"சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞான உபதே சிகனே"
கந்தர் அனுபூதி பாடலின் பொருள்:
எமன் (நமனார்) வந்து என் உயிருக்குத் துன்பம் செய்து, என்னைக் கொண்டு செல்ல முயலும் அந்த நாளில், நான் இறக்காமல் (அழியாமல்) இருக்கும்படி, உன்னுடைய திருவடிகளிலேயே என்னை வைத்து காத்தருள வேண்டும். வெற்றி மாலை அணிந்தவனே! மயில் வாகனனே! யோகியர்களுக்கெல்லாம் யோகியே! சிவபெருமானுக்கே பிரணவப் பொருளை உபதேசம் செய்த குருநாதனே!
#muruganphotos #ommuruga #ஓம்சரவணபவ #saravanan #karthikeya #ஆன்மீகம் #murugansongs #murugan #முருகன் #கந்தா #🙏கோவில் #OM MURU🙏 #ஓம் முரு #god muru ##muru

