நடேசன் S
ShareChat
click to see wallet page
@natesan9597
natesan9597
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
🌹🌿குபேர கிரிவலம் − ஓர் சிறப்பு பார்வை🌿🌹 🌹 🌿 ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதத்தில் வருகின்ற தேய்பிறை சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் பூமிக்கு வந்து திரு அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள 7 வது லிங்கமான குபேர லிங்கத்திற்க்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார். பூஜை செய்துவிட்டு இரவு 7 மணியளவில் குபேரபகவானே கிரிவலம் செல்கிறார். அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால் நமக்கு அண்ணாமலையாரின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும். இதன் மூலம் நாம் மற்றும் நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும். நாம் மற்றும் நமது அடுத்த ஏழு தலைமுறைகளும் ஆனந்தமாகவும், சகல செளகர்யங்களுடனும், ஐஸ்வர்யங்களுடனும் நிம்மதியாகவும், செல்வச்செழிப்போடும் வாழும்.கிரிவலம் செல்லும் போது செருப்பு போடக்கூடாது. 🌹 🌿 ஆண்கள் உருத்திராட்சம் மற்றும் வேட்டி − சட்டை (பெண்கள் அவரவர் பாரம்பரிய உடை) அணிந்து சிவ மந்திரங்களை மனதுக்குள் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும். கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம்.தங்கி மறுநாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம். அப்படி செய்தால் குபேரகிரிவலத்தின் பலன் நமக்குக் நிச்சியம் கிடைக்கும். 🌹🌿குறிப்பு:− கிரிவலம் 7வது லிங்கமான குபேர லிங்கத்தில் தொடங்கி ஈசான்ய லிங்கத்தை தரிசித்து விட்டு இராஜகோபுரம் சென்று மீண்டும் இராஜகோபுரத்திலிருந்து வழக்கம்போல கிரிவலம் சென்று இராஜகோபுரத்தை அடையவேண்டும் இதுவே குபேர கிரிவலத்தின் சரியான வழிமுறையாகும். 🌹 🌿 ஒரே ஒரு நாள் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஜோதிட ஆசிரியர் திரு.பி எஸ் பி ஐயா அவர்கள் பல ஜோதிட மாத இதழ்கள் மூலமாக இதை பொதுமக்களுக்குத் தெரிவித்தார். அதுதான் குபேர கிரிவலம்! 🌹 🌿 குபேர கிரிவல நாளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை குபேர லிங்கம் இருக்கும் இடத்தில் வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம். மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும். காலை 11 மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேரலிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். கிரிவலம் செல்லும் போதே அருணாச்சலேஸ்வரரை தரிசித்துவிட்டு செல்லலாம் அல்லது கிரிவலம் முடித்த பிறகும் தரிசித்துவிட்டு செல்லலாம். ஏதாவது ஒரு சூழ்நிலையால் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க முடியாமல் போனாலும் தப்பில்லை. கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும். குபேரலிங்கத்தின் ஆசிகளோடு உண்ணாமலை சமேத அண்ணாமலை அருள் பெறுக!!!* 🌹 🌿 படித்ததை பகிர்ந்தேன் 🙏 நன்றி ஆனந்த தயாளன் #🙏ஆன்மீகம் #🙏கோவில்
🙏ஆன்மீகம் - சிவ G6 ஓம்றமச்சிவாய் ப17 NATESH பொங்கம் ~Aue ಹdla சிவ G6 ஓம்றமச்சிவாய் ப17 NATESH பொங்கம் ~Aue ಹdla - ShareChat
காருக்குள்ள பொண்ணிருக்கு பாத்துக்கோ கண்ணுரெண்டும் பொண்ணு மேல போட்டுக்கோ தேருபோல போகவேணும் கேட்டுக்கோ தேவை என்ன கேட்டு நீயும் வாங்கிக்கோ காட்டுக்குள்ளே கன்னிப்பொண்ணு தன்னந்தனியா வந்து மாட்டிக்கிட்டா #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா
😍Old மூவிஸ் - ShareChat
00:15
தனியாக ஹெலிகாப்டர் வைத்து கொண்ட நடிகை - தமிழ் சினிமாவின் புன்னகை அரசி #கே_ஆர்_விஜயா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ்
😍Old மூவிஸ் - Chxisimas ANo yean | 1Ow VCPy W RMANGHARAMS Chxisimas ANo yean | 1Ow VCPy W RMANGHARAMS - ShareChat
#கே_ஆர்_விஜயாவின் உண்மையான பெயர் தெய்வநாயகி. 11 வயதிலேயே நடிக்க வந்துவிட்டார் தெய்வநாயகி. பழனியில் அம்மன் கோயில் அருகில் ஒரு தமிழ் நாடகத்தில் முதலில் நடனமாடினார். இதைத்தொடர்ந்து வால்பாறை எஸ்டேட், தாராபுரம், காங்கேயம் போன்ற இடங்களில் நாடகங்களில் நடித்தார். அப்போது பழனிக்கு நாடகம் நடத்தவந்த கே.ஏ.தங்கவேலுவிடம், தனது மகளுக்கு நாடகங்களில் நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்டார் ராமச்சந்திர ராவ். தங்கவேலுவும் தன்னை சென்னைக்கு வந்து பார்க்குமாறு அவர்களிடம் கூறினார். அவரைப்போலவே பழனி பொருட்காட்சியில் நாடகம் நடத்தவந்த திரைப்பட நடிகர் எஸ். கே.குமரேசனும் தெய்வநாயகியின் குடும்பத்தை சென்னைக்கு அழைக்க, 1961-ம் ஆண்டின் இறுதியில் அவர்கள் சென்னைக்கு வந்தனர். முதலில் விருதை ந. ராமசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்துகொண்டார் தெய்வநாயகி. சில காலம் நாடகங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த நிலையில், ‘மகளை உன் சமத்து’ என்ற படத்தில் அவருக்கு ஒரு சிறிய வேடம் கிடைத்தது. இதில் எம்.ஆர்.ராதா வரும் காட்சியில் அவருக்கு 2 பக்கமும் 2 பெண்கள் இருப்பார்கள். அதில் ஒருவராக தெய்வநாயகி நடித்தார். படப்பிடிப்பின்போது ‘உன் பெயர் என்ன?’ என்று எம் ஆர் ராதா கேட்டார். அதற்கு தெய்வநாயகி என்று அவர் பதில் சொல்ல, ‘ இதெல்லாம் ஓல்டு மாடல். சினிமாவுக்கு எடுபடாது. விஜயா, கிஜயா இப்படி ஏதாவது பெயர் வச்சுக்கோ’ என்றார் எம் ஆர் ராதா நீங்களே ஒரு பேர் வைங்க என்றார் தெய்வநாயகி. அப்போது தெய்வநாயகிக்கு எம்.ஆர்.ராதா வைத்த பெயர்தான் #கே_ஆர்_விஜயா. #😍Old மூவிஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ்
😍Old மூவிஸ் - ShareChat
#பாடகி_வாணி_ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்தவர் இவர். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வேலூரில் பிறந்து வளர்ந்த இவர், வேலை பார்த்தது வங்கி ஊழியராக... வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்ற இவரது திறமையை அடையாளம் கண்டு கொண்டது ஹிந்தி திரையுலகம். பின்பு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி,மராத்தி, ஒடியா என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பாடிய பல மொழிகளில் அம்மாநிலத்தின் உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார். கிராமிய பாடலாக இருந்தாலும் சரி, கர்நாடக பாடலாக இருந்தாலும் சரி, பாடலின் நயங்களால் மக்களை அந்த இடத்திலிருந்தே உணர வைப்பதில் வல்லவர். தமிழக இசை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர். காதல் பாடலாக இருந்தாலும், பெண்களின் மனதை வெளிப்படுத்தும் பாடலாக இருந்தாலும் , டூயட் பாடலாக இருந்தாலும், அந்த காதாபாத்திரமாகவே மாறி பாடக்கூடியவர். இந்நாளில் அவருடைய சிறந்த பாடல்கள் சிலவற்றை பார்ப்போம். நித்தம் நித்தம் நெல்லு சோறு! தமிழ் ரசிகர்களால் மறக்கவே முடியாத பாடல் இது. பாடல் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை அப்படியே ஒரு கிராமத்து பெண் பாடுவது போலவே பாடி முடித்திருப்பார். இந்தப்பாடலை கேட்டு முடித்த பிறகும் அதிலிருந்து மீண்டு வர சில நேரம் ஆகும். அப்படியான இசையும், குரலும், வரிகளும் பின்னிப் பிணைந்து இருக்கும். "பச்சரிசி சோறு.. உப்பு கருவாடு... சின்னமனூரு வாய்க்கா செலு கொண்ட மீனு குருத்தான மொல கீற வாடாத சிறு கீற நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது அள்ளி தின்ன ஆச வந்து என்னை மீறுது" என இளையராஜாவின் இசையில், கங்கை அமரனின் வரிகளில் மனதை மயக்கும் பாடல் இதோ! மல்லிகை என் மன்னன் மயங்கும்.... கணவனுக்கு பிடித்த மல்லிகை பூவை சூடிக்கொள்ளவா ? என மனைவி கேட்டு பாடும் பாடல் இது. "குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி கொஞ்சிப் பேசியே அன்பை பாராட்டுது என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம் தான் கையோடு நான் அள்ளவோ" என மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் கவிஞர் வாலி எழுதிய பெண்களின் மனம் கவர்ந்த பாடல் இதோ! என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்... ஒரு பெண் காதல் வயப்படும்போது உணரும் உணர்ச்சிகளை குரலிலேயே தந்து அசத்தியிருப்பர் வாணி ஜெயராம். ரோசப்பூ ரவிக்கைக்காரி படத்தில் வரும் இப்பாடல் காட்சிக்கு பின்னே ஓடும். ஆனால் கதாநாயகியின் உணர்ச்சிகளை பாட்டு வெளிப்படுத்தும். "என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம் ஏன் கேட்கிறது ஏன் கேட்கிறது ஆனால் அதுவும் ஆனந்தம்" என தொடங்கும் இப்பாடல் கவிஞர் புலமைப்பித்தன் எழுதி இசைஞானி இளையராஜா இசையமைத்ததாகும். ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்! வாணி ஜெயராம் அவர்கள், இந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். அபூர்வ ராகங்கள் படத்தின் டைட்டில் சாங் இது. இந்த பாடல் தவிர்த்து, கேள்வியின் நாயகனே பாடலும் வாணி ஜெயராம் பாடியதுதான். படத்தின் முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் வாணி ஜெயராமிடம் இயக்குநர் ஒப்படைத்திருக்கிறார் என்றால் பாருங்கள், அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் அளவுகோலை! இந்த பாடலை தத்துவப் பாடல் என்றே சொல்லலாம். கவிஞர் கண்ணதாசனின், "ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்" என்ற வரிகளில், எம்.எஸ்.விசுவநாதன் இசையில் அந்த பாடல் இதோ! என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்! காதலனை பார்த்து உருகி பாடும் பாடல் இது. காதலை கூறும்போது வெட்கத்துடன் நளினத்துடன் கூறுகிறாள் இந்த நங்கை. அது வேறு யாருமல்ல நம் பாடகி தான். "உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம் உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு மாலையும் அதிகாலையும் நல்ல சஙீதம் தான்………" என இளையராஜாவின் இசையில் நனைந்திட அப்பாடல் இதோ! வேறு இடம் தேடி போவாளோ? பாடல்களில் பல்வேறு உணர்ச்சிகளை கொடுப்பவர் வாணி ஜெயராம் என்று முன்பே கூறியதற்கு உதாரணம் இப்பாடல். இயலாமையில், வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் பெண்ணின் மனக்குரலை பதிவு செய்திருக்கிறார். உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் மனதை கணமாக்கும். "சிறு வயதில் செய்த பிழை சிலுவையென சுமக்கின்றாள் இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ மலரெனவே முகிழ்ப்பாளோ" என்ற ஜெயகாந்தனின் கனத்த வரிகளோடு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அந்த பாடல் இதோ! தனிப்பாடல்கள் தவிர டூயட் பாடல்களை முன்னணி பாடகர்களோடு பாடியிருக்கிறார். "ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்", "பாரதி கண்ணம்மா", "பூந்தென்றலே...", "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்" என இவர் பாடிய ஒவ்வொன்றும் முத்து முத்தனாவை. இவ்வளவு சிறந்த பாடல்கள் பலவற்றை கொடுத்த #வாணி_ஜெயராம் அ .அருணசுபா #வாணி ஜெயராம் #பின்னணி பாடகி வாணி ஜெயராம் #இசைவாணி வாணி ஜெயராம்
வாணி ஜெயராம் - 1 Laror3 - இசைக்குயில் NATESH ஸீவர ஏபணி வாணி ஜெயராம் 1 Laror3 - இசைக்குயில் NATESH ஸீவர ஏபணி வாணி ஜெயராம் - ShareChat
“மல்லிகை என் மன்னன் மயங்கும்” வாணி ஜெயராம் ஏற்கனவே எஸ் எம் சுப்பையா நாயுடுவால் தமிழ் திரைக்கு அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், அவர் எம்.எஸ்.வி இசையில் பாடிய இந்த பாடல்தான் அவரின் புகழை சிகரம் தொட வைத்தது. மல்லிகையின் நறுமணத்தை மெல்லிசையில் உணரச் செய்யும் மெட்டு. கோபத்தில் இருக்கும் கணவன் இப்பாடலினூடே கொஞ்சம் கொஞ்சமாக மகிழ்வான மனநிலைக்கு வருவான். புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவும், முத்துராமனும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். பல்லவியில் பாங்கோஸும் சரணத்தில் தபலாவும் அருமையாக பயன்படுத்தப் பட்டிருக்கும். பாடலின் சரணத்தில், ‘வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது’ என்ற இடத்தில் தபேலாவின் தாளக்கட்டு கிறக்கம் கொள்ள வைக்கும். “குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி கொஞ்சிப் பேசியே அன்பை பாராட்டுது என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம் தான் கையோடு நான் அள்ளவோ” என்று வாணி ஜெயராம் பாடும்போது நாமும் சற்று மயங்கித்தான் போகிறோம். வாலியின் சங்கத் தமிழை ஒத்த வரிகளுக்கு தன் இனிய மெட்டாலும் பின்னணி இசையாலும் நறுமண தைலம் பூசியிருப்பார் மெல்லிசை மன்னர். ——————— படம்: தீர்க்க சுமங்கலி (1974) இசை: M S விஸ்வனாதன் குரல்: வாணி ஜெயராம் வரிகள்: வாலி #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
🎬 சினிமா - ShareChat
01:30
பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா – மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா – மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
😍Old மூவிஸ் - பெற்றவள்உடல் சலித்தாள்பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன்கை Bcuurgtrsortoun சலித்து டும் பாவி ஒருதாய் క வயிற்றில் பிறவேனம்மா மீண்டும் பாவிஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா பெற்றவள்உடல் சலித்தாள்பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன்கை Bcuurgtrsortoun சலித்து டும் பாவி ஒருதாய் క வயிற்றில் பிறவேனம்மா மீண்டும் பாவிஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா - ShareChat
தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவை ஹீரோ #டி_ஆர்_ராமச்சந்திரன் டி. ஆர். ராமச்சந்திரன் இன்னிய யூத்-களுக்கு தெரியாத பெயர் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகரான இவர் கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனா கவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது. 1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர் டி.ஆர். அதிலும் செல்வந்தர் குடும்ப இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர். ஒரு விதமான பதற்றம் கலந்த இவரது நகைச்சுவை உணர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டது. இன்னும் சொல்லப் போனால் காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கி வைத்தவர் இந்த ரியல் டி.ஆர்-தான். இவர் ஹீரோவாக நடித்த, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில் சிவாஜியே செகண்ட் ஹீரோதான். அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால், டி.ஆர்க்கு ஜோடி ராகினி. மேலும் வைஜெயந்திமாலா, அஞ்சலி தேவி, சாவித்ரி எனப் பல முன்னணி கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கவில்லை. அப்போது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’, அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். மேலும் ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார். 1941-ல், மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில் வெளியான சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். ராமச் சந்திரனின் புகழும் பரவியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த ராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949) என்ற வெற்றிப் படத்தில் வைஜயந்திமாலாவுக்கு ஜோடியாக நடித்தார். ஒருப் படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாள்வீச்சு தெரிந்திருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகளை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர். (தகவல் திரட்டு : கட்டிங் கண்ணையா) சபாபதி படத்திற்காக 140 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட இப் படம் வெற்றிப் படமாகி பெரும் புகழ் தந்தது. இந்தப் படத்தில் 5 பாடல்களை சொந்தக் குரலில் பாடினார் டி.ஆர். சபாபதி படத்திற்கான மொத்த பட்ஜெட் 32,000 ரூபாய். டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்களில் இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல் படமாக அமைந்தது. வாழ்க்கை (1949) படத்தில் நடித்த வைஜெயந்தி மாலாவுக்கு அதுவே முதல் படமாக அமைந்தது. வானம்பாடி (1963) படத்தில் “யாரடி வந்தார் என்னடி சொன்னார்’ என்ற பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம் ஜோதிலட்சுமி, தனது முதல் திரைப்பயணத்தை துவங்கினார். வித்யாபதி (1946) படத்தில்தான் முதன் முதலாக எம்.என்.நம்பியார் அறிமுகமானார். சகடயோகம் படமே வி.என்.ஜானகி நாயகியாக நடித்த முதல் படம். பொன்வயல் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில் பாடினார். தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்கிய முதல் படம் சபாபதி (1941) (செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர் ஏ.டி.கிருஷ்ணசாமி). திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின், அமெரிக்காவில் தன் மகள்கள் ஜெயந்தி, வசந்தி ஆகியோருடன் வசித்து வந்தார். 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானார். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது. #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
🎬 சினிமா - ^AzSAN ^AzSAN - ShareChat
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் #கார்த்திகை தீப திருநாள்
கார்த்திகை தீப திருநாள் - Nemwjot ಯlaol SnlfMLReAw NATESH Nemwjot ಯlaol SnlfMLReAw NATESH - ShareChat