மார்கழி மாதம் 21ம் நாள் 05-ஜனவரி-26, சோம- இந்து- திங்கள் நாளில்
மாசில்லா பக்தியுடன் திரு கண்ணப்ப நாயனார் தன் கண்ணையே பெயர்த்து அளித்த
மாதேவன் இளம்பிறை திங்கள் சடையினான் சோமசேகர பெருமான் திருக்காளத்தி காளஹஸ்தி அப்பனை போற்றி பாடி வணங்கிடுவோம் வாரீர்
வாயே அபிடேக கலசமாக வழிபாடு செய்த வேடராகிய கண்ணப்பர் , தம் மலர்போன்ற கண்ணைக் கொடிய அம்பினால் தோண்டி இறைவனுக்கு அப்பி வழிபட்ட வாகவிடை ஏறி,சடைமேல் தூயமதி சூடி, சுடுகாடில்
நடம் புரியும் திருக்காளத்தி காளஹஸ்தி அப்பனே உனை போற்றி பாடி வணங்குகிறேன்
கிள்ளைதினை கொள்ள,எழிலார் மகளிர்கள் பொன்னாலும் , இரத்தினங்களாலும் ஆகிய ஆபரணங்களைக் கவண்கற்களாக வீசி விரட்டும் சிறப்புடைய மலை வாழ் வேடுவர் கண்ணப்பர் பூசித்த திருக்காளத்தி காளஹஸ்தி அப்பனே உனை
போற்றி பாடி வணங்குகிறேன்
எதிர்எதிர வெதிர் பிணைய எழுபொறிகள் சிதற எழில் ஏனம் உழுத கதிர்மணியின் வளர்ஒளிகள் இருள் அகல
நிலவு போல் பிரகாசித்திடும் திருக்காளத்தி மலை வளர்ந்த கண்ணப்பர் பூசித்த மேருமலையை வில்லாகக் கொண்டு பகையசுரர்களின் முப்புரங்களையும் ஒருநொடிப் பொழுதில் எரியுண்ணும்படி செய்த மதி பொதிசடையர், சங்கரர் திருக்காளத்தி காளஹஸ்தி அப்பனே உனை போற்றி பாடி வணங்குகிறேன்
அலைகொள் புனல் அருவி பல சுனைகள்வழி இழிய வயல் பாய , அருகில் முற்றிய மூங்கில்கள் கலகல என்ற ஒலியுடன் கதிர்போல் ஒளிரும் முத்துக்களைச் சிந்தும் திருக்காளத்திமலை வாழ்ந்த கண்ணப்பர் பூசித்த
மலைமிசை தனில் முகில்போல் அதிர வந்த மதகரியை இடிபோல் பிளிற அலறக் கொலைசெய்துஉமை அஞ்ச
உரி போர்த்த திருக்காளத்தி காளஹஸ்தி அப்பனே உனை போற்றி பாடி வணங்குகிறேன்
கானகக் குறவர்கள் அடுப்பெரித்த , கரிய அகில் கட்டை பெரியபுகையால் ஆகாயத்தில் மணக்கின்ற திருக்காளத்திமலை வாழ்ந்த கண்ணப்பர் பூசித்த பகீரதன் அருந்தவம் முயன்ற பணிகண்டு ஆரருள் புரிந்து, அலைகொள் கங்கையை தன் சடை ஏற்றிய திருக்காளத்தி காளஹஸ்தி அப்பனே உனை போற்றி பாடி வணங்குகிறேன்
மலைமேல் ஊரும் அரவம் உமிழ்ந்த இரத்தினங்களின் ஒளியால் கரிய இருள் நீங்கப் பெற்று, பொன்மலைபோல் பிரகாசிக்கும் திருக்காளத்திமலை வாழ்ந்த கண்ணப்பர் பூசித்த வலிமை மிகுந்த சலந்தராசுரனின் தலையைச் சக்கராயுதத்தால் பிளந்து தேவர்கட்கு அருள்புரிந்த திருக்காளத்தி காளஹஸ்தி அப்பனே உனை
போற்றி பாடி வணங்குகிறேன்
நீண்ட வில்லேந்திய வேடர்கள் நெடிய மலையினூடே வருவதால் , யானைகள், வரி புலிகள், சிங்கங்கள் அஞ்சுகின்ற
திருக்காளத்திமலை வாழ்ந்த கண்ணப்பர் பூசித்த எரிஅணைய சுருண்ட தலை மயிர் இராவணனை ஈடு அழிய எழில்கொள் விரலால் ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அவனை அழுத்தி , பின் அருள் செய்த திருக்காளத்தி காளஹஸ்தி அப்பனே உனை போற்றி பாடி வணங்குகிறேன்
நீடுபுகழ் ஞானசம்பந்தன்உரை நல்ல தமிழின் பாடலொடு பாடும் இசை கேட்டு திருக்காளத்தி அப்பன் திருவடி முக்தி
அளித்திடுவார் நிச்சயமே திருக்காளத்தி காளஹஸ்தி அப்பன் திருவடி தாள் போற்றி போற்றி
🌹🌹🌹 #63 நாயன்மார்கள் #சித்தர் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏ஏகாதசி🕉️


