ShareChat
click to see wallet page
search
காஸ்ட் ஆடிட்டர் படிப்பு..என்னென்ன பணி வாய்ப்புகள் உள்ளன..எங்கு படிக்கலாம்? எந்த படிப்பில் சேர்வது? எந்தப் படிப்பு அதிக வேலை வாய்ப்பு தரும்? எந்த படிப்பில் சேர்ந்து படித்தால் கல்வி கட்டணம் குறைவாக இருக்கும்? என்றெல்லாம் தெளிவாக தகவல்களை சேகரித்து தனக்கு ஏற்ற படிப்பை தேர்ந்தெடுக்கின்ற இளைஞர்கள் இப்போது அதிகமாகி விட்டார்கள். பல இளைஞர்கள் குறிப்பாக பிளஸ் 2 படித்து முடித்த மாணவ ,மாணவிகள் தற்போது விரும்பிச் சேருகின்ற படிப்பு "காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்சி "(COST AND MANAGEMENT ACCOUNTANCY) ஆகும். ஒரு நிறுவனத்தில் உள்ள நிதி நிலைமையை தெரிந்து கொண்டு, அந்த நிறுவனத்தின் நிதியை நிர்வகிப்பதும், நிறுவன நடைமுறைக்கான செலவுகளை மதிப்பீடு செய்வதும், இதன் மூலம் தரமான உற்பத்திக்கு உதவிகரமாய் அமைவதும் “காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்சி” படிப்பு படித்தவர்களின் பணியாகும். "தி இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்டென்ஸ் ஆப் இந்தியா “ ( THE INSTITUTE OF COST ACCOUNTS OF INDIA) என்ற அமைப்புதான் “காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்சி” (COST AND MANAGEMENT ACCOUNTANCY) என்ற படிப்பை விரிவான முறையில் நடத்துகிறது. இந்த அமைப்பு 1959 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். காஸ்ட் மற்றும் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்சி பாடத்தின் நுட்பங்களை பயிற்றுவிக்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் இது ஆகும். ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனத்தின் உற்பத்தி (PRODUCTION ), விற்பனை (SALES), நிர்வாகம் ( ADMINISTRATION) போன்ற ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் செலவுகளை கணக்கிடுவதும், தேவையற்ற செலவினங்களை கண்டுபிடித்து, அதனை நீக்கி, நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க வழிகள் செய்வதும் "செலவு மற்றும் மேனேஜ்மென்ட் கணக்கர்கள்" ( COST AND MANAGEMENT ACCOUNTANTS) பணியாகும். இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அதிக சம்பளம் கிடைக்கிறது. எனவே, பல மாணவ ,மாணவியர் இதில் விரும்பி சேர்ந்து படிக்கிறார்கள். பல நிறுவனங்களில் மிக உயர்ந்த பணிகளான, • மேலாண் இயக்குனர் (MANAGING DIRECTOR) • முதன்மை கணக்காளர் (CHIEF ACCOUNTANT) • நிதி கட்டுப்பாட்டு அதிகாரி (FINANCIAL CONTROLLER), நிதி இயக்குனர் (FINANCIAL DIRECTOR) • முதன்மை நிறுவன தணிக்கையாளர் ( CHIEF INTERNAL AUDITOR) • செலவு கட்டுப்பாட்டு அதிகாரி (COST CONTROLLER) - போன்ற பதவிகளில் பணியாற்ற சி. எம். ஏ (C.M.A)படித்தவர்கள் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். மேலும், ,பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் "காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்சி” பாடங்கள் நடத்தும் பேராசிரியர்களாகவும் இவர்கள் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன. காஸ்ட் ஆடிட்டர் படிப்பான சி.எம்.ஏ படித்தவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நேரடியாக Ph.D பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவிலேயே மிக உயர்ந்த பணிகளான ஐ.ஏ.எஸ் (I.A.S), ஐ.பி.எஸ் ( I.P.S) ,ஐ.எஃப்.எஸ் (I.F.S), ஐ.ஆர்.எஸ்(I .R.S) போன்ற பதவிகளில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எழுதவும் இவர்கள் தகுதியானவர்கள் . தமிழக அரசு நடத்தும் டி.என்.பிஎஸ்சி (TNPSC) குரூப் 1(GROUP -1),குரூப் 2(GROUP -2 ) போன்ற அனைத்து தேர்வுகளையும் இவர்கள் எழுத தகுதி படைத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்வுகள் இந்த சி.எம்.ஏ (C.M.A) தேர்வுகள் மொத்தம் மூன்று பிரிவுகளைக் கொண்டது. அவை, 1. பவுண்டேஷன் கோர்ஸ் (FOUNDATION COURSE ) தகுதி: பிளஸ் 2 எந்த பிரிவை எடுத்தவர்களும் சேரலாம். 2. இன்டர்மீடியட் கோர்ஸ். ( INTERMEDIATE COURSE). தகுதி: சி எம் ஏ பவுண்டேஷன் அல்லது சிஎம்ஏ கேட் அல்லது ஏதேனும் பட்டப் படிப்பு முடித்தவர்கள் சேரலாம். 3. ஃபைனல் எக்ஸாம் ( FINAL EXAM) இன்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பைனல் எக்ஸாம் எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வுக்கான பாடங்கள். 1. பவுண்டேஷன் கோர்ஸ் (Foundation Course) Curriculum) PAPER 1: FUNDAMENTALS OF BUSINESS LAWS AND BUSINESS COMMUNICATION (FBLC) PAPER 2: FUNDAMENTALS OF FINANCIAL AND COST ACCOUNTING (FFCA) PAPER 3: FUNDAMENTALS OF BUSINESS MATHEMATICS AND STATISTICS (FBMS) PAPER 4: FUNDAMENTALS OF BUSINESS ECONOMICS AND MANAGEMENT 2. இன்டர்மீடியட் கோர்ஸ் Intermediate (Course Curriculum) GROUP – I PAPER 5: BUSINESS LAWS AND ETHICS (BLE) PAPER 6: FINANCIAL ACCOUNTING (FA) PAPER 7: DIRECT AND INDIRECT TAXATION (DITX) PAPER 8: COST ACCOUNTING (CA) GROUP – II PAPER 9: OPERATIONS MANAGEMENT AND STRATEGIC MANAGEMENT (OMSM) PAPER 10: CORPORATE ACCOUNTING AND AUDITING (CAA) PAPER 11: FINANCIAL MANAGEMENT AND BUSINESS DATA ANALYTICS (FMDA) PAPER 12: MANAGEMENT ACCOUNTING (MA) 3. ஃபைனல் எக்ஸாம் (Final Course Curriculum) GROUP – III PAPER 13: CORPORATE AND ECONOMIC LAWS (CEL) PAPER 14: STRATEGIC FINANCIAL MANAGEMENT (SFM) PAPER 15: DIRECT TAX LAWS AND INTERNATIONAL TAXATION (DIT) PAPER 16: STRATEGIC COST MANAGEMENT (SCM) GROUP – IV PAPER 17: COST AND MANAGEMENT AUDIT (CMAD) PAPER 18: CORPORATE FINANCIAL REPORTING (CFR) PAPER 19: INDIRECT TAX LAWS AND PRACTICE (ITLP) பைனல் எக்ஸாமில் குரூப் 4 பிரிவில் மூன்று பாடங்கள் மற்றும் ஒரு விருப்ப பாடம் உள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு விருப்ப பாடத்தை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதலாம். விருப்ப பாடம் (ELECTIVES) PAPER 20A: STRATEGIC PERFORMANCE MANAGEMENT AND BUSINESS VALUATION (SPMBV) PAPER 20B: RISK MANAGEMENT IN BANKING AND INSURANCE (RMBI) PAPER 20C: ENTREPRENEURSHIP AND STARTUP (ENTS) இருப்பினும், இந்த இறுதி தேர்வு எழுத விண்ணப்பிக்கும் போதே அந்த தேர்ந்தெடுத்த விருப்ப பாடம் பற்றிய தகவலை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். சம்பளம் எவ்வளவு ? சி.எம்.ஏ படிப்பை முடித்து அசிஸ்டன்ட் மேனேஜராக பணிபுரிபவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 11 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்பு காத்திருக்கிறது. மேலும், பேங்க் ஆபீஸ் எக்ஸிக்யூட்டிவ், ஒர்க் சூப்பர்வைசர், ஸ்பெஷலிஸ்ட் ஆகிய பதவிகள் வகிக்கும் சி.எம்.ஏ படித்தவர்களுக்கு மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் பெற நல்ல எதிர்காலம் உள்ளது. மண்டல அலுவலகங்கள். (Regional Council) மேற்கு மண்டலம் (Western India Regional Council) மேற்கு மண்டல அலுவலகத்தோடு குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ,கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான டாமன், டையு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு இந்த படிப்பில் சேரலாம் மேற்கு மண்டல முகவரி Western India Regional Council "Rohit Chambers", 4th Floor Janmabhoomi Marg, Fort Mumbai - 400 001 Ph : 022-22872010/ 22841138/ 22043406/ 22043416 Fax : 91- 022- 22870763 Email: wirc@icmai.in Web site : www.icwai-wirc.org தெற்கு மண்டலம்.(Southern India Regional Council) தெற்கு மண்டல அலுவலகத்தோடு ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு ,கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் யூனியன் பிரதேசமான லட்சதீப் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு இந்த படிப்பில் சேரலாம். தெற்கு மண்டல முகவரி Southern India Regional Council 4, Montieth Lane, Egmore,Chennai - 600 008 Ph:044-28554443/28554326/28528219 Fax : 91- 044- 28554651 Website: www.sircoficwai.com Email: sirc@icmai.in கிழக்கு மண்டலம்.(Eastern India Regional Council) அசாம், அருணாசல பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒரிசா, திரிபுரா, மேற்கு வங்காளம் ,சிக்கிம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மண்டலத்தோடு தொடர்பு கொண்டு இந்த படிப்பில் சேரலாம். மேலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளை சேர்ந்தவர்களும்,, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த கிழக்கு மண்டலத்தோடு தொடர்பு கொண்டு இந்த படிப்பில் சேரலாம். கிழக்கு மண்டல முகவரி Eastern India Regional Council 84, Harish Mukherjee Road, Kolkatta - 700 025 Ph : 033 -24553418 /24555957 Fax : 91 033-2455-7920 Email: eirc@icmai.in வடக்கு மண்டலம்.(Northern India Regional Council) டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த படிப்பில் சேர வடக்கு மண்டலத்தோடு தொடர்பு கொள்ளலாம். வடக்கு மண்டல முகவரி Northern India Regional Council 3, Institutional Area, Lodi Road,New Delhi - 110 003 Ph : 011 - 24626678 / 24615788 Fax : 24622156 Email: nirc@icmai.in #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
👪 cute family members 👪 - அடியற்கை கல்விஹிகாட்டி Cost Audit காஸ்ட்ஆடிட்டரிஸப்பூன்னென்ன பணிவாய்ப்புகளீஉள்ளன எங்குடடிகிகலாமி3 Flings அடியற்கை கல்விஹிகாட்டி Cost Audit காஸ்ட்ஆடிட்டரிஸப்பூன்னென்ன பணிவாய்ப்புகளீஉள்ளன எங்குடடிகிகலாமி3 Flings - ShareChat