ShareChat
click to see wallet page
search
🔱🙏🔱ஓம் நமசிவாய வாழ்க 🔱🙏🔱 🌼செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்அடி யார்மேல் பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத்து என்றும்பணி வாரை மெய்யநின்றபெரு மான்உறையும்இடம் என்பர்அருள் பேணிப் பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே.🌼 🪷🪷🪷பொருள் : -🪷🪷🪷 🌸தனது சிவந்த திருமேனியில் வெண்மை தோன்றுமாறு திருநீற்றைப் பூசுவர்; தன்னை வணங்கும் அடியாரிடம் மெள்ள மெள்ளச் சேர்ந்து நின்ற தீவினையைச் சிதறி வெளியேறுமாறு செய்வர்; தன்னைப் பணிந்து போற்றிப், பாடல்களால் துதி செய்யும் அடியார்பால் மெய்யாய் நின்றருளும் அப்பெருமான் உறையும் இடம், வாக்காலும் மனத்தாலும் பொய்மை கொள்ளாத மனத்தினர் பொருந்தி வாழும் புகலூர் ஆகும்.🌸 🙏திருச்சிற்றம்பலம் 🙏 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
00:23