ShareChat
click to see wallet page
search
#💏திருமண ஸ்டேட்டஸ் #காதல் ஸ்டேட்டஸ் #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் #🙏 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் .1.2026 புதன்கிழமை ஆண்டாள் திருக்கல்யாணம்* ஆண்டாள், ஸ்ரீரங்கநாதப் பெருமாளை மணக்க வேண்டும் என விரும்பி, மார்கழி மாதம் முழுவதும் பாவை நோன்பு நோற்று, இறுதியில் பெருமாளுடன் கலந்தார். மார்கழி மாதத்தின் கடைசி நாள் (போகிப் பண்டிகை) அன்று, ஆண்டாள் மற்றும் பெருமாளுக்குத் திருமணம் நடத்தப்படுகிறது. இதுவே போகி ஆண்டாள் திருக்கல்யாணம் எனப்படுகிறது. ஸ்ரீ ரங்கம் மட்டுமின்றி, ஆண்டாள் வீற்றிருக்கும் அனைத்து பெருமாள் கோயில்களிலும் இந்த விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது திருமணத்திற்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருப்பவர்கள், மார்கழி மாதத்தில் திருப்பாவை சேவித்து, போகி அன்று நடைபெறும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டால், திருமணத் தடைகள் நீங்கும். திருக்கல்யாணத்தின் போது வழங்கப்படும் முகூர்த்த தேங்காய் பிரசாதம், வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபட, விரைவில் திருமணம் நடக்கும் என நம்பப்படுகிறது. திருமணத்தோடு மட்டுமல்லாமல், தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற் றத்திற்கும் இந்த விழா உதவிகரமாக இருக்கும்.🍀
💏திருமண ஸ்டேட்டஸ் - ShareChat