#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# இன்று*
*22 டிசம்பர் 2025-திங்கள்*
*===========================*
856 : பாரசீகத்தில் டம்கன் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர்.
1135 : ஸ்டீபன் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
1769 : சீன-பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.
1790 : துருக்கியின் இஸ்மாயில் நகரை ரஷ்யாவின் அலெக்சாண்டர் சுவோரவ் தலைமையிலான படையினர் கைப்பற்றினர்.
1807 : வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது.
1808 : பீத்தோவன் வியன்னாவின் அரங்கில் ஐந்தாவது ஆறாவது சிம்பொனி, நான்காவது பியானோ கான்செர்டோ இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.
1845 : பஞ்சாபில் பெரோஷியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரிட்டிஷ் படையினர் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.
1851 : இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்ராஞ்சல் மாநிலத்தின் ரூர்கி நகரத்தில் இயக்கப்பட்டது.
1885.: ஹிட்டோ ஹிரோபுமி என்ற சாமுராய் ஜப்பானின் முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1891 : புகைப்படம் மூலம் முதன்முதலாக 323 புரூஷியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1915 : மலேசிய இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரிட்டன் வான்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
1921 : சாந்திநிகேதன் கல்லூரி என்றும் அழைக்கப்படும் விஸ்வபாரதி கல்லூரி திறக்கப்பட்டது.
1937 : லிங்கன் சுரங்கப்பாதை நியூயார்க் நகரில் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.
1940 : இரண்டாம் உலகப் போர் :- ஹிமாரா கிரேக்க ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.
1942 : இரண்டாம் உலகப் போர் :- போரில் பயன்படுத்த வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார்.
1943 : பெர்லின் மீது நடந்த விமானத் தாக்குதலில் 17,000 பேர் உயிரிழந்தனர்.
1951 : மலாயாவின் சிலாங்கூர் தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டது.
1963 : லாகோனியா என்ற டச்சுக் கப்பல் போர்ச்சுகலில் மடிராவில் மூழ்கியதில் 128 பேர் உயிரிழந்தனர்
1964 : தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியையும் புயல் தாக்கியதில் 1,800க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1989 : கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பெர்லினில் பிரித்த பிராண்டன் பர்க் கதவு 30 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்டது.
1990 : மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா கூட்டு நாடுகள் ஆகியன பொறுப்பாட்சி மன்றத்திடம் இருந்து விடுதலை அடைந்தன.
2018 : இந்தோனேஷியாவில் அனக் கிரகடாவ் வெடித்ததால் சுனாமி ஏற்பட்டதில் 430 பேர் வரை உயிரிழந்தனர்.


