தங்கம் விலைதான் இப்படி என்றால் வெள்ளி விலையும் ஏட்டிக்கு போட்டியாக தற்போது உயர்ந்து வருகிறது. என்னதான், தங்கம் வெள்ளி போட்டிக்கொண்டு உயர்ந்தாலும் மக்களுக்கு அதன் மீதான ஆர்வம் குறைந்தபாடில்லை. தங்க நகைகளை வாங்க ஆர்வத்துடன் நகை கடைக்கு செல்வதையே பார்க்க முடிகிறது. இதனால், வாடிக்கையாளர்களை கவர நகைக்கடைகளும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன.
100 சதவீதம் தள்ளுபடி ஆஃபர்
அந்த வகையில், சேலத்தில் உள்ள ஒரு நகைக்கடை வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் ஒன்றை அறிவித்தது. அதை நம்பி போனவர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏவிஆர் ஸ்வர்ண மகால் என்ற நகைக்கடை உள்ளது.
உலகில் ஊழல் குறைவான நாடுகள் லிஸ்ட்.. இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா? முதலிடத்தில் சர்ப்ரைஸ்
இந்த கடையில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்கினால் செய்கூலி, சேதாரம் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று கடை சார்பாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாகவும் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.
கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டம்
இதனை அறிந்த வாடிக்கையாளர்கள், 100 சதவீதம் தள்ளுபடி என்பதால் பிற்பகல் முதலே குவிய தொடங்கினர். மாலை 6 மணியளவில் கடை முன்பாக கூட்டம் கூட தொடங்கியது. கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், கடையின் உரிமையாளர், ஷட்டரை இழுத்து மூடிவிட்டு சென்றுவிட்டார். இதனால் தள்ளுபடி விலையில் தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
வாடிக்கையாளர்கள் ஆதங்கம்
தொடர்ந்து கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இது குறித்து கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், "காலையில் 11 மணிக்கே நாங்கள் வந்தோம். அப்போது எல்லா நகைகளும் விற்று தீர்ந்துவிட்டன. எல்லாரும் டோக்கன் போட்டுவிட்டு போய்விட்டார்கள். உள்ளே கலெக்ஷனே இல்லை.
Lottery ticket: 16 ஆயிரம் கோடி.. வாழ்க்கையை புரட்டி போட்ட லாட்டரி! 10 தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம்
பாதி பேர் வெளியே வரும் போது ஷட்டரை பூட்டிவிட்டார்கள். நகையை அடைமானம் வைத்து அதில் கிடைத்த பணத்தை வைத்து வாங்க வந்தோம். திருவண்ணாமலையில் இருந்து பஸ் பிடித்து வந்தால் கடையில் டோட்டல் வேஸ்ட்" என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். #📺டிசம்பர் 27 முக்கிய தகவல் 📢 #💃🕺அதிரடி ஆஃபர் #


