ShareChat
click to see wallet page
search
லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரன் அறிமுகமான படம் “பராசக்தி” என்றே நினைக்கிறார்கள். ஆனால், 1947ம் ஆண்டு அவர் அறிமுகமான படம் “பைத்தியக்காரன்”. எம்ஜிஆரை போலவே சில காட்சிகளில் எஸ்எஸ்ஆர் நடித்திருப்பார். எஸ்வி. சகஸ்ரநாமம் எழுதிய கதையை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினர். எம்ஜிஆருக்கு ஜோடி மதுரம். இந்த படத்தில் சிஆர். சுப்புராமன் இசையில் “ஜெயிலுக்கு போய் வந்த தேச மக்கள்” என் பாடலை என்எஸ்.கிருஷ்ணன் பாடினார். இந்த பாடலை எழுதியதும் #கவி_காமாட்சி தான். சிறைச்சாலையில் குற்றவாளிகள் தொலைக்காட்சி, செல்போன் உள்ளிட்ட சகல வசதிகளுடன் இப்போது இருப்பதைப் போல, கறிக்கஞ்சி சாப்பிட்டதை 1947ம் ஆண்டே பதிவு செய்த பாடல் இடம் பெற்ற படம் பைத்தியக்காரன் என்பதை மறக்க முடியுமா? #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
😍Old மூவிஸ் - ShareChat
01:28