
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
🌙 #இரவு #சிந்தனை 🌙
🌹 *17.11.2025* 🌹
🌷 *பறப்பதற்கு வானம் இருக்கிறது.சிறகுகளுக்கு காத்திருந்தது சிறைப்பட்டு இருக்காதே* 🌷
🌷 *பறக்க முயற்சி செய் சிறகுகள் வரும் போது அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்* 🌷
🌷 *உங்களது சிறப்பைக் கொடுங்கள். ஏதேனும் ஒரு முயற்சியில் உங்களால், ஜெயிக்க முடியாமலே போகலாம்* 🌷
🌷 *அப்போதெல்லாம் என்னால் முடியாது என ஒதுங்கிப் போகாமல், எவ்வளவு தான் நம்மால் முடியும் என சுயபரிசோதனை செய்து தான் பாருங்களேன்* 🌷
🌷 *உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்* 🌷
🌷 *எந்தச் செயல் செய்த போதிலும் திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்துக் கொள்வோம்* 🌷
🌷 *நம்மிடம் பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்* 🌷
🌷 *ஆனால், இந்தத் திறமையின் மூலம் வெற்றி பெற்று விடலாம்.. வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம்* 🌷
🌷 *முட்டை வெளியில் இருந்து உடைக்கப்பட்டால் ஒரு வாழ்க்கை முடிவடைகிறது* 🌷
🌷 *அதே முட்டை உள்ளிருந்து உடைக்கப்பட்டால் ஒரு வாழ்க்கை துவங்குகிறது* 🌷
🌷 *வெற்றியின் ரகசியம் எப்பொழுதும் நமக்குள் தான். வீணாக வெளியில் தேடுவதில் பலனில்லை. ஆகையால் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம் 🙏 👍👍👍* 🌷
🤲 முருகா இன்றைய 17-11-2025 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 18-11-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா⚜️
🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌
🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஓம் முருகா #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #murugan #Muruga
#🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில்
இனிய சிவ மாலை
வணக்கம் 🙏 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏
சிவ ருத்ர மந்திரம் :
நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
ஸதா சிவாய ஸ்ரீ மன் மஹாதேவாய நம
அரகர சிவசிவ 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
சிவோஹம் 🙏✨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🕉️ஓம் முருகா
நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா..?
இனிய சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது.
ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது.
இனிய சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. இதனால்தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார்.
இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார். புரிந்துவிட்டதா..? இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள்.
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #👉வாழ்க்கை பாடங்கள் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🌹இன்று கார்த்திகை மாத முதல் சோமவாரம்
🚩சந்திரனின் சாபம் போக்கிய கார்த்திகை சோமவார விரதம்..
சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பான விரதமாக கடைப்பிடிக்கப்படுவது கார்த்திகை சோமவார விரதமாகும். சிவபெருமானை நினைத்து செய்யப்படும் இந்த விரதம் ஈசனின் அருளைப் பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும் விரத முறையாகும். திங்கட்கிழமை என்பது சோம வாரம் என்று அழைக்கப்படுகிறது. சிவனை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ள ப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது.
இந்த விரதத்தை கார்த்திகை முதல் சோமவார த்தில் இருந்து சோமவாரம் அனைத்தும் கடை ப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும். இல்லையெனில் 1, 2, 3, 12, 14 ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் செய்து விரதத்தை தொடங்க வேண்டும்.
சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்ல பட்ச அஷ்டமி திதியில்தான். பெரியவன் ஆன தும், ராஜசூய வேள்வி ஒன்றை நடத்தி, பெரும் புகழை அடைந்தான். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது 27 பெண்களை யும் சந்திரனுக்கு மணம் முடித்து கொடுத்தான். ஆனால் சந்திரன், 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள்.
பெண்களின் வருத்தத்தை அறிந்த தட்சன், சந்திரனை வரவழைத்து, ‘'அனைத்து பெண்க ளிடமும் அன்பாக இரு’' என்று கூறினான். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘'அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவாய்’' என்று சாபம் கொடுத்தான்.
தட்சனின் சாபத்தால், தான் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மா விடம் சென்று முறையிட்டான். அவரோ சிவபெ ருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தி னார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடி யில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.
சந்திரன், சிவபெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.
🚩விரதம் இருக்கும் முறை :
சோமவார விரதத்தை கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவ தும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லை யென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.
ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்க வேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.
கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கி ய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்ப து நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப் பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் பாவங்கள் அகலும், நோய் அண்டாது என்பது ஐதீகம்.
🌹ஓம் நமசிவாய.. #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
♦️♦️கார்த்திகை மாத சிறப்புகள்...
🚩🚩கார்த்திகை மாதத்தின் சிறப்பையும், இந்த மாதத்தில் வணங்க வேண்டிய தெய்வ வழிபாடுகள் பற்றிய சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.
🌹கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.
🌹கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத் தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்ச னை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
🌹விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக் கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்தி கை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.
🌹கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.
🌹விஷ்ணு பகவானை கார்த்திகை மாத த்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதா ன மோட்ச நிலையை அடைவார்கள்.
🌹கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.
🌹கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.
🌹கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனு ஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடு பட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்க ள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத் தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.
🌹முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று. சிவபெருமானி ன் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிக ளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த் திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்தி ரமாயிற்று.
🌹கார்த்திகை திங்களில் பவுர்ணமி யோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார் த்திகைத் தீபத் திருநாளன்று திபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.
🌹கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.
🌹கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்றுஇந்து மதம் கூறுகிறது.
🌹கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் திபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களை யும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
🌹கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்ற தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.
🌹கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தி லும், முடிவிலுமாக இரு நாட்களில் கார்த் திகை நட்சத்திரம் வருமானால் இரண்டாவ தாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
🌹கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
🌹வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.
🌹கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினார், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.
🌹கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.
🌹கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.
🌹திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
🌹கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.
நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
🌹கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.
🌹கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.
🌹கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றால நாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.
🌹ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.
🌹கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஒட்டிச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
🌹கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.
🌹கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு. கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும். கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
🌹கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்குரிய பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.
🌹தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
🌹கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.
🌹கார்த்திகையில் விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.
🌹நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.
🌹ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷங்கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.
🌹கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.
🌹கார்த்திகை மாத அமாவாசை அன்று தான் திருவிசநல்லூரில் ஸ்ரீரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரபசித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவசிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.
🌹சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சாத்தி கவசம் போட்டிருப்பர்.கார்த்திகை பவுர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.
🌹திருநெல்வேலி- நெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.
🌹பாலக்காடு அருகே உள்ள ஊர் கல்பாதி. இங்குள்ள ஸ்ரீவிஸ்வ நாதஸ்வாமி ஆலயத்தில், கார்த்தி கைத் தேரோட்டம் விசேஷம். பூரி ஜெகநாத சுவாமி கோயில் தேரோட்ட வைபவத்தை அடுத்து, இங்குதான் பெரியளவில் தேரோட்டம் நடைபெறுகிறதாம். இங்கே, 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரினை யானைகள் இழுப்பது சிறப்பு!
🌹குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!
🌹கார்த்திகை மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு யெக்ஞபுருஷன் என்றும் பெண் குழந்தைகளுக்கு லட்சுமி என்றும் பெயர் வைக்கலாம்.
🌹கார்த்திகை மாதம் ரமா ஏகாதசி மிகவும் சிறப்பான நாளாகும். ‘ர’ என்றால் நெருப்பு, ‘மா’ என்றால் தாய். அதாவது ஒளி பொருந்திய ஏகாதசி என்று பொருள். இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி பதினோரு முறை வலம் வந்து வணங்குவதினால் தாயின் அன்பு போல் பெருமாளின் அருள் கடாட்சம் பெருகி வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், மன நிம்மதி அதிகரிக்கும்.
🌹கார்த்திகை மாதம் லட்சுமி ப்ரபோதன தினத்தன்று மாலை லட்சுமி பூஜை செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.
🌹கார்த்திகை மாதம் பஞ்சமி தினமானது நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.
🌹கார்த்திகை மாதம் அனங்க திரைபோதசி தினத்தன்று ரதி- மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்.
🌹கார்த்திகை மாதப் பவுர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும்.
🌹கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.
🌹கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
🌹கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
🌹கார்த்திகை மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.
🌹ஏழை-எளிய மக்களுக்கு கேட்டதை வழங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு. #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #கார்த்திகை #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏻சரணம் ஐயப்பா #🙏ஆன்மீகம்
🕉🌼🙏ஓம் நமசிவாய 🙏🌼🕉
🕉#இன்று தோஷங்கள் நீக்கும் கார்த்திகை சோமவார பிரதோஷம் 17/11/2025
🕉🌼🙏#கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் பெற்று பேறு பெற்றான்.
🕉#கார்த்திகை சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார் நாம் தொட்டதெல்லாம் துலங்கும்.
🕉#பொதுவாகவே பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய் பயம் போன்றவை விலகும். 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகி விடுவார்கள். தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.
🕉#சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். இன்றைய தினம் சிறப்பு வாய்ந்த கார்த்திகை சோமவார பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது.
🕉#சோமவார பிரதோஷ தினமான இன்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம். மல்லிகை, வில்வம், மருக்கொழுந்து மலர்களை ஈசனுக்கு கொடுக்கலாம். பச்சரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து, அதோடு வெல்லம் சேர்த்து, காப்பரிசியாக்கி நந்திக்கு நிவேதனம் செய்யலாம். ஈஸ்வரனுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம், பானகம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட நன்மைகள் நடைபெறும்.
🕉#சந்திரனை தலையில் சூடி சோமசுந்தரனாக காட்சி அளிப்பவர் சிவபெருமான். கார்த்திகை சோமவார விரதம் இருந்து சங்காபிஷேகம் தரிசனம் செய்தால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். கார்த்திகை சோமவாரம் விரதம் இருந்து சிவ ஆலயம் சென்று வணங்கினால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள். உடலும் மனமும் ஆரோக்கியமடையும்.
🕉#ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்குத் தோஷம் போக்கவும் வளர்பிறை பிரதோஷம் வாழ்வின் வளம் சேர்க்கவும் ஏற்றதாகும்.
🕉#இன்று கார்த்திகை முதல் சோமவாரம் தேய்பிறை பிரதோஷ நாளாகவும் வருகிறது. எனவே இன்றைய தினம் மறக்காமல் சிவ ஆலயம் சென்று நந்தி கொம்புகளுக்கு இடையே நடனமாடும் சிவ தரிசனம் காண்பது சிறப்பாகும்.
🕉#எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🕉🌼🙏
🕉🌼🙏திருச்சிற்றம்பலம்🙏🌼🕉 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏ஆன்மீகம் #👉வாழ்க்கை பாடங்கள்
#🙏🏻சரணம் ஐயப்பா ♦️♦️
♦️♦️கார்த்திகை மாதம் முதல் நாள்.
🌹 சபரிமலை= சிறப்புத் தகவல்கள்.
🚩ஐயப்பன் படையில் சேனாதிபதியாக இரு ந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டு படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள் ளார். அவருக்கு முந்திரி மற்றும் திராட்சை படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.
🚩சபரிமலை ஐயப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.
🚩சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சன்னிதானம் அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம்.
🚩நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண் களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.
🚩சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறந்து இருக்கும். அந்த நாட்களை தெரிந்து கொண்டு பக்தர்கள் சென்று வரலாம்.
🚩சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணி க்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.
🚩ஐயப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்க ளை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.
🚩ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் இளநீர் ஆகியவற்றுடன் 108 ஒரு ரூபாய் நாணயம் என எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷே கத்திற்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.
🚩ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்க வைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப் போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.
🚩சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தி அன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம் மற்றும் புல்மேடு ஆகிய இடங்களில் இருந்து ம் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.
🚩சபரிமலை ஐயப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப் பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு ஐயப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்திற்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாதவர்கள் இந்த சமயத்தில் ஐயப்ப உற்சவரை தரிசிக்கலாம்.
🚩சபரிமலை ஐயப்பன் கோவிலில் 'தத்துவமசி" எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், 'நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்" என்று பொருள்.
🚩சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளி வாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தங்கள் விரதத்தையும், பிரம்மச்சரியத்தையும் முழுமையாக கடைபிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுதான் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
🚩பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை ஐயப்பனின் ஆபரண பெட்டியை சுமந்துவர 15 சங்கங்கள் உள்ளன.
🚩திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் என்ப தை போல சபரிமலை அரவணை பாயசம் புகழ் பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை கலந்து அரவணை பாயசம் தயாரிக்கப்படுகிறது.
🚩வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்து விட்டால் மீண்டும் இந்த பிறவி பெருங்கடலை நீந்த வேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.
🙏🙏🌹சுவாமியே சரணம் ஐயப்பா....
🌹
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ



