ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி (நாளை மறுநாள்) வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 9ம் தேதி வெளியாக இருந்த ஜனநாயகன் திரைப்படம் ஒத்திவைக்கப்படுவதாக ஐரோப்பிய நாடுகளில் அப்படத்தை வெளியிடும் ஆர்எப்டி பிலிம்ஸ் (RFT Flims) நிறுவனம் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதாவது ஜெர்மனி, அயர்லாந்து, போர்ச்சுக்கல், போலந்து, நார்வே, ஸ்பெயின், பிரான்ஸ், ஸ்வீடன், அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 39 நாடுகளில் வரும் 9ம் தேதி திட்டமிட்டபடி ஜனநாயகன் வெளியாகாது என்றும் ஒத்திவைக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் இன்னும் சென்சார் சர்டிபிகேட் கொடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ஜனநாயகன் பரிதாபங்கள் #தளபதி ஜனநாயகன் #ட்ரெண்டிங்கில் ஜனநாயகன்


