ShareChat
click to see wallet page
search
அனுமந்தன் 40 வயதுடைய கட்டிட மேஸ்திரி ஆவார்.. அனுமந்தனின் மனைவி முனியம்மாள்... இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனர். முனியம்மாளின் தங்கை பெயர் ராஜேஸ்வரி,. ராஜேஸ்வரிக்கும் திருமணமாகிவிட்டது. ஆனால் கணவர் பிரபு பில்டிங் கான்ட்ராக்டர் என்பதால், தற்சமயம் வேலை நிமித்தமாக பெங்களூருவில் தங்கி உள்ளார்.. இதனால் அக்கா, தங்கை 2 குடும்பங்களும் கடந்த 8 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் வசித்து வருகிறார்கள்.. கட்டிட கான்ட்ராக்டர் இந்நிலையில், அனுமந்தன், ராஜேஸ்வரி இடையே பழைய திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர்.. சம்பவத்தன்று இருவரும் பேசி கொண்டிருந்தபோது, இருவருக்கும் வாக்குவாதம் வெடித்துள்ளது. அப்போது ஆவேசமடைந்த அனுமந்தன், அருகிலிருந்த கல்லை எடுத்துக் கொண்டு ராஜேஸ்வரியின் தலையிலே போட்டார். ராஜேஸ்வரி மயங்கி விழுந்ததுமே, அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்த அனுமந்தன், அங்கிருந்த பள்ளத்தில் தள்ளி மண்ணை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதற்கு பிறகே தகவலறிந்து வந்த போலீசார் அனுமந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.. என்ன நடந்தது உண்மையில்? அனுமந்தன் இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து வாடகைக்கும் ஓட்டி வருகிறார். பிரபுவும், அனுமந்தனும் பங்காளி முறை கொண்டவர்கள். அதாவது இவர்களை சகோதரிகளான ராஜேஸ்வரியும், அவரது அக்காவும் திருமணம் செய்து கொண்டனர். பெங்களூருவில் தங்கி உள்ள பிரபு மாதத்தில் ஒருமுறை மட்டும் சொந்த ஊருக்கு வந்து போவாராம்., ராஜேஸ்வரி, அனுமந்தன் இருவரின் தகாத உறவு, அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது.. இதனால் ராஜேஸ்வரி, அந்த உறவை மேலும் நீட்டிக்க விரும்பாமல், தன்னுடைய 2 குழந்தைகளுக்காக திருந்தி வாழ நினைத்துள்ளார்.. இதற்காக அனுமந்தனுடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். அனுமந்தன் உல்லாசமாக இருக்க பலமுறை அழைத்தும் மறுத்து வந்துள்ளார். இது அனுமந்தனுக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் தந்து வந்துள்ளது.. இதற்காகவே ராஜேஸ்வரியை கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.. சம்பவத்தன்று, மகனின் பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.. அப்போது அங்கு வந்த அனுமந்தன், கடைசியாக ஒருமுறை தனியாக பேச வேண்டும் என்று அழைத்துள்ளார்... ராஜேஸ்வரியும் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கல்லுகொல்லைமேடு என்ற இடத்திற்கு சென்றுள்ளார். 7 முறை டிராக்டர் லோடு மண் அங்கு சென்றதுமே, ஏன் முன்புபோல தன்னிடம் பேசுவதில்லை என்று கேட்டு அனுமந்தன் தகராறு செய்துள்ளார்.. பிறகு உல்லாசத்துக்கும் அழைத்துள்ளார்.. இதனால் கோபமடைந்த ராஜேஸ்வரி, அனுமந்தனை திட்டி உள்ளார்.. இதைக்கேட்டு மேலும் ஆத்திரமடைந்த அனுமந்தன், கீழே கிடந்த கல்லை கொண்டு வந்து, தலையில் போட்டுள்ளார்.. பிறகு ராஜேஸ்வரியின் கை, கால்களிலும் கல்லாலேயே தாக்கி உள்ளார்.. இதில் ராஜேஸ்வரி அங்கேயே சுருண்டு மயங்கிவிட்டார்.. அவர் இறந்துவிட்டதாக நினைத்த அனுமந்தன், அருகில் இருந்த பள்ளத்தில் ராஜேஸ்வரியை தள்ளிவிட்டு, டிராக்டரில் வைத்திருந்த கட்டிட கழிவு மண்ணை கொட்டி உள்ளார். இப்படி 7 முறை டிராக்டரில் கட்டிட கழிவு லோடை ஏற்றி வைத்து குழிக்குள் கொட்டியிருக்கிறார்.. அதுவரை உயிருடன் இருந்த ராஜேஸ்வரி, மண்ணை கொட்டியதுமே உயிரிழந்துவிட்டார்., திடீர்னு நின்ற சத்தம் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் சத்தம் போட்டு தகராறு செய்வதை அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கவனித்துள்ளனர். அவ்வளவு நேரம் கேட்டு கொண்டிருந்த வாக்குவாதமும், சத்தமும் திடீரென நின்றுவிட்டதால் சந்தேகமடைந்து உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர்.. அப்போது பள்ளத்தில் அரைகுறையாக மண் அள்ளி கொட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பிறகுதான் போலீசார் மண்ணை தோண்டி ராஜேஸ்வரியின் உடலை மீட்டனர். பிறகு பதுங்கியிருந்த அனுமந்தையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். பரபரப்பு வாக்குமூலம் அப்போது அனுமந்தன் போலீசாரிடம் தந்த வாக்குமூலத்தில், ராஜேஸ்வரியும் நானும் அடிக்கடி சந்தித்து ஜாலியாக இருந்து வந்தோம். இது அக்கம் பக்கம் தெரிந்துவிட்டதால் என்னிடம் பேசுவதை தவிர்த்துவிட்டார்,.. உல்லாசத்திற்கும் மறுத்து வந்தார். அதனால்தான் கொலை செய்ய முடிவு செய்தேன்.. கடைசியாக பேச வேண்டும் என்று சொல்லி அழைத்தேன்.. அப்போது ராஜேஸ்வரி, உல்லாசத்திற்கு மறுத்ததுடன் இனிமேல் என்னிடம் பேசவேண்டாம் என்று திட்டவட்டமாக சொன்னதால் எனக்கு கோபம் வந்துவிட்டது.. இதில் அவரை பள்ளத்தில் தள்ளிவிட்டு கல்லை தூக்கிப் போட்டேன். மண்ணையும் நிரப்பினேன் என்றார்.. #📢ஜனவரி 12 முக்கிய தகவல் 😃 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
📢ஜனவரி 12 முக்கிய தகவல் 😃 - 39 மீது லோடு மச்சினிச்சி 7 டிராக்டர் மண்ணை கொட்டிய காமுகன் தர்மபுரி ஜாலி பொறியில் சிக்கியது மாமா 6TLLI? 39 மீது லோடு மச்சினிச்சி 7 டிராக்டர் மண்ணை கொட்டிய காமுகன் தர்மபுரி ஜாலி பொறியில் சிக்கியது மாமா 6TLLI? - ShareChat