ராதிகாவுக்கு இன்னும் திருமணமாகாத நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததை அறிந்த ராதிகாவின் தம்பி கண்ணன், தனது அக்காவைப் பலமுறை கண்டித்துள்ளார். இதனால் அக்கா-தம்பி இடையே அடிக்கடி குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில், ராதிகாவின் இந்த உறவு குறித்து அக்கம் பக்கத்தினரும், ஊர் மக்களும் தவறாகப் பேசத் தொடங்கியுள்ளனர். இது கண்ணனுக்கு மிகுந்த மன உளைச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “உன்னால் தான் நம் குடும்பத்தின் மானமே போகிறது” என்று கூறி கண்ணன் தனது அக்காவைச் சபித்துள்ளார். சம்பவத்தன்று மீண்டும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற கண்ணன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது அக்கா என்றும் பாராமல் ராதிகாவைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராதிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவர்குளம் போலீசார், ராதிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற கண்ணனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர் மக்களின் கேலிப் பேச்சால் ஆத்திரமடைந்து சொந்தத் தம்பியே அக்காவைக் கொலை செய்த இந்த கொடூரச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #📢ஜனவரி 20 முக்கிய தகவல் 🫠 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔


