✝️ ஜெபம்🌤️🌴*
*🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹*
*நற்பேறு பெற்றவர் யார்? அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;*
*ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்.*
*அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.*
*பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.*
*நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.*
(திருப்பாடல் 1 : 1-4,6)
*✝️ஜெபிப்போமாக :🛐*
*இஸ்ரயேலின் தூயவரே! எங்கள் ஆண்டவராகிய கடவுளே! எங்களுக்கு பயனுள்ளவற்றைக் கற்பிப்பவரே! செல்லவேண்டிய வழியில் எங்களை நடத்துபவரே! உம்மை இந்தக் காலை வேளையில் வணங்குகிறோம். வாழ்த்துகிறோம். ஆராதனை செய்கிறோம்.*
*இறைவா! நாங்கள் பொல்லாரின் சொல்லின்படி நடவாமல்; பாவிகளின் தீயவழி நில்லாமல், இகழ்வாரின் குழுவினில் அமராமல் எங்களைக் காத்தருளும்.*
*எங்கள் வாழ்வில் நாங்கள் அவ்வாறு இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம். ஏனெனில் அவ்வாறு இருப்போர் உமது திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறவோ, அதைப்பற்றி இரவும் பகலும் சிந்திக்கவோ இயலாது.*
*இறைவா! இன்றைய நாளை உமது திருக்கரங்களில் ஒப்படைக்கிறேன். என் ஒவ்வொரு செயல்களையும் ஆசீர்வதித்து வழிநடத்தும்.*
*ஆண்டவரே, உம்மை ஈன்றெடுத்த நம் அன்னை மரியாளின் புனித நாமம் என்றென்றும் போற்றப்பப்படுவதாக.*
*ஆமென்.* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்


