தேங்காய் பற்றிய
சில அபூர்வ தகவல்கள் !!
தென்னைமரம் பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளையும் உள்ளடக்கி கொள்ள கூடியது .
மேலும் தேங்காய்
நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது.
இதனால் தேங்காய் உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது.
இது சித்தர்கள் கண்ட விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது .
தேங்காய் சிவனின் மூல சக்தியாக உள்ளது.
இதில் உள்ள
மூன்று கண்களின் வழியே பஞ்ச பூத
சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது .
லட்சம் காய்களில் ஒன்றாக கிடைக்கும் இரண்டு கண் உள்ள
தேங்காயை சிவசக்தி தேங்காய் என்றும்
கோடி காய்களில் ஒன்றாக கிடைக்கும் ஒரு கண் உள்ள தேங்காயை சிவன் தேங்காய் என்றும் சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
எப்போதாவது நிகழும் அரிய தெய்வீக நிகழ்வாக, விநாயகப்பெருமான்
கொம்பு தேங்காய் வடிவில் காட்சி தருகிறார் என்பது ஆன்ம சிலிர்ப்பை ஏற்படுத்தும் அரிய நிகழ்வாகும்.
இப்படிபட்ட அற்புதப்படைப்பான கொம்பு தேங்காயை ,
நம் வீட்டில் தனி பூஜை அறையில் வைத்து மிக மிக சுத்தமாக முறையாக , வழிபட்டு வர எல்லாவிதத் தடைகளும் சூரியனைக்கண்ட பனித்துளிபோல உருகி ஓடிவிடும்.
அது மட்டுமா?
வீட்டில் தன தான்ய விருத்தியை உண்டுபண்ணும்.
மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமண வயது ஆகியும் கிரகக் கோளாறுகளால் தடைபட்டு வந்த திருமணம், விரைவில்
கை கூடும்.
தடைபட்டத் திருமணம் விரைவில் கைகூட, இந்த முக்கண் கொம்பு முளைத்த தேங்காயை(படம் கீழே👇👇) வீட்டில் மிக மிக சுத்தமாக தனி இடத்தில் வைத்து,
48 நாட்கள் சிரத்தையாக , ஆன்ம சுத்தியுடன் பூஜை செய்து வர,
48 நாட்களுக்குள்
நல் வரன் வாயிற்கதவைத்தட்டும்,
அத்துடன் மனம் விரும்பிய மண வாழ்வு அமையும்.
வியாபாரம் அல்லது செய்யும் தொழில் நஷ்டத்தில் இருந்தால் இந்த முக்கண் கொம்பு முளத்த தேங்காயை வியாபாரம் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைத்து
48 நாட்கள் சிரத்தையாக , ஆன்ம சுத்தியுடன் பூஜை செய்து வந்தால் உங்கள் வியாபாரம்,செய்தொழில் மேன்மையடையும்.
கண் திருஷ்டி போன்ற வினைகளால் , குடும்ப சுபிட்சம்,வியாபார விருத்தி இழந்து வாடுபவர்கள்,
இந்த அற்புத
கொம்பு முளைத்த
தேங்காயை வணிக இடத்திலும்,வீட்டிலும் தனி இடத்தில் வைத்து நித்ய பூஜையை மன சுத்தம்,ஆன்ம சுத்தத்துடன் செய்து வர, கண் திருஷ்டி விலகி தொழில் வசியம் ஏற்பட்டு இழந்தவை யாவும் விரைவில் திரும்பும்,பொருளும்,அருளும் என்றும் தங்கும்.
இப்பட்டிபட்ட அற்புதமான
கொம்பு முளைத்த தேங்காயை கனகலஷ்மி தேங்காய் எனவும் சொல்வார்கள்.
இந்த கொம்பு தேங்காய் உங்களுக்கு அதிர்ஷ்ட வசமாக கிடைத்தால் அதை ஒரு சிகப்பு துணிப்பையில் போட்டு நன்றாக கட்டி உங்கள் வீட்டின் உட்புறம் தலைவாசலுக்கு மேல் மாட்டிவைக்கவும்.
இப்படி செய்தால் உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்பட்டு,100வருடம் உங்கள் வீட்டில் மஹாலெஷ்மி வசிப்பாள்.
இப்பட்டிபட்ட அற்புதமான கொம்பு முளைத்த தேங்காயை நீங்கள் தற்போதும் நேரில்
பார்க்க வேண்டுமா?
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த நவ கைலாய
தலங்களில் ஒன்றான தென் திருப்பேரை கைலாய நாதர் ஆலயத்தின் அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இன்றம் பாது காப்பாக கண்ணாடி பேழைக்குள்
வைக்கப்பட்டு
உள்ளது.
ஆங்கிலேயே கலெக்டராக இருந்த கேப்டன் துரை , ஒரு சமயம் இப்பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது சாவடியில் இளைப்பாறிய அவர் பக்கத்திலிருந்த ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று ஒரு இளநீர் கேட்டுள்ளார்.
அங்கிருந்த விவசாயி, இந்த தோப்பில் உள்ள இளநீர்கள் சுவாமி கைலாச நாதரின் அபிசேகத்திற்கு பயன்படுத்தக்
கூடியதால், இந்த இளநீர்கள் குடிப்பதற்கு
தர இயலாது, என்று கூறியுள்ளார்..
இதை அறிந்த கேப்டன் துரை, விவசாயிடம்,இந்த தோப்பிலுள்ள இளநீருக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறது, சும்மா பறித்து போடு, என்றாராம்.
விவசாயியும் இதனை மறுக்க முடியாமல்,
இளநீர் பறித்துப்போட்டாராம்.
ஆனால் அந்த இளநீர் மூன்று கொம்புகள் முளைத்த தேங்காயாக மாறியுள்ளதை பார்த்த அந்த ஆங்கிலேய துரை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே கைலாச நாதரின்
கோவிலுக்கு சென்று தன் தவறுக்கு வணங்கி, மன்னிப்பும் கேட்டுக்கொண்டு,
தினசரி பூசைக்காக,
26 சல்லிக்காசுகள் வழங்கியதாக கோவிலின் வரலாறு சொல்கிறது,
அந்த கொம்பு முளைத்த தேங்காய் இன்றும் அம்மன் சன்னதியில் பாதுகாக்கபட்டு வருகிறது.
தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்
கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது .
இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது .
ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும் .
முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப் படுகிறது .
ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்று கிழமையின் பிற்பகலில் , திங்கள் கிழமையின் முற்பகலில் , முச்சந்தி விநாயகருக்கு வாரம் தோறும் சிதறு காய் இட்டால் கால சர்ப்ப தோஷம் கூட சரியாகி விடும் .
வீட்டில் தினம் ஒரு தேங்காய் உடைத்து
பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லக்ஸ்மி கடாட்சம் பெருகும் ,
மாந்திரீகத்தில் சண்ட காளிவேர் , நரபூதாளம் , சூலநாசவேர் , இவற்றுடன் வேண்டாதவரின் காலடி மண் , இந்த நான்கையும் நவமி திதியில் வேங்கை மரத்தின் கீழ் பதித்தால் சம்மந்தப்பட்டவர் நிலை அதோ கதிதான் .
இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மறு நவமிவரை அந்தியில் தேங்காய் உடைத்து உடன் நுகரச் செய்தால் குணமாகி விடும் .
இது சித்தர்கள் கண்ட முறையாகும் .
முள்ளம் பன்றி முள் , எட்டிமர வேர் இரண்டையும் வீட்டில் வைத்துவிட்டால் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கும் ,
இதற்கு நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டால் சுபிட்சம் ஏற்படும் ,
மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசு பிசு வென்று இருப்பதைக் காணலாம் ,
அம்மாவாசையில் பிறந்த குழந்தைகள் கெட்ட பெயரெடுக்கும் , அவர்களுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் அவர்களது தீய குணம் மாறும் ,
குழந்தைகளுக்கு தேங்காய் பால் அடிக்கடி( சாறு ) கொடுத்தால் உடல் பலமாகும் ஞபக சக்தி கூடும் .
வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் பறித்த தேங்காய் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்ட்டியும் கழிந்து விடும் .
வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால்,ரோகினி ஹஸ்த்தம் , திருவோணம் , நட்சத்திர நாட்களில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும் .
( அக்கால ராஜாக்கள் அந்நிய தேச பயணத்திற்கு முன் இந்த நட்சத்திர நாளில் தேங்காய் முக்கண் வழிபாடு செய்தே சென்று வருவர்)
நம் முன்னோர்கள் தேங்காய் உடைக்கும் சாஸ்திரம் வைத்தது சும்மா இல்லீங்க!
ஓம் நமசிவாய! திருச்சிற்றம்பலம்!!. #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #பொங்கல் ஸ்டேட்டஸ் வீடியோ #போகி பண்டிகை வாழ்த்துக்கள் #பொங்கல் வாழ்த்துக்கள் #மாட்டு பொங்கல் #👨👩👧தை பொங்கள் வாழ்த்துக்கள்


