ShareChat
click to see wallet page
search
*டிசம்பர் 20, 1192* மூன்றாம் சிலுவைப்போரை முடித்துக்கொண்டு நாடுதிரும்பிக்கொண்டிருந்த இங்கிலாந்தின் முதலாம் ரிச்சர்ட் அரசர், ஆஸ்திரியாவின் ஐந்தாம் லியோபோல்ட் அரசரால் சிறைப்பிடிக்கப்பட்ட நாள். இவரை விடுவிக்க வழங்கப்பட்ட ஒன்றரை லட்சம் மார்க்குகள் (45 டன் வெள்ளி) உலக வரலாற்றில் வழங்கப்பட்டதிலேயே மிகஅதிகப் பணயத்தொகையாகும். இது அன்றைய இங்கிலாந்தின் ஆண்டு வருமானத்தைப்போல சுமார் மூன்று மடங்குகளாகும். புனித மண்ணை (ஜெருசலேம்), இஸ்லாமியர்களிடமிருந்து மீட்க நடத்தப்பட்டவை சிலுவைப் போர்களாகும். ஜெருசலேம் இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும், ஆனால், புனிதப் பயணிகள், வியாபாரிகள் ஆகிய ஆயுதமில்லாதவர்களை அனுமதிக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்துடன், எகிப்து, சிரியாவின் சுல்தானான சலாதீனும், ரிச்சர்டும் 1192 செப்டம்பர் 02ல், மூன்றாவது சிலுவைப்போரை முடித்துக்கொண்டனர். அங்கிருந்து திரும்பும் வழியில், மோசமான வானிலை காரணமாக, பண்டைய ரோம (தற்போதைய இத்தாலி) நகரமான, அக்வீலியா என்ற இடத்தில் ரிச்சர்டின் கப்பல் தரைதட்டிவிட்டது. வேறு வழியின்றி, சாக்சனி, பவேரியா ஆகியவற்றின் அரசரும், தனது மைத்துனருமான ஹென்றியின் ஆளுகைக்குட்பட்ட பகுதிக்கு, நிலப்பகுதி வழியாக ரிச்சர்ட் பயணித்தபோது, வியன்னா அருகில் லியோபோல்ட் சிறைப்பிடித்தார். சிலுவைப்போரில் ஈடுபட்டவர்களை (ஜெருசலேமிற்கு சென்றுகொண்டோ, திரும்பிக்கொண்டோ இருப்பவர்களைக்கூட) தொந்தரவு செய்யக்கூடாது என்ற விதியினால், லியோபோல்டை போப் மதவிலக்குச் செய்தார். அக்கால வழக்கப்படி, பல அரசர்களால் மாற்றி மாற்றி சிறைவைக்கப்பட்டபின்,  ரிச்சர்ட் புனித ரோமப் பேரரசின் நான்காம் ஹென்றி அரசரால் ட்ரிஃபெல்ஸ் கோட்டையில் சிறைவைக்கப்பட்டு, பணயத்தொகை கிடைத்தபின் 1194 பிப்ரவரி 04ல்தான் விடுவிக்கப்பட்டார். #😎வரலாற்றில் இன்று📰 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
😎வரலாற்றில் இன்று📰 - ShareChat