ShareChat
click to see wallet page
search
ஆரிய ஆதிக்கத்தினால் வீழ்த்தப்பட்ட இந்திய பூர்வகுடிகளின் அரசியல் அடையாளமாகழுகிறது. சனாதன அரசியலின் நாயகனாக ராமனை கொண்டாடும் கூட்டத்திற்கு எதிர் நிலை கருத்துருவாக்கத்தின் பாத்திரத்தை சுமப்பவன் இராவணன். இந்திய பூர்வகுடிகளான திராவிட மக்களும், அதன் அரசர்களும், ஆட்சியாளர்களும் வஞ்சகமாய் வீழ்த்தப்பட்டதை கொண்டாடும் காவியமாய் இராமயணம் ஒவ்வொரு காலகட்டம், நிலப்பரப்பு, குடிகளுக்கு ஏற்ற வகையில் பலவகையில் கதைகளாக சொல்லப்படுகிறது. இதன் சாராம்சமென்பது ஒடுக்கப்பட்ட பூர்சகுடிகளின் வரலாறை இழிவு செய்வதாக அமைகிறது. இராவணனையும் தமதாக்கிக் கொள்ள முயன்ற படைப்புகளும் சனாதனவாதிகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இராமனை கதாநாயகனாக்கி இந்து-வேத மத அரசியலை மையப்படுத்தியதை கண்டித்து எழுந்த விமர்சனத்தால், உள்ளம் வருந்தி, தமிழருக்கு எதிரான வேத-வைதீக இந்துமதத்தினை விமர்சித்து தாமே முன்வந்து சடகோபர் அந்தாதியை கம்பர் படைத்தார் என்பார் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள். இராமனை முன்வைத்து இந்தியா முழுமையும் தமது சனாதன அரசியலுக்கு கீழாக கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் கூட்டம் முனையும் இக்காலகட்டத்தில் 'இராவணனை' நாம் எழுப்பியாக வேண்டும். தமிழர்களின் சமய கோட்பாடுகள் மையம் கொண்ட 'காஞ்சி' நகரில் இராவணனுக்கு 'கோட்டம்' எழுப்பி, இம்மண்ணின் பூர்வகுடி அரசியலை உயர்த்திப் பிடிப்போம். தமிழரிடத்தில் துரோகக்கூட்டத்தை உருவாக்கி, பிராமண கடப்பாரையை கையில் கொடுத்து தமிழினத்தை பிளவுபடுத்த ஆரிய ஆற்றல்கள் முனையும் காலகட்டத்தில் பிராமண கடப்பாரையையும், அதைச் சுமந்துவரும் அடிமைக் கூட்டத்தையும் விரட்டும் வரலாற்றுப் பணி நமக்கு காத்திருக்கிறது. ஆகவே இன்றய காலகட்டத்தில் இராவணக் கோட்டத்தின் தேவை என்ன என்பதை விளக்கும் தமிழ்த்தேசியக் கூட்டணி ஒருங்கிணைக்கும் பொதுக்கூட்டத்திற்கு மே17 இயக்கம் சார்பாக அழைக்கிறோம். பெருந்திரளாய் திரண்டு ஆதரிப்பது தமிழரின் தலையாய கடமை. இது கட்சி அரசியல் அல்ல, இனத்தின் தன்மான அரசியல். #தமிழ்நாடு #தமிழ்த்தேசியக் கூட்டணி #💪 மே17 இயக்கம் #விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி #🇸🇱தமிழக மக்கள் ஜனநாயக கட்சி 🇸🇱
தமிழ்நாடு - இரமத் திருவிழா காஞ்சியில் ஏன் வேண்டும் இராவண கோட்டம்? விளக்கப் பொதுக்கூட்டம் 22 சவரி 2026 மாலை 5:00 மணி எம்ஜிஆர் நகர் சென்னை மே பதினேழு இயக்கம் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தமிழ்த்தேசியக் கூட்டணி 9884864010 9894182482 9443129147 இரமத் திருவிழா காஞ்சியில் ஏன் வேண்டும் இராவண கோட்டம்? விளக்கப் பொதுக்கூட்டம் 22 சவரி 2026 மாலை 5:00 மணி எம்ஜிஆர் நகர் சென்னை மே பதினேழு இயக்கம் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தமிழ்த்தேசியக் கூட்டணி 9884864010 9894182482 9443129147 - ShareChat