ShareChat
click to see wallet page
search
“சந்தோஷத்தின் வழி’ 1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால் தான் சித்திரம். 2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள். 3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள். 4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள். 5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள். 6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள். 7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக் கொள்ளுங்கள். 8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால் கூட! 9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி! 10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள். 11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்து விடாதீர்கள். 12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு. 13. திருடாதீர்கள். 14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள். 15. சொன்ன வாக்கை மீறாதீர்கள். 16. “சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். 17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழ வேண்டும்! 18.அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள். 19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக் கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள். 20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள். 21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது,அள்ளிக் கொடுங்கள். ஏனென்றால் நாம் போகும் போது சிறிதும் அள்ளிச் செல்ல முடியாது . 😊😊😊 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்#
கதை சொள்ளரோம் - . 0 BEB . 0 BEB - ShareChat