தமிழக மக்கள் பொங்கல் விடுமுறையை எப்படி கொண்டாடிவது என்பதில் ரொம்ப பிஸியாக இருப்பார்கள். பொங்கல் திருவிழைவை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல ஆயுத்தமாகி வரும் வேளையில், இந்த பொங்கலுக்கு எத்தனை நாள் லீவு விடப்பட்டுள்ளது?, மேலும் ஒரு நாள் லீவ் கிடைக்க சான்ஸ் இருக்கா?, சொந்த ஊருக்கு போறதுக்கு என்னென்ன ஸ்பெஷல் அரேஞ்மெண்ட்ஸ் அரசு செய்து வருகிறது? போன்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம்.
பொங்கல் பண்டிகை 2026 விடுமுறை
2026 பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த வருட பொங்கல் விடுமுறை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக உறுதியாக கிடைத்துள்ளது. இது பள்ளி மாணவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் சிறந்த நேரமாக இருக்கும். ஏனென்றால் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் தொடங்கியது. தற்போது இந்த நான்கு நாள் பொங்கல் விடுமுறை காரணமாக மீண்டும் ஒரு நீண்ட விடுமுறை கிடைத்துள்ளதால், பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் விடுமுறை எத்தனை நாட்கள்?
இந்த 2026 பொங்கல் விடுமுறை நாட்களின் வரிசை என்பது வியாழக்கிழமை (ஜனவரி 15) தை பொங்கலுடன் ஆரம்பித்து, வெள்ளிகிழமை (ஜனவரி 16) மாட்டு பொங்கல், சனிக்கிழமை (ஜனவரி 17) திருவள்ளுவர் தினம் என மூன்று நாட்கள் என 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விடுமுறை அரசு அறிவித்துள்ளது. இதனுடன் ஜனவரி 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றும் வழக்கமான விடுமுறை. இதன்மூலம் பொங்கலுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
ஐந்து நாட்கள் பொங்கல் விடுமுறை கிடைக்குமா?
இந்த நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி (புதன்கிழமை) அன்று போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், அன்றும் பொது விடுமுறை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. ஒருநாள் எக்ஸ்ட்ரா லீவு கிடைத்தல், பொது மக்கள் ஊருக்குச் செல்லும் திட்டங்களை வகுக்க உதவும் என்பதால், மக்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஜனவரி 14 விடுமுறை கிடைக்குமா? தமிழக அரசு
குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனதில் எழும் பெரிய கேள்வி என்னவென்றால், இந்த நான்கு நாட்கள் விடுமுறை, ஐந்து நாட்களா மாறுமா? என்பது தான். இப்போது இது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இந்தநிலையில், மேலும் ஒரு நாள் விடுமுறை குறித்து பள்ளி கல்வித்துறை அல்லது தமிழக அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வருமா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை.
2026 ஜனவரி மாதத்தில் மொத்த விடுமுறை நாட்கள் எத்தனை?
தமிழ்நாட்டை பொறுத்த வரை 2026 ஜனவரி மாதத்தில் மொத்தம் ஒன்பது நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் தொடங்கினாலே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு
ஜாலிதான்.
ஜனவரி 01: புத்தாண்டு தினம்
ஜனவரி 04: ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 11: ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 15: தை பொங்கல்
ஜனவரி 16: மாட்டு பொங்கல்
ஜனவரி 17: திருவள்ளுவர் தினம்
ஜனவரி 18: ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 25: ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 26: குடியரசு தினம் #📢ஜனவரி 12 முக்கிய தகவல் 😃 #🌾பொங்கல் தொடர் விடுமுறை🥳


