ShareChat
click to see wallet page
search
வர்கோத்தம பலன்களும் நன்மை தீமைகளும்... பொதுவாக வர்கோத்தமம் என்றால்.? D1 மற்றும் D9 அதாவது ராசி சக்கரத்திலும் நவாம்ச சக்கரத்திலும் ஒரு கிரகம் அதே இடத்தில் அமர்ந்திருப்பது வர்க்கோத்தமமாகும்... பொதுவாக வர்க்கோதமம் அடைந்த கிரகம் ராசி சக்கரத்தில் நன்மை தீமை செய்யக்கூடிய அமைப்பில் ஒரு கிரகம் இருந்து வர்க்கோத்தமம் அடைந்திருந்தால் அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலனை அதாவது நன்மை தீமையை இரட்டிப்பாக்கிறது. என்பது பொது விதி.. விதி விலக்கிற்கான உதாரணம்... ராசி சக்கரத்தில் உள்ள அட்டமாதிபதி அட்டமஸ்தானத்தில் பாவத்துவமாக இருந்து .... வர்க்கோத்தமம் ஆகி இருந்தால்.? நீடித்த ஆயுளை தருவார் என்றாலும் அந்த கிரகத்தின் தசா புத்தி காலத்தில் நீண்ட நெடிய கட்டுக்கடங்காத துன்பங்களையும் தருவார். அதே அட்டமாதிபதி ராசி சக்கரத்தில் அட்டமஸ்தானத்தில் சுபத்துவத்துடன் இருந்து வர்க்கோத்தமம் அடைந்திருந்தால்.? நீடித்த ஆயுளை தருவார் அத்துடன் அந்த கிரகத்தின் தசா புக்தி காலத்தில் .... நீண்ட நெடிய அதிர்ஷ்டத்தையும் கட்டுக்கடங்காத பொருளாதார மேன்மையையும் மறைமுகமான முறையில் ஏற்படுத்தி தருவார். இனி... பொதுவாக வர்க்கோதமம் அடைந்த கிரகங்களும் அதன் பலன்களும்... லக்னம் வர்க்கோத்தமம் அடைந்திருப்பின்.... அதாவது ராசியில் இருக்கக்கூடிய லக்கனம் எதுவோ நவாம்சத்திலும் அதே லக்னமாக இருப்பது.. இப்படி இருந்தால்... ஜாதகர் ஆன்ம வலிமை மிக்கவர். லக்னமும் வர்க்கோத்தமம் ஆகி லக்னாதிபதியும் அதே இடத்தில் வர்கோத்தமம் ஆகி இருந்தால்.. அல்லது... ராசி சக்கரத்தில் உள்ள லக்னாதிபதி லக்னத்தை பார்வையிட்ட நிலையில் அமர்ந்திருந்து... வர்க்கோத்தமம் அடைந்திருப்பின். ஜாதகர் பிரபலமானவராகவும் எதையும் தாங்கும் இதயமாகவும் வாழ்வில் நடக்கக்கூடிய சம்பவங்களை எளிதில் சமாளிக்க கூடியவராகவும் ஆன்ம பலத்தையும் ஆயுள் பலத்தையும் ஒருசேர அமையப் பெற்றவராகவும் இருப்பார். லக்னமும் ராசியும் வர்க்கோத்தமம் ஆன்ம பலமும் உடல் பலமும் உடல் உறுதியும் மன உறுதியும் உள்ளவர். சூரியன் வர்க்கோத்தமம் அடைந்திருப்பின். அரசுத்துறை அரசியல்வாதி அரசு வேலை அரசின் ஆதரவு அரசு வழி ஆதாயம் போன்ற வகைகளில் நன்மைகளை பெறக்கூடியவர். இது போன்ற ஒவ்வொரு கிரகமும் வர்கோத்தமம் அடைந்திருந்தால் அந்த கிரகத்தின் பலனை இரட்டிப்பாக்கும் ... என்றாலும்.... அந்த கிரகம் உங்களுடைய ராசி சக்கரத்தில் உள்ள லக்கினத்திற்கு எந்த பாவக அதிபதியாக வருகிறதோ அதனுடைய ஆதிபத்திய பலனையும் அவருடைய தசா புக்தியின் போது இரட்டிப்பாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp Gpay phonepe Paytm 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள்
✡️ஜோதிட பரிகாரங்கள் - ShareChat