#vaalkkay payanam. சின்னச் சின்ன மகிழ்ச்சியை இழந்தவர்களுக்குத் தான் தெரியும்...!!
பாசம் எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று....!!!
ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்தே தோற்றுப் போகிறேன்...
என்றாவது ஒரு நாள் தோல்வியும் என்னிடத்தில் துவண்டு போகும் என்ற நம்பிக்கையில்... !
ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை.!
நம்பிக்கை இருக்கும் வரை
முயற்சிகள் வீண் போவதில்லை.!
இனிமேல் இழக்க ஒன்றுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்டால்
புன்னகை செய்யுங்கள்.
அதன் அடுத்த நிலை தான் வெற்றி தான்... !
மற்றவர்களைப் பார்த்து
நீங்கள் அவர்களைப் போல் வாழ்ந்தால் உங்களைப் போல் யார் வாழ்வது...?
ஆகவே நீங்கள் நீங்களாகவே இருங்கள்...!
வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்திரச்சொல் "இப்பொழுது".
தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் "பிறகு".
வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே எதையும் தள்ளிப் போடாதீர்கள்.
பிரச்னைகள் தாம் மிகப்பெரிய சாதனைகளையும், உறுதிமிக்க சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன.
எனவே பிரச்னைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள்.
தோல்வி எனக்கு மனச்சோர்வை அளிப்பதில்லை. மாறாக அது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது.
எவ்வளவு தான் கல்வியும், செல்வமும் இருந்தாலும் ஒருவனால் வெற்றி பெற முடியாது.
தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் ஊக்கம் அவனிடம் இருந்தால் தான் முன்னேற முடியும், வெற்றி பெற முடியும்.
இந்த ஊக்கம் இருந்தால், கல்வியறிவு இல்லாதவனும், பொருள்வசதி இல்லாதவனும் கூட முன்னேறுவது உறுதி.
அன்பான இனிய நற்காலைப் பொழுது வணக்கம் நட்பே.
வாழ்க வளமுடன்.


