
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
சிவ சிவ
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! இதன் பொருள் என்ன?
====================================================================
பலரும் பல மாதிரி விளக்குவர். இச்சிறியோனின் சிற்றறிவிற்கு எட்டிய சில புரிதல்களைப் பகிர்கிறேன்.
(இணையத்தில் படித்தது)
எளிமையாகச் சொன்னால்,
தென்னாடுடையவன் சிவன்.
அதாவது தென்னாடான தமிழகத்தைச் சேர்ந்தவன் சிவன்.
எனினும் என்னாட்டவர்க்கும் வேறுபாடின்றி அருள் பாலிக்கும் இறைவன் சிவன்.
ஆனால் சிவன் தென்னாட்டில் பிறந்து வளர்ந்தவனா என்று வினா எழுப்புவோர் பலர். இமயத்தைத் தன் வீடாக வைத்து பின்னர் மலையில் இறங்கி வந்து பார்வதியை (பர்வத மன்னனின் மகளை) மணந்தான் என்பன புராணங்கள்.
திருவிளையாடற்புராணத்திலும் பரஞ்சோதி முனிவர் சிவனார் வடநாட்டிலிருந்து ரதகஜ துரக பதாதி எனப்படும் நால்வகைப் படைகள் சூழ மங்கல இசை முழங்க மதுரை மாநகருக்கு வந்து மீனாட்சியம்மையைக் கைப்பற்றுகிறார் என்கிறது.
இதையே இன்னொரு நோக்கிலும் பார்க்கலாம்:
தென்திசைக் கடவுள் அல்லது தென்முகக்கடவுள் அல்லது தெற்கினை நோக்கும் கடவுள் தட்சிணாமூர்த்தி, ஏனெனில் தட்சிண் என்பது வடமொழியில் தெற்கைக் குறிக்கும் சொல். எனவே தென்னாட்டையே நோக்கிக் கொண்டிருப்பினும் எல்லா நாட்டவர்க்கும் அருள் புரிவான் சிவன் என்று பொருள் கொள்ளலாம்.
இன்னொரு வகையிலும் புரிந்து கொள்ளலாம்:
தெற்கின் காவலன் இயமன் (எமன்) என்பதால் தான் திருவண்ணாமலை கிரிவலத்திலும் தென்திசையில் எமலிங்கம் உள்ளது. எமன் என்பவனுக்குக் காலன் என்று பொருள். முக்காலும் உணர்ந்த சிவன் தன் காலால் காலனை உதைத்த வரலாற்றைச் சிவபக்தர்கள் அறிவர்.
எனவே காலனை உதைத்தபின்னர் சிவனே தென்திசைக் கடவுளாகவும் இருந்திருக்கலாம். இயமனும் வாழ்வின் முடிவை, ஆன்மாவிற்கு வீடுபேறா இல்லை மறுபிறவியா என்று நிர்ணயிப்பவர் என்பதால் சிவனைத் தென்திசைக் கடவுள் என்றும் அழைக்கலாம்.
ஆன்மீகத்தை விடுத்துப் பூலோக அறிவியல் வாயிலாகப் பார்த்தால், இமயம் என்பது இந்தியாவின் வடக்கே இருக்கும் பெரிய அணை போன்ற மலை.
அதிலிருந்து தெற்கே இறங்குவது சுலபம். ஏற்கனவே உயரத்தில் குளிர்வதால் வடக்கு நோக்கிப் பயணிப்பதென்பது அரிது. எனவே வரையுச்சியில் இருப்பவர் தெற்கு நோக்கியே இறங்குவதே வழக்காகக் கொண்டிருப்பதாலும் தெற்கு நோக்கிய கடவுள் என்று மலைச்சிகையில் வாழும் சிவனாரைக் குறிப்பிட்டிருக்கலாம்.
#viral #trending #edits #marvel #aanmigam #animetamil #naruto #devotional #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🌹தவத்திற்குத் தலைவன்
அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய இயல்பே தவத்திற்கு வடிவம் என்பார் ஐயன் திருவள்ளுவர்.
உலகிலுள்ள உயிருள்ள பொருள்களையும் உயிரற்றப் பொருள்களையும் பெருமானே அவற்றின் உள்ளே கலந்து நிற்பதனால் கலப்பினால் ஒன்றாயும் அப்பொருள்களை அவற்றின் உள்ளே நின்று செலுத்தும் வகையால் உடனாகவும் இறைவன் வேறு பொருள்கள் வேறு எனும் பொருள் தன்மையினால் வேறாகவும் நின்று அருள்புரிகின்றான் என்ற உண்மையை உணருமானால், தனக்கு வருகின்ற துன்பத்தினைத் தாங்கிக்கொள்ளும் செவ்வியை உயிர்கள் பெறும் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும்.
“பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய்ப் போற்றி, நீரிடை நான்காய் நிகழ்ந்தாய்ப் போற்றி, தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய்ப் போற்றி, வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய்ப் போற்றி, வெளியிடை ஒன்றாய் விளைந்தாய்ப் போற்றி “ என்று உயிரற்றப் பொருள்களான, நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற ஐந்தினில் பெருமான் எவ்வாறு கலப்பால் ஒன்றாய் நின்று அருளுகிறான் என்று மணிவாசகர் குறிப்பிடுவார்.
பெருமானின் திருவருள் துணையாலேயே உலகங்களும் கோள்களும் விண்மீன்களும் இயங்குகின்றன. இதனால் மேற்கூறியவற்றாலும் பிற உயிர்களினாலும் பிற சத்திகளினாலும் உலகிற்கும் உலக உயிர்களுக்கும் கிட்டும் இன்ப துன்ப உணர்வுகள் பெருமானாலேயே கொடுக்கப்படுகின்றன.
அதுவும் அனைத்தும் உயிர்களின் நன்மைக்காகவே கொடுக்கப்படுகின்றன.
எனினும் நம் விருப்பு வெறுப்புக்களினாலும் அறியாமையினாலும் சிலவற்றை இன்ப நுகர்வாகவும் சிலவற்றைத் துன்ப நுகர்வாகவும் எண்ணுகின்றோம் என்ற தெளிவு அல்லது செவ்வி ஏற்படுமாயின், உயிர் தனக்கு ஏற்படுகின்ற இன்ப துன்ப உணர்வுகளைப் பொறுத்துக்கொள்ளும்; அவற்றை ஒருபடித்தாகவே நுகரும். சரிசமனாக எல்லாவற்றையும் எதிர்கொள்கின்ற ஒக்கு நோக்கும் நிலை ஏற்படும். “கேடும் ஆக்கமும் கெட்டத் திருவினார், ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவர்” எனும் இருவினை ஒப்பு ஏற்படுதலையே தவம் முற்றுதல் என்று குறிப்பிடுவர்.
இன்ப நுகர்வு துன்ப நுகர்வு, நல்ல செயல் தீய செயல் என்ற வேறுபாடு அற்றவர் பிற உயிர்களைத் துன்பப்படுத்தி இன்பம் காணுதல் எனும் இழிய செயலுக்கு ஆளாக மாட்டார். மன்னுயிரைத் தன்னுயிர் போல காக்கவும் அதற்கு உதவவும் மட்டுமே துணிவர். ஆரியிர்களுக்கு அன்பு செய்யும் உயர்ந்த இயல்பைப் பெறுவர். இறைவன் வாழும் இடமாக எல்லா உயிர்களையும் போற்றி வணங்கி, அவை எப்பொழுதும் இன்புற்று இருத்தலையே வேண்டுவர். இதனையே, “ஆருயிர்களுக்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்” என்று வள்ளல் பிரான் குறிப்பிடுவார்.
இதுபற்றியே பிற உயிர்களின் மீது பரிவும் அன்பும் கொண்டு, இன்ப துன்பங்களை ஒருபடித்தாய் எதிர்நோக்கி வாழ்ந்த அருளாளர்களைத் தவச்சீலர்கள் என்கிறோம்.
தனக்கு வரும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வதற்கும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமலும் இருக்கின்ற தவத்தினை எய்துவதற்குச் சிலர் தங்களை அன்றாட உலக வாழ்க்கையிலிருந்து விடுவித்துக் கொண்டு, காவி அணிந்து, தாடியையும் மீசையையும் வெட்டாமல், துறவு கோலத்தோடு தங்களைக் காடுகளிலோ குகைகளிலோ தனிமை படுத்திக் கொள்கின்றனர். மூச்சுப் பயிற்சிகள் மூலமும் நீண்ட நேரம் அமரக்கூடிய இருக்கை வகைகளைக் கற்றுக் கொள்வதன் மூலமும் உலகை மறந்து இறைவனைத் தொடர்ந்து எண்ண முற்படுகின்றனர்.
அப்படி முயன்று இறைவனோடு அகத்திலே கூடி இருக்கின்ற அகத்தவ நிலையைச் சிவச்செறிவு அல்லது சிவயோகம் என்கின்றனர். இதற்குக் கடின பயிற்சியும் முயற்சியும் தேவையாகின்றது. இவர்கள் இப்பயிற்சியினால் கிட்டும் சிறு-சிறு சத்திகளான எட்டுச் சத்திகளைப் பெறுவர்.
உடலை மென்மையாக்கிக் கொள்ளல், உடலை நுண்மையாக்கிக் கொள்ளல், உடலைப் பருமையாக்கிக் கொள்ளல், விரும்பியதை எய்தல், விண்தன்மை அடைதல், ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல், சிற்சத்திகளை ஆட்சி செய்தல், தன்வயப்படுத்துதல் போன்ற எட்டு சிற்சத்திகளைத் துணைக்கொண்டு இறைவனை மேலும் தொடர்ந்து உய்த்து உணரவும் தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொண்டுப் பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதற்கும் மட்டுமே எண்ணுவர்.
இவ்வாற்றல்களை ஒருபோதும் எளிய உலகச் சிற்றின்பங்களைப் பெறுவதற்கும் நுகர்வதற்கும் பயன்படுத்தமாட்டார்கள்.
சிவ அறிவையும் திருவடிப்பேற்றினையும் பெறவே அவற்றைத் துணைக்கொள்வர். எது எப்படி இருப்பினும், அகத்தவம் இயற்றுகின்றவரும் பத்திநெறியில் நிற்பவரும் தங்களுடைய தவத்தினை இயற்றும்போது நினைவில் நிறுத்த வேண்டிய கடவுள் பரம்பொருளான சிவபெருமானே என்பது திருமூலர் வாக்கு.
நாம் இயற்றும் இவ்விருவகைத் தவங்களையும் நிறைவு பெறச் செய்யக்கூடிய இறைவன் சிவபெருமான் ஒருவனே! அவன் இட்ட பணிகளைச் செய்யும் இந்திரன், வாயு, வருணன், தீ, காலன், முதலாய தேவர்களும் ஒன்பது கோள்களும் அவனின் ஆணைப்படியே செயல்படுகின்றன. இறைவனின் ஆணைப்படி இயங்கும் தேவதைகளும் பிறவும் தாம் உய்வதற்குக் கால காலனாகிய, மகாதேவனாகிய சிவபெருமானையே வேண்டிப் பணிந்து நிற்கின்றன. சிவபெருமான் இல்லையேல் அவனுக்கு ஏவல் செய்யும் தேவர்களின் பணி இல்லாமல் போகும். இதனால் தேவர்களை எவரும் மதியாமல் போவர்.
தவத்திற்குத் தலைவனானவன் சிவபெருமானே! தவத்தின் முடிந்த முடிவாகிய வீடு பேற்றினை அளிப்பவனும் அவனே என்பதனை, “அவனை ஒழிய அமரரும் இல்லை, அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை, அவனன்றி மூவரால் ஆவதொன்றில்லை, அவனன்றி ஊர் புகுமாறு அறியேனே” என்று திருமுலர் குறிப்பிடுவார். உண்மைத் தவத்தினை இயற்றி நிலைத்தப் பேரின்பப் பெருவாழ்வினை அடைவோமாக!
இன்பமே எந்நாளும் துன்பம்
இல்லை
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 🦜 #🙏ஆன்மீகம்
விதியை வெற்றியாக மாற்று...
1)வாழ்க்கையில் விதி முறைகளை உருவாக்காதவனே விதி என்கின்றான்...
2)வெற்றியடைந்தால் அதிர்ஷ்டத்தின் விதி . தோல்வியடைந்தால் தலைவிதி.எதுவும் நடக்காவிட்டால் எல்லாம் என் விதி.
3) நீ விதைத்தது தான் விதி என்ற ரூபத்தில் உன் முன்னால் நிற்கின்றது.உன் தலையில்
விதைத்தை நீதான் அறுவடை செய்ய வேண்டும்.களைகளை அகற்றி விட்டால் அறுவடை அமோகமாகும்.
4)எதையும் கடந்தாகவேண்டும் எனும் பொழுது அதை விதி என்று கடக்க முயற்சிக்காதே. மதியால் கடக்க முயற்சித்துப் பார்.
5)உன் பலவீனம் தான் தலைவிதி ஆகின்றது. உன் பலம் விதிக்கு தலைவன் ஆக்குகின்றது.
6)எல்லாம் தலைவிதி என்று தலைகுனிந்து செல்பவனுக்கு ராகு-கேது திசையும்,எதையும்
பார்த்து விடலாம் என்று தைரியமாக தலை நிமிர்ந்து நடப்பவனுக்கு குரு திசையும், சுக்கிர திசையும் உண்டாகிறது.
7)தலையில் தான் விதி உருவாகின்றது. நல்லதை பார் நல்லதைப் பேசு நல்லதை கேளு நல்லதை நினை உன் தலையின் விதி தானாக அதிர்ஷ்டம் நிறைந்ததாக மாறும்.
8)கவலைப்பட்டு தலைவிதி என்று சொல்லாதே மகிழ்ச்சியோடு இதைக் கடந்து செல்வேன் என்று சொல்லு உன் எண்ணம் போல் ஆகும்.
9)விதிப்பயன் அனைவருக்கும் வரவே செய்யும். எனவே, இப்பொழுதாவது விதியின் பயனை மாற்று .மனச்சோர்வை அடைவது தான் தலைவிதி என்று சொல்வது.
10)தலைவிதி என்று சொல்பவன் மூன்று வேளை சாப்பிடாமல் இருப்பது இல்லை. உண்மையாகவே தலைவிதி என்று சொல்லி வாழ்பவன் சாப்பிடாமல் இருந்து வாழ்ந்து காட்டவேண்டும்.
11)அழகான காரியங்களைச் செய் அது ஆசீர்வாதங்கள் நிரம்பியதாக இருக்கட்டும். அதுதான் நீ பூமியில் வாங்கும் வரம். அதுதான் உன் தலைவிதியாக உருவாகின்றது.
12) தலைவிதி தான் உன்னை செல்வந்தனாக, ஏழையாக மாற்றுகின்றது.நீ பிறருக்கு செய்யும் குறிப்பறிந்த உதவியால் செல்வந்தன் ஆவாய். அந்த விதியை இப்பொழுதிருந்தே உருவாக்க ஆரம்பி.
13)தலைவிதி மூன்று விஷயங்களை உன் வாழ்வில் நிர்ணயிக்கின்றது. கடந்தகாலத்தில் நீ செய்தது, நிகழ்காலத்தில் நீ செய்து கொண்டிருப்பது, வருங்காலத்தில் உனக்கு நிகழப்போவது.ஆக நிகழ்காலத்தில் உன் வாழ்வை எதிர்கால விதியாக மாற்றுவது உன் கையில்தான் உள்ளது.
14)உடலால் உதவிசெய் உடல் நோய்கள் தீரும். செல்வத்தால் உதவி செய் சென்ற அனைத்தும் வந்து சேரும். மனதார உதவி செய் மனப் பிரச்சினைகள் யாவும் முடிவுக்கு வரும்.இதைத் தான் "இனி ஒரு விதி செய்வோம்" என்பது.
15) நீ நேர்மையாக நடப்பது தான் உனது தலைவிதியை உருவாக்கும். நீ நாணயமாக நடப்பது தான் உன் தலையெழுத்தாகும்.நீ உண்மையாக நடப்பது தான் உன்னையே உருவாக்கும்.
16)மனித வாழ்க்கையில் மனிதனுக்குரிய தர்மங்களை கடைபிடி தர்மம் தலைகாக்கும். தலையை தர்மம் காப்பது தான் நம்முடைய தலைவிதி என்பது.
17)தலை எழுத்துக்கும் தலை விதிக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. இப்பொழுது நீ பார்ப்பது பேசுவது கேட்பது செயல்படுவது எல்லாம் சித்ரகுப்தனின் கணக்கில் தலையெழுத்தாகும் பிறகு அது உன் தலைவிதியாகும்.
18) தந்தை ஈசனை நினைப்பவனுக்கு மூன்று கால தலைவிதியும் மாறும். அதனால் தான் இவ்வுலகில் தந்தை ஈசனுக்கு மூன்று கண்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கண்ணான ஆத்மா என்ற நெற்றிக்கண்
மறைமுகமாக உள்ளதால் தலை விதியும் மறைமுகமாகவே உள்ளது. #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய
மனமே மனமே
அறிமனமே...
தினமே குகனைப்
பணிமனமே...(மனமே...)
வடிவேல் தருமே
சுகம் சுகமே...
நொடியும் மறவா
திருமனமே...2.(மனமே...)
களமே நமதாய்
வரும்மனமே...
கலகம் விலகும்
பொறுமனமே...
உளமே அறிவாய்
தினம் தினமே...
உயிரும் குகனே
தெளி தினமே...2.(மனமே...)
நெற்றியின் வெஞ்சுடர்
கொட்டிட வந்தவன்
பற்றினைக் கொள்மனமே...
வெற்றிகள் வந்திடும்
வித்தகம் தந்திடும்
கற்றிடு நல்மனமே...2.(மனமே...)
நித்தமும் வேலனைச்
சித்தமும் தேடிடப்
பக்தியில் நில்மனமே...
சத்திய மானவன்
சங்கடம் தீர்ப்பவன்
புத்தியில் வைமனமே...2.(மனமே...)
அத்தனை குறைகளும்
சட்டென மறைந்திடும்
சித்தனைச் சொல்மனமே...
அச்சுதன் மருகனை
மெச்சிட வளர்பிறை
நிச்சயம் வெல்மனமே...2.(மனமே...)
#murugan #murugan #Muruga #thiruchentur murug
an #ogm murug
சிவ சிவ
மெய்தவத்தின் சிறப்பு
====================================================================
கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற ஐம்புலன்களினால் ஏற்படும் அவாக்களை வென்று உலகப் பற்றுக்களை விட்டவர், மெய்ப்பொருளான சிவத்தை அடைந்து விடுவர் என்பது தவறான கூற்று என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.
உலகப் பற்றுக்களை விட்டு விலகி, மெய்ப்பொருளை விரும்பும் தலைப்பாட்டில் மனதை ஈடுபடுத்தி, அத்தலைப்பாட்டில் விருப்பம் மிகுவதற்கு முயற்சி செய்வதே தவம் என்றும் சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.
இதனால் துறவு என்பது மட்டுமே தவமாகி விடாது என்பதுவும் துறவு தவநெறிக்கு வாயிலாக மட்டுமே அமைகின்றது என்பதும் உணரப்படுகின்றது.
உலகப் பற்றுக்களில் இருந்து மீட்ட உள்ளத்தைப் பின் இறைவனின் திருவடிக்கீழே ஒடுங்கி நிலைநிற்கச் செய்யும் முயற்சியைத் தவம் என்றும் இத்தவம் வெற்றி பெறும் போது சிவஅறிவு கிட்டும் என்றும் மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.
உலகப் பற்றுக்களில் இருந்து விலகி மனதை இறைவனின் திருவடியின் கீழ் குவிக்கும் தவ முயற்சிக்குத் துணை நிற்பவையே சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனும் நன்னெறி நான்காகும்.
உலகப் பொருள்களின் மீது மனம் பரந்து செல்லுதலை விட்டு விலகி, இறைவனது திருவடியின் கீழ் சென்று ஒடுங்கி நிலைபெற்ற உயர்ந்த தவமுடையவர்களின் உள்ளங்கள், யாது ஒன்றிற்கும் அஞ்சுவது இல்லை என்கின்றார் #திருமூலர்.
இவ்வுயர்ந்த தவமுடைய இவர்களிடம் எமன் என்ற கூற்றுவன் செல்வதில்லை என்றும் இவர்களுக்கு வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை என்கின்றார் #திருமூலர்.
இவர்கள் இரவு, பகல், நிறைமதிநாள், கரிநாள் போன்ற காலவேறுபாடுகளைக் கருதுவதில்லை என்றும் இவர்கள் இவ்வுலகில் வாழ்வதனால் எந்த ஒரு பயனும் இல்லை என்ற நிலையில் வாழ்பவர்கள் என்றும் #திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை,
“ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்,
நடுங்குவதில்லை நமனும் அங்கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை,
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே”
என்று #திருமூலர் குறிப்பிடுகின்றார்.
உயர்தவம் உடைய பல நல்லடியார்களில் குறிப்பிடத்தக்கவர் #திருநாவுக்கரசு அடிகள். சமணர்கள் அவரைத் தரையில் கிடத்தி, யானையை ஏவி, அவரைக் கொல்ல முயன்ற போது, அவர் அருளிய,
“சுண்ணவெண் சந்தனச் சாந்தும் ….”
என்று தொடங்கும் திருப்பதிகத்தின் வழி அவரின் உயரிய தவ வலிமையினை உய்த்து உணரலாம்.
பெருமானின் திருவடிக்குத் தாம் ஆளாகி விட்டமையால், வானம் இடிந்து விழுந்தாலும் மண் கல்தூணாக மாறினாலும் உதர்ந்த மலை தகர்ந்து பொடியாகினாலும் குளிர்ந்த நீரையுடைய கடலில் விண்மீன்கள் விழுந்தாலும் கதிரவனும் மதியும் வானிலிருந்து கீழே விழுந்தாலும் தான் அஞ்சுவது என்பது ஒன்றும் இல்லை எனவும் இனி அவர் அஞ்சும்படியாக வரப்போவது ஒன்றும் இல்லை என்று கூறிச் சற்றும் கலங்காது மதங்கொண்ட யானையை வென்று காட்டினார்.
சமணர்களின் பொய்யுரையில் மதிமயங்கித் திருநாவுக்கரசு அடிகளுக்குத் தண்டனை கொடுப்பதற்காக, ஏவலாளர்களை ஏவி, #திருநாவுக்கரசரை மன்னன் அழைத்துவர அனுப்பியபோது,
“நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் …”
என்று கூறித் தாமே சென்றதன் வழி திருநாவுக்கரசரின் மெய்த்தவ நிலையினையும் அவரின் அஞ்சாமையையும் தெளியலாம்.
உலகப் பற்றுக்களில் இருந்து விலகுவதற்கும் பின்பு இறைவனின் திருவடியில் மனத்தைக் குவித்து அதில் மேலும் பெருவேட்கையுடன் தலைப்படுவதாகிய தவத்திற்கும் இறைவனின் திருவருளே அடிப்படையாகின்றது என்கின்றார் #திருமூலர்.
உண்மைத் தவத்தினை அடைதற்கும் அதில் நிலைத்து நிற்பதற்கும் அடிப்படையாக இறைவனின் திருவருளைப் பெறுதல் இன்றியமையாதது இறைவழிபாடே என்கின்றார் #திருமூலர்.
இதனை, “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று #மணிவாசகரும் குறிப்பிடுவதனைப் போன்று, பெருமானின் திருவருளை வேண்டி நின்று செய்கின்ற வழிபாடே பின்பு இறைவனின் திருவருளைப் பெறுவித்து மெய்த்தவத்திற்குத் துணை நிற்கும் என்பதனை,
“எம்ஆர் உயிரும் இருநிலத்தோற்றமும்,
செம் மாதவத்துச் செயலின் பெருமையும்,
அம்மான் திருவருள் பெற்றவரே அல்லால்,
இம் மாதவத்தின் இயல்பு அறியாரே”
என்று #திருமூலர் குறிப்பிடுகின்றார்.
இறைவனின் திருவருளைப் பெறாதவர் மெய்த்தவம் அல்லாதனவற்றைத் தவமென்று எண்ணி மயங்கி அல்லல் உறுவார்கள் என்றும் #திருமூலர் குறிப்பிடுகின்றார்.
உலகப் பொருள்களையும் சிற்றின்பங்களையும் சிற்றாற்றல்களையும் எண்ணிச் செய்யப்படுகின்ற முயற்சிகள் தவம் ஆகா என்கின்றார் #திருமூலர்.
உலக நோக்குடைய முயற்சிகளையும் பலர் தவம் என்றே குறிப்பிடினும் அவை மெய்த்தவம் ஆகா என்கின்றார் #திருமூலர்.
பற்றுக்களை விட்டு இறைவனின் திருவடிக்கீழ் உள்ளத்தினை குவிய வைக்கும் பெரு முயற்சியில் வெற்றி காண்பவரே உண்மைத் தவசிகள் ஆவர் என்பார் #திருமூலர்.
அவர்களே மெய்த்தவம் உடையவர்கள். மற்றவர்கள் தவ வேடம் பூண்டவர்களே ஒழிய உண்மைத் தவசிகள் ஆகமாட்டார்கள் என்று #திருமூலர் குறிப்பிடுகின்றார்.
பொறி புலன்களை அடக்கி இருந்து, உண்டி சுருங்குதல், எளிய உடை, விலையுயர்ந்த அணிகலன்களைத் தவிர்த்தல், தன்னை அழகு செய்து கொள்வதில் முனைப்பு காட்டாமல் இருத்தல் போன்றவற்றால் உயர்ந்த தவநெறியில் நிற்க முனைபவரின் மனதைக் கலைக்க இந்திரனே நேராக வந்தாலும் அல்லது இந்திர உலகப் பேரின்பங்களே ஒட்டுமொத்தமாகத் திரண்டு வந்தாலும் உண்மைத் தவமுடைய பெரியோர்கள் தங்களின் உள்ளம் சிவனின் திருவடியில் குவிந்து கிடத்தலில் இருந்து சற்றும் தடுமாறாதவர்கள் என்று #திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை,
“இருந்து வருந்தி எழிதவம் செய்யும்,
பெரும்தன்மை யாளரைப் பேதிக்க என்றே,
இருந்து இந்திரனே எவரே எனினும்,
திருந்தும்தம் சிந்தை சிவன்அவன் பாலே”
என்று #திருமூலர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு அல்லாது வெறும் தவக்கோலம் மட்டும் பூண்டு உள்ளம் தடுமாறுகின்றவர்கள் தவ முயற்சியினை விடுத்த அவமுயற்சியே மேற்கொள்வர் என்கின்றார் #திருமூலர்.
ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் மெய்த்தவமே சிறிது சிறிதாகப் பெருகி வேறு ஒரு பிறவியில் முதிர்ந்து முற்றுப் பெறும் என்பது #திருமூலரின் குறிப்பாகும்.
பெருமானின் திருவருளே மெய்த்தவத்திற்கு வாயில் என்று அவனின் திருவருளைப் பெறுவதற்குச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனும் நன்னெறி நான்கினால் வழிபாடு இயற்றிப் பற்று அற்று உள்ளத்தை அவனது திருவடிகளில் குவிப்பதற்கு வேட்கை கொண்டு வெற்றி பெறுகின்ற மெய்த்தவத்தவர்களே கண்ணுக்குப் புலனாகாத, மறைபொருளாகிய சிவனை வெளிப்பட்டு நிற்கும் நிலையில் காண வல்லவர்கள் என்கின்றார் #திருமூலர்.
மெய்த்தவத்தில் சிறந்த நாயன்மார்களே இறைவனை வெளிப்பட்டு நிற்கும் நிலையில் கண்டவர்கள். இறைவனின் திருவடிக்குத் தங்கள் உள்ளங்களைத் தலைப்படுமாறு சிறப்புற நின்ற நாயன்மார்களே உண்மைத் தவத்திற்குத் தலையானவர்கள் ஆனார்கள் என்கின்றார் #திருமூலர்.
உலகக் கல்வியில் நுண்ணறிவு மிக்கவர்களாய் விளங்கிய அறிஞர்களும் வெறும் நூலளவு சமயப் பேராசான்களாய் விளங்கியவர்களும் அறிவு கூர்மையுடைய ஆட்சியாளர்களும் தொழில்திறன் நுண்மையாளர்களும் பெரும் பெரும் பதவியில் இருந்தவர்களும் செல்வந்தர்களும் உண்மை தவத்தை நோக்கி வாழ்வினைச் செலுத்தாவிடின் வெறுமனே காலத்தால் மறக்கப்படுவர் என்கின்றார் #திருமூலர்.
மாறாக எளிய மாந்தரும் உய்யுமாறு சிவன் உயிர்களுக்குக் காட்டிய ஒப்பற்ற உண்மைத் தவநெறியினைப் பின்பற்றி வாழ்வார்களேயானால் அழிதல் இல்லாத, இறப்பு இல்லாத பேரின்பப் பெருவாழ்வினை அடைந்து உலகம் போற்ற நிலைத்து நிற்கலாம் என்கின்றார் #திருமூலர்.
சமய நூல்களையும் ஒழுக்க நூல்களையும் ஓதுவதே பெருமை என்று தருக்கித் திரியாதும் வழிபாட்டின் உண்மை நோக்கத்தினை உணராது செய்யும் வழிபாட்டுச் செயல்முறைகளையே பெரிதாக எண்ணித் தருக்கித் திரியாமலும் சிறுபொழுதேனும் அறிவை அகமுகப்படுத்தி அறிவினுள் நிற்கும் அறிவை நோக்க முயலுங்கள்!
அறிவினுள் நிற்கும் அறிவான இறைவனை நோக்கும் நோக்கமானது பச்சை மரத்தில் அறையப்பட்ட ஆணி அதனுள் நன்றாகப் பதிவது போல நம்முடைய அறிவினுள்ளே நன்கு பதியப் பதிய அச்சிறு தவம் பெருந்தவமாகக் கூடி, பிறவிகள் தோறும் உடம்பைப் பிணித்து வருகின்ற பிறப்பை நம்மை விட்டு விலகச் செய்துவிடும் என்கின்றார் #திருமூலர். இதனைச்,
“சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்,
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்,
பார்த்த அப்பார்வை பசுமரத்து ஆணிபோல்,
ஆர்த்த பிறவி அகலவிட்டு ஓடுமே”
என்று குறிப்பிடுகின்றார் #திருமூலர்.
உலகப் பற்றுக்களிலேயே உழன்று, அகத்தில் அறிவுக்கு அறிவாய் இருக்கின்ற பெருமானை அகத்தில் எண்ணாமல் வாழ்நாளை வீணடிக்கின்ற அவல நிலைக்கு ஆளாகாமல் விரைந்து பெருமானை அகத்தில் என்ணுவோம்.
அவனின் திருவடிக்கு உள்ளத்தைக் குவிப்போம். உண்மை தவத்திற்குத் தலைப்படுவோம்.
நமசிவாய வாழ்க #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #🙏ஆன்மீகம்
சிவ சிவ
#மாணிக்கவாசகரின்
பாடல்
***********
இருள்திணிந்து எழுந்திட்டு அதுஓர்
வல்வினைச் சிறுகுடில் இதுஇத்தைப்
பொருள்எனக் களித்து அருநரகத்து
இடைவிழப் புகுகின் றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை
இடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி
நீக்கிய அதிசயம் கண்டாமே.
{அதிசயப் பத்து, பாடல் – 10 (437)}
இருள் – ஆணவம், அறியாமை |
தெருளும் – அறிவின் தெளிவு |
மும்மதில் – மூன்று மதில்கள்
(மதில்களோடு கூடிய முப்புரம்
(மும்மலம்)) | நொடிவரை இடிதர –
நொடியில் இடிந்து போகுமாறு |
மெய்ந்நெறி – மெய்ப்பொருளாகிய
இறைவனைச் சேர்வதற்குண்டான
வழிமுறைகள் | பொய்ந்நெறி –
பேரின்பமாகிய இறைவனிடத்தில்
சேரவொட்டாமல் அலைகழிக்கும்
சிற்றின்ப வேட்கை
பாடலின் விளக்கம்
*************************
ஆணவமெனும் அறியாமையிருள் செறிந்து, எமது முன்னைய வல் வினைகளினால் இவ்வுலகினில் உண்டானச் சிறு குடிசையிந்த உடல்.
இதைப்போய் நிலைத்த மெய்பொருளென்று மயங்கி, இதன் சிற்றின்ப நாட்டங்களின்கண் ஆட்பட்டு, பிறவிச் சுழலெனும் மீளா நரகத்தினுள்ளே விழவிருந்த எம்மை,
மெய்ப்பொருளாகிய இறைவன், தம் தூய அறிவெனும் சினத்தில் எழும் அதன் தெளிவாகிய செந்தழலால், எமது மயக்கத்திற்குக் காரணமாய் அமைந்த மலமாகிய மும்மதில்களையும் நொடியில் எரித்துத் தகர்த்தழித்து, எமை ஆட்கொண்டு அருளிய மெய்நெறியினால், இதுவரை பயின்றுவந்த எமது சிற்றின்பப் பொய்நெறி நீங்கிய அதிசயத்தை யாம் கண்டு அனுபவித்தோம்!
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
ஒம் நமசிவாய 🙏
குறைவு இலா நிறைவே
கோது இலா அமுதே
ஈறு இலாக்
கொழுஞ் சுடர்க் குன்றே
மறையுமாய்
மறையின் பொருளுமாய்
வந்து என் மனத்திடை
மன்னிய மன்னே
சிறைபெறா நீர் போல்
சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந்துறை உறை
சிவனே
இறைவனே நீ
என் உடல் இடம் கொண்டாய்
இனி உன்னை
என் இரக்கேனே
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
#திருச்சிற்றம்பலம்
ஈசனை மட்டுமே வணங்குவோம்
============================
நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிவ தரிசனத்திற்கும் நிச்சயம் அளவற்ற பலன் உண்டு.
எங்கோ எப்போதோ யாருக்கோ செய்த பாவங்கள் கூட ஈஸ்வரனை தரிசிக்கும்போது பஞ்சாய் பறந்து போகும்.
பாவங்களை கழுவிக் களைவதில் ஈஸ்வரனுக்கு நிகர் ஈஸ்வரனே.
ஆகையால் தான் புராணங்கள் முதல் இதிகாசங்கள் வரை அனைவரும் பாவங்களை தீர்க்க பரமேஸ்வரனை பூஜிக்கிறார்கள்.
பொதுவாக ஒருவருக்கு நாம் தீங்கிழைத்துவிட்டாலோ, பாவமிழைத்துவிட்டாலோ சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்கள் மன்னித்தால் தான் நாம் பாவத்தை போக்கிக்கொள்ளமுடியும்.
அவர்களுக்கு தீங்கிழைத்துவிட்டு வேறு ஒருவரிடம் போய் மன்னிப்பு கேட்டால் அது செல்லுபடியாகாது.
அதாவது பாவம் ஒரு இடம் பரிகாரம் ஒரு இடம் என்று செய்யமுடியாது.
ஆனால், பரமேஸ்வரனை தஞ்சமடைவதால் மட்டும் எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ளலாம்.
பிரசித்தி பெற்ற ஆலயங்களின் அனைத்து தல வரலாறுகளிலும் இந்த பேருண்மையை நீங்கள் காணலாம்.
இந்திரன் முதலிய தேவாதி தேவர்கள் வரை தாங்கள் செய்யும் பாவங்களுக்கும் தவறுகளுக்கும் பரிகாரமாய் ஈஸ்வர பூஜை தான் செய்வார்கள்.
பரமேஸ்வரனைத் தான் பூஜிப்பார்கள்.
ஈசனைத் தான் தொழுவார்கள்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறினால் அதற்கு அப்பீல் ஏது ?
நமசிவாயம்
வாழ்க #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
ஒம் நமசிவாய 🙏
குறைவு இலா நிறைவே
கோது இலா அமுதே
ஈறு இலாக்
கொழுஞ் சுடர்க் குன்றே
மறையுமாய்
மறையின் பொருளுமாய்
வந்து என் மனத்திடை
மன்னிய மன்னே
சிறைபெறா நீர் போல்
சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந்துறை உறை
சிவனே
இறைவனே நீ
என் உடல் இடம் கொண்டாய்
இனி உன்னை
என் இரக்கேனே
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம்


