ShareChat
click to see wallet page
search
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஏழாம் தந்திரம் - 11. சிவபூசை* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஏழாம் தந்திரம், திருமூலரால் அருளப்பட்ட பத்தாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இது ஆன்மிகப் பாதையில் உயர்ந்து, சகஸ்ரார தாமரையை அடைந்து, சிவனுடன் ஐக்கியமாகும் "தாங்கும் மந்திரம்" பற்றிய ஆழமான ஞானம், யோகப் பயிற்சிகள், பஞ்சாக்ஷர மந்திரத்தின் நுட்பங்கள், மற்றும் பிரம்மன், திருமால் போன்ற ஐம்பெருந்தேவர்களின் தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியது. இது யோகத்தின் உச்ச நிலையையும், சிவபெருமானின் அருளையும் விளக்கும் மிக உயர்ந்த தத்துவ நூலாகும் *ஏழாம் தந்திரத்தில் உள்ள 11-ஆம் பகுதி "சிவபூசை" என்பது, புறப்பூசையை விட அகப்பூசைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது; அதாவது, ஐந்து புலன்களை வென்று, மனதை அடக்கி, உள்ளுக்குள் சிவத்தை உணர்ந்து, அகத்திலும் புறத்திலும் சிவனை வழிபடுவது எப்படி என்பதைக் குறிக்கிறது;* *மலர் தூவி, சலம் (நீர்) படைத்து வழிபடுவதோடு மட்டுமல்லாமல், மனதை உறுதியுடன் நிறுத்தி, இறைவனின் அருளால் பூசை பலிக்க வேண்டுமென வேண்டி, முடிவில் 'சிவ சிவ' என இறைவனைத் தொழுவதே உண்மைப் பூசை என திருமூலர் விளக்குகிறார்*. பாடல் வரிகள் : *11. சிவபூசை* 1823 உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. 1 1824 வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும் ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும் பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே. 2 1825 பான்மொழி பாகன் பராபரன் தானாகும் ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே. 3 1826 நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால் கனைகழல் ஈசனைக் காண அரிதாம் கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார் புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. 4 1827 மஞ்சன மாலை நிலாவிய வானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோடும் அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே. 5 1828 புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை நண்ணறி யாமல் நழுவுகின் றாரே. 6 1829 அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள் ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச் சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே. 7 1830 மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும் சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் அமரர் பிரானே. 8 1831 ஆரா தனையும் அமரர் குழாங்களும் தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும் பேரா யிரமும் பிரான்திரு நாமமும் ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே. 9 1832 ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத் தான்அந்த மில்லாத் தலைவன் அருளது தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர் பார்ஐங் குணமும் படைத்துநின் றானே. 10 1833 உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர் தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப் பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே. 11 1834 வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார் அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே. 12 1835 கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள் பழிப்படு வார்பல ரும்பழி வீழ வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே. 13 1836 பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப் பயனறி வார்க்குஅரன் தானே பயிலும் நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே. 14 1837 ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன் மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே. 15 1838 தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும் பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள் நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே. 16 1839 உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப் பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே. 17 1840 வென்று விரைந்து விரைப்பணி என்றனர் நின்று பொருந்த இறைபணி நேர்படத் துன்று சலமலர் தூவித் தொழுதிடில் கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே. 18 1841 சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும் ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றக்கான் மாத்திக்கே செல்லும் வழியது வாமே. 19 1842 ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புற மேவித் திரியும் விரிசடை நந்தியைக் கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத் தாவிக்கு மந்திரம் தாமறி யாரே. 20 1843 காண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம் காணும் அளவும் கருத்தறி வாரில்லை பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு மாணிக்க மாலை மனம்புகுந் தானே. 21 1844 பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள வருந்தன்மை யாளனை வானவர் தேவர் தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே. 22 1845 சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும் அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும் அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே. 23 1846 ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது ஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டா ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர் ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே. 24 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
00:16