#🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #💫விஷ்ணு புராணக் கதைகள்🙏🏻 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🌾 🌻#தினம்_ஒரு_திருப்பாவை🌻 🌾
🌷#பாடல்_28 :🌷
"கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்,
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை - ஏலோர் எம்பாவாய்!"
🌺 #விளக்கம் :🌺
நாங்கள் பசுக்களின் பின்னேயே சென்று காட்டை அடைந்து உடம்பை வளர்ப்போம். மேலும், நாங்கள் சிறிதும் புத்தியில்லாத இடைக் குலத்திலே பிறந்து உன்னை எங்களுடைய பிறவியாகப் பிறக்குமளவு புண்ணியம் உடையவர்களாய் இருக்கிறோம்.
ஒரு வகையாலும் ஒரு குறையும் இல்லாமலிருக்கிற கோவிந்தனே! உன்னோடு எமக்கு உள்ள உறவு நீக்க முடியாதது.
சிறு பெண் பிள்ளைகளாய் இருக்கிற நாங்கள், உன்னிடத்திலுள்ள பக்தியினால் உன்னைச் சிறு பேரை இட்டு அழைத்தது பற்றி அருள் கொண்டு கோபியாது இரு. தலைவனே! எங்களுடைய நோன்புக்கு வேண்டிய பறையைத் தருவாயாக!.
ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்!!!.
💐💐💐💐K. R💐💐💐💐🙏🙏


