். இதையடுத்து அன்று இரவுசரியாக 12 மணி அளவில் சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டு மீண்டும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனம் பூசப்படும். திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகத நடராஜரைப்பார்க்கலாம். இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும். திருச்சிற்றம்பலம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #god
🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 - Coh Coh - ShareChat