ShareChat
click to see wallet page
search
இல்லை மோடி அவர்களே! தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் வளர்ச்சி சார்ந்த முக்கியமான கோரிக்கைளை தொடர்ந்து புறக்கணித்து தமிழ்நாட்டிற்கு நீங்கள் இழைத்து வரும் துரோகங்களுக்கு பதில் சொல்லும் காலம்தான் வந்துவிட்டது. 1. ​தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ₹3,458 கோடி சமக்ர சிக்ஷா கல்வி நிதியை முடக்கி வைப்பது ஏன்? 2. ​சமஸ்கிருதத்திற்கு வாரி வழங்கும் ஒன்றிய அரசு, செம்மொழித் தமிழுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டுவது ஏன்? 3. ​தமிழர்களின் நாகரிகத் தொன்மையை விளக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை பொதுவெளியில் வெளியிடத் தயங்குவது ஏன்? 4. ​மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநரின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தாதது ஏன்? தொடர்ந்து அடாவடி செய்யும் ஆளுநரைத் திரும்பப் பெறாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்? 5. ​மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளை, மறுவரையறை என்ற பெயரில் குறைக்கத் துடிப்பது ஏன்? 6. ​ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒருமனதாக எதிர்க்கும் நீட் (NEET) தேர்விலிருந்து விலக்கு அளிக்க ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது ஏன்? 7. ​பத்தாண்டுகளாகியும் மதுரை எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையை விரைவாக பணிகள் செய்யாமல் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? 8. தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு பற்றிப் பேசும் ஒன்றிய அரசு, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் அதை மீட்பதற்கோ அல்லது தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதிப்படுத்தவோ எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? 9. ​ இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும், அவர்களின் பல கோடி மதிப்புள்ள படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்தத் தவறியது ஏன்? 10. தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்படும் வரியில் ஒரு ரூபாய்க்கு வெறும் 29 பைசா மட்டுமே திரும்பத் தந்துவிட்டு, வடமாநிலங்களுக்கு வாரி வழங்குவது எந்த விதத்தில் நியாயம்? ​11. காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரைப் பெற்றுத்தர உறுதியான அழுத்தம் கொடுக்காமல், கர்நாடக அரசின் மேகதாது அணை முயற்சிக்கு மெத்தனமாக இருப்பது ஏன்? ​12. ரயில்வே தேர்வுகள் முதல் தபால் துறை தேர்வுகள் வரை அனைத்திலும் தமிழைப் புறக்கணித்து, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் திணிக்க முயற்சிப்பது ஏன்? ​ 13. நாடாளுமன்றத்தில் 'செங்கோலை' நிறுவி தமிழ்ப் பண்பாட்டைப் போற்றுவதாகக் கூறிவிட்டு, நடைமுறையில் தமிழ்நாட்டின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நிராகரிப்பது வெறும் நாடகம் இல்லையா? ​ 14. தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்கிவிட்டு, வடமாநிலங்களில் ஆயிரக்கணக்கான கோடிகளில் புதிய வழித்தடங்களையும், அதிவேக ரயில்களையும் செயல்படுத்துவதில் காட்டும் ஆர்வம் இங்கே ஏன் இல்லை? 15. ​இயற்கை எரிவாயு & ஹைட்ரோகார்பன்: டெல்டா மாவட்ட விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, விளைநிலங்களைப் பாழாக்கும் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி வழங்குவது ஏன்? 16. ​மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கு தமிழ்நாடு கோரிய பேரிடர் நிவாரணத் தொகையை வழங்காமல் வஞ்சித்தது ஏன்? 17. ​கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கும், ஓசூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கும் முட்டுக்கட்டை போடுவது ஏன்? 18. ​MGNREGA ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது ஏன்? 19. ​காலாவதியான சுங்கச்சாவடிகளையும் அகற்றாமல், நெடுஞ்சாலைக் கட்டணம் என்ற பெயரில் தமிழக மக்களைத் தொடர்ந்து சுரண்டுவது ஏன்? இன்னும் கேட்பதற்கு எவ்வளவோ இருக்கிறது, எப்படியும் தேர்தலுக்கு முன் குறைந்தது 10 முறையாவது இங்கே வருவீர்கள், அப்போது கேட்கிறோம். இன்று பேசும்போது திருக்குறளை மீண்டும் கொலை செய்யாமல், இந்த கேள்விகளில் ஒன்றிற்காவது பதில் சொல்லுங்கள். 2014 - தமிழ்நாடு உங்களை நிராகரித்தது 2016 - தமிழ்நாடு உங்களை நிராகரித்தது 2019 - தமிழ்நாடு உங்களை நிராகரித்தது 2021 - தமிழ்நாடு உங்களை நிராகரித்தது 2024 - தமிழ்நாடு உங்களை நிராகரித்தது 2026 - மீண்டும் வரலாறு படைப்போம்! தமிழ்நாடு மறக்காது! உங்களை மன்னிக்காது! திரும்பி போ! #GoBackModi படித்துவிட்டு பகிரவும் 🙏 #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ஊஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் மோடி வந்துவிட்டது ' பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர  @BITLLL LLID ஊஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் மோடி வந்துவிட்டது ' பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர  @BITLLL LLID - ShareChat