#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Sarvam Sivarpanam 🙏🔱⚜️
சொல்லச் சொல்ல நீண்டு செல்லும் பெருமையாளரும், பழமையான கலைகளைக் கற்று வல்லவர்களுமாகிய அறிஞர்கள் வாழ்வதும், வழங்கத் தொலையாத செல்வ வளத்தை உடையதுமான சிரபுரம் மேவிய இறைவனே! முல்லை நிலத்தே தோன்றிய முல்லை யரும்பு போன்ற பற்களை உடைய உமையம்மை ஓர் கூற்றில் விளங்கவும் சென்று அல்லற்படுவோர் ஏற்கும் பலி உணவை ஏற்று உண்ணுதலில் விருப்பம் கொள்வது ஏனோ?
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - பழந்தக்கராகம்.


