இரவு ஜெபம் †*_
_*எம் அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், புகழ்கின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம்.*_
_*எங்களை ஒரு குழுவாக, குடும்பமாக, நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக, உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச் செய்ய, உறவில் நாங்கள் மகிழ்ச்சியைக் காணச் செய்ததற்காக, நன்றி கூறுகின்றோம்.*_
_*இன்றைய நாள் முழுவதும் எங்கள் உடனிருந்து, பாதுகாத்து, ஆலோசனை தந்து, ஆரோக்கியத்தை அளித்து, சோர்வுகள் எங்களை தாக்கினாலும் எமக்கு ஆற்றில் தந்து, அரவணைத்தீரே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.*_
_*உமது அன்பை பிரதிபலிக்கும் வகையில் எங்களை இன்று நடக்கச் செய்தீரே, உமது ஆவியின் வரங்களினால் எங்களை நிரப்பினீரே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.*_
_*பிறருக்கு ஆறுதல் அளிக்க மறந்ததற்காகவும்; பாராட்ட மறந்ததற்காகவும்; நன்றி சொல்ல மறந்ததற்காகவும்; உற்சாகப்படுத்த மறந்ததற்காகவும் எங்களை மன்னியும்.*_
_*தேவையான நேரத்தில் பிறருக்கு உதவி செய்ய, பிறருக்கு நன்மை செய்யத் தவறியதற்காக எங்களை மன்னியும்.*_
_*பிறருடைய கடைமைகளிலே நாங்கள் தடையாக இருந்திருந்தால் அல்லது சிரமம் கொடுத்தற்காக எங்களை மன்னியும்.*_
_*எங்கள் பெற்றோரிடமும் சகோதர சகோதரியிடமும், நண்பர்களிடமும் பிள்ளைகளிடமும், மனம் புண்படும்படியாக எதாவது செய்திருந்தால் எங்களை மன்னியும்.*_
_*தாயும் தந்தையுமான இறைவா! இந்த இரவில் நல்ல தூக்கத்தைத் தந்தருளும்.*_
_*நாளை காலை மீண்டும் எழுந்து உம்மைப் போற்றிப் புகழவும், உம்மோடு இன்னும் நெருங்கி வாழவும் அருள்புரியும்.*_
_*ஆமென்.*_ #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
![⛪ வேளாங்கண்ணி சர்ச் - ஆண்டவரின் பேரன்பு @@@@]@@@! அவரதுஇரக்கம் தீரீந்துபோகவில்லை! புலம்பல் 3:22 ஆண்டவரின் பேரன்பு @@@@]@@@! அவரதுஇரக்கம் தீரீந்துபோகவில்லை! புலம்பல் 3:22 - ShareChat ⛪ வேளாங்கண்ணி சர்ச் - ஆண்டவரின் பேரன்பு @@@@]@@@! அவரதுஇரக்கம் தீரீந்துபோகவில்லை! புலம்பல் 3:22 ஆண்டவரின் பேரன்பு @@@@]@@@! அவரதுஇரக்கம் தீரீந்துபோகவில்லை! புலம்பல் 3:22 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_166607_36cb00ff_1769266029906_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=906_sc.jpg)

