#பத்தி #🙏கோவில் #தெரிந்து கொள்வோம் மாவட்டம் பெருந்துறை ஈங்கூர்* அருள்மிகு ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் 🙏🙏
*கொங்கு வேளாளர் குலப் பிரிவான ஈஞ்சான் குல வேளாளர் சமூகத்தின் குலதெய்வமாக விளங்குகிறாள் அன்னை
*1000ஆண்டுகள் பழைமையான ஆலயம்
*அச்சமயம் இப்பகுதியை கொங்கு சோழமன்னர்கள் ஆண்டு வந்தனர்
*இப்பகுதியில் வசித்து வந்த கனிலுவர், சிங்களவர், மாவிலுவர்,பூவிலுவர் மற்றும் வெள்ளை வெட்டுவர் ஆகியோர் வரி செலுத்தாமல் மன்னனுக்கு மிகுந்த தொல்லைகள் கொடுத்து வந்தனர்
*அவர்களை அடக்குவோர்க்கு நிலம் பரிசளிக்கப்படும் என மன்னன் அறிவித்தான்
*தஞ்சாவூர் ஈஞ்சான் குலத்தவர் ரகுநாத சிங்கைய கவுண்டர் தலைமையில் வந்து அவர்களை விரட்டினர்
*மன்னன் பரிசாக கொடுத்த நிலத்தில் குடியேறினர்
*மதுக்கரை செல்லாண்டியம்மனை குலதெய்வமாக வணங்கி வந்த அவர்கள் ஒருமுறை ஸ்ரீரங்கம் செல்கையில் வழியில் பயணச் செலவு பையை தவறவிட்டனர்
*விட்ட இடத்தில் வந்து தேடும்போது பணப்பையை ஒரு பாம்பு பாதுகாத்தபடி இருந்தது
*தங்கள் குலதெய்வம் செல்லாண்டியம்மன் தான் பாம்புருவில் வந்ததாககருதி அவளுக்கு நன்றி செலுத்தி வழிபட இங்கு அவளை சிலையாக வடித்து பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினர்
*குலமரபுப்படி தம்பிராட்டி என்று பெயரிட்டனர்


