நாம் பாரம்பரியமாகச் சாப்பிடும் இட்லி, தோசை போன்றவை சிறந்த உணவுகள் என்றாலும், அவற்றை மட்டுமே தினமும் உண்பது ஆரோக்கியத்திற்குப் போதுமானதல்ல. குறிப்பாக வளர்ந்தவர்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் காலை உணவில் மாவுச்சத்தைக் குறைத்து, புரதச்சத்தை அதிகரிக்க வேண்டும் என டாக்டர் சிவராமன் வலியுறுத்துகிறார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு நாம் காலை உணவை எடுத்துக்கொள்ளும் முறை பற்றி அவர் பேசிய வீடியோ தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
பயறு வகைகள்: சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பருப்பு
காய்கறிகள்: கேரட், பீன்ஸ் போன்ற நறுக்கிய காய்கறி துண்டுகள்
முட்டை: புரதத்திற்காக இரண்டு முட்டைகள்
சைவப்பிரியர்களுக்கு: முட்டைக்கு மாற்றாக பன்னீர் அல்லது பால்
சிறுதானியங்கள்: கருப்பு உளுந்து அல்லது மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்த இட்லி/தோசை
செய்முறை:
புரதச்சத்து நிறைந்த சுண்டல்: முதல் நாள் இரவே ஊறவைத்த சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பருப்பை வேகவைத்து, குறைந்த அளவு எண்ணெய் மற்றும் தாளிப்பு சேர்த்து சுண்டலாகத் தயார் செய்து கொள்ளவும்.
காய்கறி கலவை: காய்கறிகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேகவைத்தோ அல்லது சூப் செய்தோ எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகளை வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் சூப் போலப் பருகுவது அதிகச் சத்தைக் கொடுக்கும்.
முட்டை/பன்னீர் சேர்த்தல்: அசைவம் சாப்பிடுபவர்கள் இரண்டு முட்டைகளை ஆம்லெட் போட்டோ அல்லது வேகவைத்தோ சேர்த்துக் கொள்ளலாம். முட்டை சாப்பிடாதவர்கள் பன்னீர் போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். #💪Health டிப்ஸ் #🏋🏼♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #உங்கள் ஆரோக்கியம்....இதோ


