ShareChat
click to see wallet page
search
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial குடியரசு தினக் கொடியேற்றம் & கிராமசபை பங்கேற்பு! சுற்றறிக்கை வணக்கம், நமது மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையத்தில் வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தன்று (26-01-2026) காலை 9.30 மணிக்கு, துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா I.P.S., (Rtd) @MouryaMNM அவர்களின் தலைமையில் தேசியக்கொடியேற்றி குடியரசு தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி, குடியரசுதினக் கொடியேற்றத்தில் நமது கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அவசியம் கலந்துகொள்வதுடன், பொதுமக்களின் கோரிக்கைகள் கிராமசபையில் தீர்மானங்களாக நிறைவேற்றப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி! நாளை நமதே! @sentharu செந்தில் ஆறுமுகம், தலைமை நிலையச் செயலாளர், மக்கள் நீதி மய்யம். @ikamalhaasan @maiamofficial #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
மக்கள்நீதிமய்யம் - ShareChat