ShareChat
click to see wallet page
search
#🙏கோவில் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 மாதம் 11ம் நாள் 26-டிசம்பர்-25 சப்தமி கூடிய வெள்ளிக்கிழமை மஹாதேவன் மனம் மகிழ்ந்திடும் தேவி ஹிமாத்ரி சுதை அம்பிகையை மாசில்லா தூய பக்தியோடு போற்றி பாடி பூஜித்து வணங்கிடுவோம் வாரீர் அரங்கம் துயில்வோன் சோதரியே, அம்பிகையே நின் பத்ம பாதங்கள் பணிந்தேன் எனை ஆதரியே ஆசைக் கடலில் அலைந்தேன் சோர்ந்தேன், பாசச் சிறையில் வீழ்ந்தேன் புரண்டேன்,நேசக் கரம் நீட்டி அருள்வாயே இமவான் பெற்ற மலைமகளே, தீ வினைகள் உன் நேச மகன் எனை நெருங்காமல் இமைபோல் காத்திடுவாயே ஈசன் மேனியில் இடப்பாகம் சேர்ந்தவளே, வளங்கள், நலங்கள் நல்கும் அருள்நிதியே,, விரைந்து வந்து காப்பாயே உந்தன் பாதம் சேர்ந்திட வேண்டும் சந்தம் கொஞ்சும் எந்தன் பாக்கள் பூக்களாக, தாயே வந்தென் துயரம் களைவாயே ஊசி முனையில் நின்று தவம் செய்து ஐயனின் நேசக்கரம் பற்றியவளே, கசிந்து உன்தாள் பற்றிய எனை சேர்ப்பாயே எங்கும் எதிலும் எப்போதும் உன் எழில் வடிவம் காண்கின்றேன் நோய் நொடி, மனதின் வேதனையும் போக்கிடுவாயே ஏங்கிடுதே என் மனம் உன் அற்புத தரிசனம் கண்டு களித்திட தாமதம் செய்யாமல் சதா என்மனதில் அமர்ந்திடுவாயே ஐங்கரன் ஆறுமுகன் பெற்ற அன்னையே உன் பாதமே துணை என நிற்கும் எனையும் பாசமோடு அணைத்திடுவாயே ஒலியோடு ஓம் தேவி பராசக்தி என போற்றிடும் என் துயரத்திற்கு ஒளடதமே உன் நாமம் நீயே சர்வமும் அம்பிகையே 🙏🙏🙏 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️
🙏கோவில் - செவங்கள்  செவங்கள் - ShareChat