👉 முடியும் 👈
துன்பங்களை கடந்தால் தான்
இன்பங்களை தொட முடியும்...!!
வறுமைகளை கடந்தால் தான்
வரலாறு படைக்க முடியும்...!!
வெறுமைகளை கடந்தால் தான்
பொறுமைகளைத் தொட முடியும்...!!
வெற்றுப் பேச்சுக்களை
கடந்தால் தான் வெற்றி காண முடியும்...!!
தோல்விகளை கடந்தால் தான்
தோற்றம் காண முடியும்...!!
ஏமாற்றங்களை கடந்தால் தான்
ஏற்றம் பெற முடியும்...!!
ஆசைகளை கடந்தால் தான்
ஆச்சர்யத்தை காண முடியும்...!!
சங்கடங்களை கடந்தால் தான்
சந்தோசங்களை காண முடியும்...!!
வீழ்ச்சிகளை கடந்தால் தான்
மகிழ்ச்சிகளை காண முடியும்...!!
சில கஷ்டங்களை கடந்தால் தான்
ஞானம் பெற முடியும்...!!
கஷ்டங்களை கடந்தால் தான்
காலம் தாண்டி வாழ முடியும்...!!
துரோகிகளை கடந்தால் தான்
துணிச்சல் பெற முடியும்...!!
விரோதிகளை கடந்தால் தான்
வினோதம் காண முடியும்...!!
எதிரிகளை கடந்தால் தான்
மாதிரிகளாய் வாழ முடியும்...!!
சிரமங்களை கடந்தால் தான்
சிகரங்களைத் தொட முடியும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,


