ShareChat
click to see wallet page
search
ஒரு காந்தம்... உண்மையில் நாம் ஒரு காந்தம் போலத் தான் செயல்படுகிறோம். நம் எண்ணங்கள் தான் அந்த காந்தத் தன்மையை உருவாக்குகின்றன. உதாரணமாக, உங்கள் வாழ்க்கையில் பலரை சந்திக்க நேரிடுகிறது பிறகு ஏன் சிலர் மட்டும் உங்கள் நண்பர்களாக உள்ளனர் என்பதை சிந்தித்துப் பாருங்கள். உங்கள் உறவினர்கள் எனப் பலர் இருந்தும் கூட சிலர் மட்டுமே நெருக்கமான உறவினர்களாக இருப்பது ஏன்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஏனென்றால், "உங்கள் எண்ணங்கள் எந்த அலைவரிசையில் உள்ளதோ அதற்கு இணையான அலைவரிசை உள்ளவற்றை ஈர்க்கிறது!" அது நண்பர்களாக இருந்தாலும் சரி உறவினர்களாக இருந்தாலும் சரி அல்லது பொருட்களாக இருந்தாலும் சரி வேறு எதுவாக இருந்தாலும் சரி உங்கள் எண்ணங்களின் அலைவரிசைக்கு இணையான அலைவரிசை கொண்டதை மட்டுமே உங்களால் ஈர்க்க முடியும். அப்படி என்றால்,. உங்களுக்குத் தேவையானதை ஈர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஆம். உங்கள் எண்ணங்களைச் சரி செய்தால் உங்களுக்குத் தேவையானதை உங்களால் ஈர்க்க முடியும். உங்கள் எண்ணங்களை சரிசெய்தால் மட்டுமே உங்களுக்குத் தேவையானதை உங்களால் ஈர்க்க முடியும். அது மட்டுமே ஒரே ஒரு வழி. மேலும், "அது மட்டுமே சரியான வழி". உங்கள் சிந்தனைக்கு, உங்களுக்கு எதிர்பாராமல் ஒரு பெரிய பதவி கிடைத்தால் அதில் உங்கள் ஆளுமை எப்படி இருக்கும்? நீங்கள் ஒரு பதவியை இலக்காக வைத்து அதற்கான முயற்சி செய்து, பயிற்சி செய்து, போராடி அதை அடைந்தால் அப்போது அதில் உங்கள் ஆளுமை எப்படி இருக்கும்? தகுதியும் திறமையும் நமக்கு ஒன்று கிடைப்பதில் இல்லை. நாம் ஒன்றை அடைவதில் தான் உள்ளது. நாம் அடைவது நம் தகுதியை வளர்த்துக் கொண்டதனால் இருக்குமானால் நம் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். அந்தத் தகுதியை நாம் வளர்த்துக் கொள்வதும், தக்க வைத்துக் கொள்வதும் நம் எண்ணங்களில் தான் உள்ளது. உங்கள் எண்ணங்கள் சிறப்பானதாக அமைந்து. உங்களுக்குத் தேவையானதை நீங்கள் அடைந்து, உங்கள் வாழ்க்கை சிறக்க என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்... 😊😊😊 #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம்# #உற்சாக பானம்
👪 cute family members 👪 - தன்னம்பிக்கை தான் வபழ்க்கை முயற்சி செம்மவில்லையென்றயல் இருந்தும் இடு மபல 90) னம் நீ தான் ಖ೦ udd தன்னம்பிக்கை தான் வபழ்க்கை முயற்சி செம்மவில்லையென்றயல் இருந்தும் இடு மபல 90) னம் நீ தான் ಖ೦ udd - ShareChat