இந்த சீசனில் சமூக ஊடக பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள் என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர். எப்போதும் இல்லாத அளவிற்கு சீசன் 9 மிகவும் மோசமான நிகழ்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணமே வி.ஜே. பார்வதி தான் முதலில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகருடன் இணைந்து கொண்டு பல பிரச்சனைகளை செய்து வந்தார். எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது, கெட்ட வார்த்தை பேசுவது என பல விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தார். எப்பா இவங்கள எப்படியாவது வெளிய அனுப்பிருங்க என்று ஆடியன்ஸ் கதறும் அளவிற்கு அட்டகாசம் செய்து வந்தார்.
அதன்பின்னர் திவாகர் வெளியேறியது. கம்ருதீன் உடன் சேர்ந்து கொண்டு லவ் கேம் விளையாடினார். ஒரு கட்டத்தில் பார்வதிக்கும் கம்ருதீனுக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். பார்வதி அல்லது கானா வினோத் தான் பிக்பாஸ் டைட்டிலை வெல்வார்கள் என்று பல கருத்துகள் பரவி வந்தன. ஆனால், பார்வதி வெளியேற்றப்பட்டதால் கானா வினோத் தான் டைட்டிலை வெல்வார் என்று ஆடியன்ஸ் ஆவலாக இருந்தனர்.
ஆனால், கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறினார். தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் அரோரா, திவ்யா, சபரி, விக்ரம் ஆகியோர் உள்ளனர். ஃபினாலே இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து முன்பு எலிமினேட் செய்யப்பட்ட பிரவீன் காந்தி, திவாகர், பிரவீன் ராஜ், கெமி, ரம்யா, அப்சரா ஆகியோர் வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர். இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த வாட்டர் மெலன் தற்போது தன் வேலையை காண்பித்துள்ளார். #📢ஜனவரி 12 முக்கிய தகவல் 😃 #😮BB9: பெட்டியை தூக்கிச் சென்ற போட்டியாளர் 💰 #😮BB9: பெட்டியை தூக்கிச் சென்ற போட்டியாளர்💰 #BB9👁️: பணப்பெட்டி டாஸ்க்💰 #👁️BB9: இந்த வாரம் வெளியேறுவது இவரா?🧐


