*🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹*
*யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.*
*புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.*
*ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.*
*ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர்.*
*நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.*
(திருப்பாடல் 33: 2-3. 11-12. 20-21)
*✝️ஜெபிப்போமாக :🛐*
*எல்லாம்வல்ல எம் ஆண்டவரே! சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றவரே! வலிமை இழந்தோர்க்கு ஊக்கம் அளிப்பவரே! உம்மை வாழ்த்தி, போற்றி, ஆராதித்து வணங்குகின்றோம்.*
*ஒரு தாய், தன் சேயை அன்போடு நோக்குவது போல், கடந்த இரவு முழுவதும் எங்கள் அருகில் இருந்து, எங்களை உள்ளன்போடு உற்று நோக்கியவரே! உமக்கு நன்றி அப்பா! மற்றொரு புதிய நாளை எங்களுக்கு வாய்ப்பாகக் கொடுத்து இருக்கிறீர். உமக்கு நன்றி ஆண்டவரே!*
*இறைவா! உதவி தேவைப்படுவோரை நான் அறிந்திருந்தும், அறியாதது போல இருந்த தருணங்களுக்காக மனம்வருந்தி மன்னிப்பு கேட்கின்றேன்.*
*பிறரன்பு சேவையில், அன்னை மரியாளை நான் பின்பற்ற அருள் புரிவீராக. எனக்கு தேவைகள் பல இருப்பினும், நான் வாழ்வியல் துன்பங்களில் இருந்தாலும், பிறருக்கு உதவிகள் புரிவதில் அன்னை மரியாளைப் போல ஆவலோடும், முழு அர்ப்பணிப்போடும் செயல்பட அருள் புரிவீராக.*
*இறைவா! இன்று சிறப்பாக, தேவையில் இருப்போருக்காக வேண்டுகிறேன். அவர்களுக்கு குறித்த நேரத்தில் உதவிகள் கிடைத்திட பிராத்திக்கின்றேன்.*
*இறைவா! இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். என்னைக் காத்து வழிநடத்துவீராக.*
*ஆமென்.* #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு


