##ஆன்மீக தகவல்கள் 🕉️ #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 ராம பக்த அனுமன்
************************
" யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்."
எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண் களி ல் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிரு ப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்து கொள் " என்பது இதன் பொருள்.
அஞ்சனை மைந்தனாம் அனுமனை வழிப டுவ தால் நமது உள்ளத்தில் நேர்மை, தூய் மை, தியாகம், பக்தி, எளிமை, அடக்கம் என்ற உயர் ந்த குணங்கள் உருவாகி, நம் மை உயர்த்துகி ன்றன என்று சாஸ்திரங்க ள் கூறுகின்றன..
எங்கெல்லாம் ராம நாமம் ஜபிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இருந்து கொண்டு நாம கீர்த்தனத்தைக் கேட்கும் சுகத்தில் திளைப்பவர் ஆஞ்சநேயர்.
சூரிய பகவானின் சஞ்சாரத்தை பின்பற் றியே ஓடிக் கொண்டு நான்கு வேதம் ஆறு சாஸ்திரம் அறுபத்து நான்கு கலைகளை கற்றறிந்த பேர றிவாளன் ஸ்ரீ இராம பக்த ஹனுமான்.
அனுமன் சர்வ தேவதைகளின் வடிவம். எல்லா தேவதைகளும் அவருள் அடக்கம். இராம நாம மகிமையினையும் தூய பக்தி மற்றும் ஞானத் தையும், உயர்ந்த பக்தி நெறி நின்ற வாழ்வை யும் உலகிற்கு எடு த்துக்காட்ட சிவபெருமானே அனுமனாக அவதரித்தார்.
வாயு புதரன், அஞ்சனையின் அருந்தவ புதல்வ ன் அனுமன். சீதா மாதாவினால் சிரஞ்சிவி பட்டம் பெற்ற நித்திய பிரம்மச்சாரி மாருதி.
அண்ணனால் விரட்டப்பட்ட சுக்ரீவனையும் சீதா தேவியை பிரிந்து அன்னையை தேடி வந்த இராமரையும் நண்பர்களாக்கியவன் சொல்லின் செல்வன் அனுமன்.
தென்னிலங்கை சென்று தேவியைக் கண் டு கணையாழி கொடுத்து சீதா மாதாவின் துயர் தீர்த்து சூடாமணி பெற்று வந்த வீர தீரன் ஹனுமந்தன்
இலக்குவன் மயங்கிக் கிடந்த போது சஞ்சிவி கொணர்ந்து அண்ணல் துயர் தீர்த்தவன் சங்கடஹரன். யுத்த களத்தில் இராம லக்ஷ்ம ண்ருடன் தோளோடு தோள் சேர்ந்து போரிட்டு வெற்றி பெற செய்தவன் அனுமன்.
இராம தூதனாக சென்று இராவணனுக்கு அறம் உரைத்து , கற்பரசி சீதையை கவர் ந்து வந்த பாபத்திற்காக குலமெல்லாம் பூண்டுட னே கரியுமென சாபமிட்டவன் ஆஞ்சனேயன்.
இலங்கையை தன் வாலிலிட்ட தீயால எரி த்து அழித்தவன் பஜ்ரங்கபலி.
"அரக்கன் அனுமன் வாலுக்குத்தான் தீவைத்தான் அனுமன் தீ வைத்தான் இலங்கைத் தீவைத்தான்"
"காகுத்தன் அருள் கொண்டு கதையதனை கையில் கொண்டு கஷ்டங்களை போக்கடிக் கும் கர்ம வீரன் சுந்தரன் அனுமன்."
பட்டாபிராமன் புகழைப் பாடிப் பாடி கால மெல் லாம் பரந்தாமானருளால் பரமபதம ளிப்பவன் கதைதனை கையில் கொண்து கிங்கிணியை வாலில் கொண்டு ராம் ராம் என்று சொல்லும் ராம பக்தன் அனுமான். பஞ்ச பூதங்களையும் வசப்படுத்தியவர் ஆஞ்சநேயர்.
புத்திர பாசத்தினால் வாயுவையும் ஆகாய த் தில் பறந்து பெருங்கடலைத் தாண்டிய தால் ஆகாயம், சமுத்திரம் இரண்டையும், பூமியை பிறப்பிடமாகக் கொண்டதுடன் பூமாதேவியின் மடியில் அவதரித்து சீதா தேவியின் பூரண அருள் பெற்றதால் பூமி யையும் வசப்படுத்திய வர் இவர்.
இராவணனின்ஆணைப்படி இவர் வாலில் வைக்கப்பட்ட நெருப்பினால் இலங்கை யையே அழித்தவர். நெருப்பும் இவர் வசமானது. இதனால் 'அஞ்சிலே ஒன்று பெற்றான்' என்கிறார் கம்பர்.
பூத பிசாசங்கள் முதலிய தீய சக்திகள் அனும னின் பெயர் கேட்ட மாத்திரத்தித்தி லேயே நடு நடுங்கி ஒழிந்து போகும்.
கோரிய வரங்களை தடையின்றி தந்தரு ளும் அனுமன் எல்லா மதத்தவர்களாலும் வழிபடப் படுகின்ற ஒரு தெய்வம். அவரை வழிபடுவதா ல் எல்லாப் பிணிகளும் நீங்கி வாழ்வில் வெற்றி சேருமென்பதில் ஐயமில்லை.
புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், பயமற்ற மனோ உறுதி, உடற்பிணிகள் இல்லாமை, இவற்றுட ன் உயர்ந்த நாவன்மையும் அனுமனை வழிப டுவோருக்கு அமையும்


