ஸ்ரீ (969)திருவஹீந்திரபுரம் ஸ்ரீ ஹேமாம்புஜவல்லி தாயார்
ஸமேத ஸ்ரீ தேவநாத பெருமாள் திருவடிகளே சரணம்...!!!
.
தேவர்களுடன் போர் புரிந்த அசுரர்களிடம் பிரமன் சிவனாரை துணை கொள்ளுமாறு கூறி , திருமால் தன் சக்ராயுதத்தை ஏவி அசுரர்களை அழிக்க, அசுரர்கள் அவரிடமே தஞ்சமடைய, எம்பெருமான் தாமே மும்மூர்த்தியாகவும் அருள் பாலிப்பதாக உரைத்து தன் மேனியில் சிவன், விஷ்ணு, பிரமன் எனற மூன்று உருவங்களையும் காட்டிய சிறப்புடைய தலமாகும் இது.
.
தேவர்களைக் காத்தவன் என்பதால், இங்கு தேவநாதப் பெருமாள் என்னும் பெயர்
.
பெருமாள் இங்கு நித்ய வாசம் செய்வதை அறிந்து ஆதிசேஷன் இங்கு ஒரு நகரத்தையே நிர்மாணித்தான். அதுவே திரு அஹிந்த்ர (ஆதிசேஷன்) புரம் என்றாயிற்று. மற்றொரு சிறப்பு இங்கு பெருமாளுக்கு தாகம் எடுக்கையில், ஆதி சேஷன் தன் வாலால் பூமியில் அடித்து வரவழைத்தது என்னும் சிறப்புப் பெற்றது இங்குள்ள சேஷ தீர்த்தம்.
.
தாயார் தன் நாயகன் தேவநாதனுக்கு உறுதுணையாக இருந்து தேவர்களைக் காத்ததால் ஹேமாம்புஜவல்லி என்று அழைக்கப்படுகிறார். பார் அனைத்துக்கும் அருள்பாலிப்பதால் பார்க்கவி என்று அழைக்கப்படுகிறார்.
.
பிருகு முனிவருக்கு அவரது தந்தையார் நான்முகன் அருளியபடி பிரம்ம தீர்த்தத்தில் தாமரை மலரின் நடுவே திருமகள் குழந்தையாகத் தோன்றினார். பிருகு முனிவரும் அவருக்கு ஹேமாம்புஜவல்லி என்று பெயரிட்டு அழைத்து வந்தார்.
.ஹேமாம்புஜவல்லியும்ஸ்ரீமந் நாராயணனையே தன் கணவராக அடைய சேஷ தீர்த்தக் கரையில் தவம் செய்தார். ஹேமாம்புஜவல்லியின் தவத்தால் மகிழ்ச்சி அடைந்த தேவநாதன், அவர்முன்னர் தோன்றி, பிருகு முனிவரின் சம்மதத்துடன் அவரைக் கரம் பிடித்தார்.
.
வேதாந்த தேசிகர், ஒளஷதமலையில் தவம் செய்து ஆதிசேஷனையும், ஹயக்ரீவரையும் கண்ணாரக் கண்டார். ஹயக்ரீவருக்கு என்று தனியே கோயில் உருவானது இம்மலையில்தான். இங்கு வந்து ஹயக்ரீவரை வணங்குவோர் கல்வி கேள்வியிற் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம்.
தேவநாதப் பெருமாளை வழிபடுவோருக்கு செல்வம் பெருகும்; மக்கட்பேறு உண்டாகும்; ஆயுள் நீடிக்கும்
திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
.
மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த
பாவு தண்டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே
(1157 – பெரிய திருமொழி 3-1-10)
#பெருமாள்


