ShareChat
click to see wallet page
search
உண்மை சம்பவம்* *உண்மை சம்பவம்* மகான் ராகவேந்திரர் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடத்துக்கு 1812-ம் வருடம் ஒரு சோதனை ஏற்பட்டது. அப்போதைய பிரட்டிஷ் அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி கோயில் இடத்துக்கான வாரிசுகள் யாரும் இல்லையென்றால், அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக்கொள்ளும்அந்தச் சட்டத்தின் காரணமாக பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தின் மானியம் முடிந்து விட்ட படியால், அந்த இடத்தை எடுத்துக் கொள்ள அரசாங்கம் முடிவு செய்திருந்தது. ஆனால், பல வருடங்களுக்கு முன்பாக அப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் மானியமாகக் கொடுத்த அந்த இடத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் கைப்பற்ற பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பைக் கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியராக இருந்த சர். தாமஸ் மன்றோவின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, எப்படியாவது மக்களின் எதிர்ப்பை பக்குவமாக சரிசெய்யச் சொல்லி உத்தர விட்டது. தாமஸ் மன்றோவும் தன்னுடைய குழுவினருடன் மந்த்ராலயத்துக்கு விரைந்தார். பிருந்தாவனத்தின் வாசலில் தன் காலணிகளையும், தலையில் அணிந்திருந்த தொப்பியையும் கழற்றி வைத்து விட்டு உள்ளே சென்றார். உடன் வந்தவர்களும் உள்ளே சென்றனர். ஜீவ சமாதி இருந்த இடத்துக்கு அருகில் சென்ற தாமஸ் மன்றோ, அங்கே யாரோ இருப்பது போல் வணக்கம் செலுத்தியதைக் கண்டு உடன் வந்தவர்கள் ஆச்சர்யப்பட்டனர். அவர்களுடைய ஆச்சர்யத்தை மேலும் அதிகரிப்பதுபோல் இருந்தது அடுத்து நடைபெற்ற நிகழ்ச்சி. தாமஸ் மன்றோ யாருடனோ சத்தமாக ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். சுற்றிலும் இருந்தவர்களுக்கு அவர் யாருடன் உரையாடுகிறார் என்பதே புரியவில்லை. காரணம் எதிரில் யாருமே இல்லை. மேலும் தாமஸ் மன்றோ பேசும் குரல் மட்டும்தான் அவர்களுக்குக் கேட்டதே தவிர, அவருடன் பேசும் மற்றவரின் குரல் கேட்கவில்லை. மந்த்ராலயத்தில் அமைந்திருக்கும் பிருந்தாவனம் பற்றியும், அந்த இடம் தானமாக வழங்கப்பட்டது பற்றியும், பிரிட்டிஷ் அரசாங்கம் இயற்றி இருக்கும் சட்டம் பற்றியும் தாமஸ் மன்றோ யாரிடமோ சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் நடை பெற்ற உரையாடலின் முடிவில், தன்னுடைய பாணியில் பிருந்தா வனத்துக்கு வணக்கம் தெரிவித்து விட்டு வெளியில் வந்தார் தாமஸ் மன்றோ. அதுவரை திகைத்து நின்று கொண்டிருந்த மற்றவர்கள், அவர் யாரிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று கேட்டனர். தனக்கு ஏற்பட்ட அனுபவம் தந்த பிரமிப்பில் இருந்து விடுபடாத தாமஸ் மன்றோ, ''பிருந்தா வனத்தின் அருகில் காவி ஆடை அணிந்து, பிரகாசமான கண்களுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசாங்க மான்யம் பற்றி சில விவரங்களைத் தெரிவித்தேன். அவரும் அது பற்றி என்னிடம் உரையாடி, மடத்தின் சொத்துகள் பற்றிய விவரத்தைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். அவர் கூறிய விளக்கங்களில் இருந்து இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பது நிரூபணமாகி விட்டது. அவருடைய ஒளி வீசும் கண்களும் ,கம்பீரக்குரலும், சுத்தமான ஆங்கில உச்சரிப்பும் என்னை மிகவும் திகைக்கச் செய்து விட்டது'' என்று பரவசத்துடன் கூறினார். உடன் வந்தவர்கள் தாங்கள் அப்படி எதுவும் பார்க்க வில்லை என்று கூறியதும் மேலும் வியப்பின் உச்சிக்கே சென்றார் தாமஸ் மன்றோ. மேலும் பிருந்தா வனத்தில் இருந்த படி அருளும் மகானுடன் தனக்குப் பேசக் கிடைத்த வாய்ப்பை பெரும் பேறாகக் கருதிய தாமஸ் மன்றோ, அந்த இடம் மடத்துக்கு உரிமையானது தான் என்று தகவல் அனுப்பினார். மகானின் தரிசனமும், அவருடன் உரையாடும் பாக்கியமும் பெற்ற காரணத்தினால், விரைவிலேயே தற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்கும் பாக்கியத்தைப் பெற்றார். ஆளுநராகப் பொறுப்பேற்றதுமே அவர் கையெழுத்து போட்ட முதல் உத்தரவு, மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானதுதான் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பான விவரங்கள் அனைத்தும் அப்போதைய சென்னை ராஜதானி கெசட்டிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ""நீண்டநாள் வாழ்வாய்!ஆசீா்வதித்த மணமகன் ஓருவன் தடுக்கி விழந்து இறந்தான் அவனை நீா் தெளித்து உயிா்ப்பித்தாா் ஓரு நவாபின் மகன் உடலைக் கல்லறையிலிருந்து உயிருடன் மீட்டாா் #தஞ்சாவூரில் பஞ்சம் ஏற்பட்ட போது அரண்மனை தானியக்கிடங்கில்இருந்து மக்களுக்கு வழங்கதானியம் பெருகச்செய்தாா் நவாப்வழங்கிய மாஞ்சாலி கிராமத்தில் உள்ள அம்மனை வழிபட்டு, தான் குடிகொள்ள நிச்சயித்த பிருந்தா வன பணியை துவக்கினாா் அவரது கட்டளைப் படி ,கையிலிருந்த துளசி மாலை கீழே விழந்தவுடன் கல்லால் பிருந்தா வனம் (சமாதி) மூடப்பட்டது. அதன் பின் மாஞ்சாலி கிராமம்" மந்த்ராலயம்" என்னும் திருத்தலமானது. அந்தநிலத்தை அரசுடைமையாக்க முயன்ற தாமஸ் மன்றோவுடன் சமாதியில் இருந்து எழந்து பேசி தடுத்ததோடு, அட்சதைவழங்கி வாழ்த்தினாா் இன்றும் உலகம் முமுவதும் உள்ளபக்தா்கள் குருராகவேந்தாின் அருளைநாளும் அனுபவித்து வருகின்றனா் அவாரின் மகிமை இன்றும் என்றும் தொடர்கிறது ‌ஒம் ஶ்ரீராகவேந்திராய நம: #🙏பெருமாள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #🔍ஜோதிட உலகம் 🌍 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🙏பெருமாள் - ShareChat