#🙏 ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🕉️ சிவன் வீடியோ ஸ்டேட்டஸ்🙏🙏 திறக்கும் சிவபெருமானின் ஒரே திருத்தலம்!!!
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்,தலக்காடு,
மைசூரு, கர்நாடகா.
மிகவும் புராதன சிவன் கோவிலான தலக்காடு வைத்தீஸ்வரன் கோவில் காவிரியின் இடது பக்க கரையில் உள்ளது. பெங்களுரிலிருந்து 185 கி.மீ தூரத்திலும், மைசூரிலிருந்து 45 கி.மீ தூரத்திலும் உள்ள இக்கோவில் மணற்குன்றுகள் (sand dunes) நிறைந்த இடத்தில் உள்ளது.
ஒரு காலத்தில் இங்கு முப்பதிற்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்ததாக கூறப்பட்டிருந்தாலும் தற்போது மணலுக்குள் புதைந்து விட்டன.
தலக்காடு வரலாற்றில் ஒரு புராதன நகரம் என்பதில் சந்தேகம் இல்லை. 11 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் ஆட்சி செய்ததாகவும், 12 ஆம் நூற்றாண்டளவில் ஹோய்சால அரசர்களும், பின்னர் விஜயநகர சாம்ராஜ்யம் மற்றும் மைசூர் அரசர்களின் ஆட்சியின் கீழும் இருந்ததாக வரலாறு கூறுகின்றது..
கட்டடக்கலையின் சிறப்பம்சமாக இந்த கோவிலை கருதமுடியும். கோவிலில் சிற்பக் கலைஞர்கள் தங்கள் திறமையை சிறப்பாக காட்டியுள்ளார்கள்.
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவில்களில் தான் சொர்க்க வாசல் திறப்பது போல மைசூரு , தலக்காடு வைத்திய நாதர் கோவிலில் பொங்கலன்று கைலாய வாசல் திறக்கப்படுகிறது.
சோமதத்த முனிவர் கைலாய பதவி பெற விரும்பி சிவனை வழிபட்டார். கனவில் தோன்றிய சிவன் சோமா கஜாரண்யம் என்னும் காட்டிற்கு சென்று என்னை பூஜித்து வா எண்ணம் நிறைவேறும் என்றார். யானைகளின் இடையூறால் முனிவரால் தவம் செய்ய முடியவில்லை. எனவே தானும் ஒரு யானையாக மாறி தவம் செய்து வந்தார்.
ஒரு நாள் தலா காடன் என்னும் வேடர்கள் யானை வேட்டைக்கு வந்தனர். யானை வடிவில் இருந்த முனிவருக்கு குறி வைத்தனர். ஆனால் அம்பு குறி தவறி ஒரு புற்றில் விழுந்தது. அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. அப்போது அசரீரியாக சிவன் வேடர்களே இந்த புற்றில் லிங்க வடிவில் நான் இருக்கிறேன். அம்புபட்ட என் மேனியில் ஏற்பட்ட காயம் தீர மூலிகை மருந்திடுங்கள் என்றார்.
தலாவும் காடனும் அப்படியே செய்ய சிவனும் நேரில் தோன்றி வேடர்களுக்கும் யானையாக இருந்த முனிவருக்கும் கைலாய பதவி அளித்தார். இந்த சிவனுக்கு வைத்திய நாதர் என்றும் பெயர் ஏற்பட்டது.
வைத்திய நாதர் புற்றில் இருந்து சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. ஐந்து தலை நாகாபரணம் சூடியுள்ளார். லிங்கத்தின் பாணத்தில் சிவனின் முகம் கவசமாக உள்ளது. இவரைத் தரிசித்து தீர்த்தம் குடித்தால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். மிருத்திகா என்னும் புற்றுமண்ணும் பிரசாதமாகத் தரப்படுகிறது.
கோபுர வாசல் தவிர ''கைலாய வாயில்'' எனப்படும் சொர்க்கவாசலும் இங்கு உண்டு. பொங்கலன்று சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் ராஜகோபுரத்தின் வழியாக வீதியுலா புறப்படுவர். கோவிலுக்குத் திரும்பும்போது ''கைலாய வாயில்'' வழியாக கோவிலுக்குள் நுழைவர் இந்த விழாவிற்கு சொர்க்க பாதல் தையலு என்று பெயர்.இந்த வழியாகவந்து வைத்தியநாதரைத் தரிசித்தவர் நிச்சயம் கயிலைவாழ்வை அடைவர் என்பது ஐதீகம்.
அம்பிகை மனோன்மணி கைகளில் தாமரை மலர் தாங்கி நிற்கிறாள். பஞ்ச லிங்கங்கள் பிரகாரத்தில் உள்ளன சொர்க்க வாசலுக்கு எதிரே சுதையால் ஆன நந்தி உள்ளது. இங்கு கல்யாணி தீர்த்தம் உள்ளது.
இங்குள்ள துவாரபாலகர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள்.பத்து அடி உயரமுள்ள இவர்கள்,கர்நாடகக் கோயில்களிலேயே மிகவும் உயரமானவர்கள்.எல்லாக் கோயில்களிலும் சண்டன்,பிரசண்டன் துவாரபாலகர்களாக இருப்பர்.இங்கு,நந்தியும் மகாகாளரும் துவாரபாலகர்களாக உள்ளனர்.நந்தியின் சிலையில் தட்டினால் ,கண்டநாதம் என்னும் மணியோசையும் மாகாளரைத்தட்டினால் ,தாளநாதம் என்னும் இனிய ஓசையும் கேட்கின்றன.
மூஷிகவாகனத்தில் பிள்ளையார் சிற்பம் மிகவும் புகழ்பெற்றது.மூஷிகத்திற்குக் கடிவாளம், சேணம் போட்டு அந்த சேணம் விழாமல் இருக்க மூஷிகத்தின் வாலுக்கு கீழே கட்டி அதற்கு மேலே பி்ள்ளையார் ஏறி ஓட்டுவது அந்த சிற்பியின் படைப்பாற்றல். இந்த விநாயகரை ''விஜயகணபதி.''என்று அழைக்கின்றனர்.
ஒரு ஐந்து தலை பாம்பு கீழேயிருந்து வெளியே தலையை நீட்டுகின்றது. ஒரு மூலையில் கல்லிலேயே வளையம் இரண்டை வடிவமைத்திருக்கிறார்கள்
இவ்வாறு பார்த்து பார்த்து செதுக்கியுள்ள சிற்பங்கள் கட்டடக்கலையின் உச்சம் என்றே சொல்லலாம்
புகைப்படங்கள்=====
01.,02.,03.,04..அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்,தலக்காடு,மைசூரு, கர்நாடகா.
05.அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்,தலக்காடு,மைசூரு.
06.அருள்மிகு அம்பிகை மனோன்மணி,வைத்தியநாதர் திருக்கோயில்,தலக்காடு.
07.துவார பாலகர்கள்.
08.மாகாளர் அருகில் மூஷிகத்தின்மீது சவாரி செய்யும் ''விஜயகணபதி.''
09. ''விஜயகணபதி.'' ஓவியம்.
10 ''விஜயகணபதி.'' சிற்பம் .
11.''கைலாய வாயில்''
12. ஐந்து தலை பாம்பு,கல்லிலேயே வளையம்.
13. ''கைலாய வாயில்'' எதிரே சுதையால் ஆன நந்தி
14.கல்யாணி தீர்த்தம்.
பிற சிற்பங்கள்.இறுதியாக,கல்லால் ஆன திருமஞ்சனத் தொட்டி
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #ஆன்மீக தகவல்கள் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃


