தீகொளுத்திகள் யார்.....? ஏன் தீகொளுத்திகள்.......? இவர்களுக்கு தீகொளுத்திகள் பெயர் வர காரணி என்ன....?
நான் ஏன் தொடர்ந்து தீகொளுத்திகள் என்று எழுதுகிறேன்...?
நாற்பத்தியேழு வருடங்களுக்கு முன்பு நடந்த கோர சம்பவத்தின் வரலாறை அறிவோம்......
வெள்ளியோட்டில் தீக்கிரையாக்கப்பட்ட உயிர்களும் அதன் உண்மைகளும்....
தலைமை அடிமைத்தனம் தலைவர்களின் மீதுள்ள அதிமோகம் எளிய மக்களின் உயிரை பறிப்பதோடு அவர்களின் சந்ததிகளை எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். அரசியல் தலைவர்கள் செய்யும் தவறுகளுக்காக கைதாகும்போது அவர்களின் தொண்டர் படையினர் மூர்க்கத்தனம் கொண்டு அப்படியான பல சம்பவங்களில் இறங்குவதுண்டு. குமரி வரலாற்றில் அப்படியாக ஒன்றல்ல இரண்டல்ல பன்னிரண்டு உயிர்களை தீக்கிரையாக்கிய காங்கிரஸ் தீவிரவாதிகளின் கொடுஞ்செயலினை விரிவாக பார்பபோம்.........
1978 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தியதி புதன்கிழமை நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் இந்திரா காந்தி கைதை கண்டித்து கலவரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் பல பாகங்களில் ரெயில் மறியல் பெட்ரோல் குண்டுவீச்சு ரயில் கவிழ்ப்பு போன்ற சம்பவங்கள் நடந்தேறியது. தலைநகரில் தொடங்கிய அந்த கலவரம் குமரியின் பல இடங்களில் பரவியிருந்தது பல இடங்களில் போராட்டம் நடந்தாலும் தக்கலையில் தபால் அலுவலகம், ஆர்டிஓ அலுவலக வாகனம் நிறுத்துமிடம் மற்றும் கேரளபுர உயர்நிலை பள்ளி கட்டிடம் ஆகியவற்றை காங்கிரஸ் கலவரக்காரர்கள் தீவைத்து கொளுத்தினர்........
பகல் முழுவதும் காங்கிரஸ் கலவரக்காரர்களின் வேட்டைக்காடாக இருந்த குமரி மாவட்டம் இரவில் உச்சத்தை பெற்று தக்கலை அருகே வெள்ளியோட்டில் பன்னிரண்டு அப்பாவிகளின் உயிரை வாங்கி அடங்கியது. கட்டபொம்மன் போக்குவரத்து கழகத்தின் பேருந்து எண் 11 D தனது கடைசி ட்ரிப்பாக களியக்காவிளையிலிருந்து தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்தது. . கடைசி பேருந்தில் வந்து அதிகாலை சந்தையில் வியாபாரம் செய்யும் மக்களும் கேரளாவில் எல்லையோரமிருந்து வேலை முடிந்து வீடு திரும்பும் சாதாரண மக்களுமாக பேருந்தில் சுமார் நாற்பது பயணிகள் இருந்தனர்..........
பேருந்து நெடுஞ்சாலையில் வெள்ளியோட்டில் வைத்து ஒரு வாலிபரால் நிறுத்தப்பட்டது. பேருந்து ஏறியவர் கையிலிருந்த ப்ளாஸ்டிக் பையில் வைத்திருந்த எரிபொருளால் பேருந்தின் இரு வாசலிலும் தீவைத்தார் பேருந்தின் இருவாசலிலும் முழுவதுமாக தீயெரிந்ததால் பேருந்திலிருந்து தப்பமுடியாமல் ஜன்னல்கள் வழியாக மக்கள் வெளியே குதித்து ஓடினர். அதிகமாக பெண்கள் இருந்ததாலும் இரவு நேரமானதாலும் அவர்களால் வெளியேற முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் தீயணைக்க முயற்சித்தும் அவர்களால் புகை படர்ந்த பேருந்தை நெருங்க முடியவில்லை. சம்பவ இடத்திலேயே அடையாளம் தெரியாத அளவு கருகி ஒரு குழந்தை உட்பட ஏழுபேர் இறந்து போனார்கள்.........
பலர் தீ காயமடைந்து கோட்டாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர் . அவர்களில் சிகிச்சை பலனளிக்காமல் முதலில் இருவரும் பின்னர் மூவருமாக மொத்தம் பண்ணிரண்டு பேர் இறந்து போயினர். ஐந்து பேர் கண் பார்வையிழந்தனர் பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் தீக்காயங்களுடன் வாழ்ந்தனர். அடுத்த நான்கு நாளில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒரு பஞ்சாய்த்து தலைவர், ஒரு சைக்கிள் கடை உரிமையாளர் , ஒரு டாக்ஸி ட்ரைவர், ஒரு இளைஞன், ஒரு முன்னாள் ராணுவ வீரர் மற்றும் இந்த வன்முறை சதிதிட்டத்தை தீட்டிய காங்கிரஸ் பொறுப்பாளரான மருத்துவர் ஒருவர் என் ஏழுபேரை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை .அன்றைய முதல்வர் எம்ஜியார் அவர்கள் இந்த வன்முறை சம்பவத்தால் பாதிக்கபட்டவர்களை கோட்டாறு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு பத்தாயிரம் ருபாய் அரசு நிதி அறிவித்தார்................
பன்னிரண்டு பேரின் மரணத்திற்கு என்ன நீதி கிடைத்தது.....? அந்த காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் 1980 ஆம் இந்திரா காந்தி பிரதமரானபோது எந்த ஒரு தண்டனையும் பெறாமல் விடுதலை அடைந்தனர். இன்று போல் அன்று சமூக ஊடகங்களும் உண்மையறியும் செயல்பாட்டாளர்களும் இல்லாத காரணத்தாலும் இறந்தவர்களில் சிலர் மலையாளிகளும் மிக ஏழ்மையான மக்களுமானதால் குரலற்றவர்களாக நீதி மறுக்கப்பட்டு அந்த வலியோடே வாழ்ந்து மரித்தனர் சிலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.............
தண்டனையிலிருந்து தப்பிய கொலையாளிகள்/ பயங்கரவாதிகளின் உறவுகள் , அவர்களின் கட்சி தொண்டர்கள் அந்த தொணடர்களின் வாரிசுகள் இன்று அதை விபத்து என்று பொய்களை பரப்பி கொண்டிருக்கின்றர். அந்த பயங்கரவாதிகளில் சிலர் கட்சியில் பெரும்பதவிகளை பெற்று தேர்தல்களை சந்தித்து சுகித்து வாழ்ந்தனர்........
இந்த சம்பவங்கள் திட்டமிட்ட பச்சை வன்முறை சம்பவம் என்பதற்கு அன்றைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காளிமுத்து அவர்கள் டிசம்பர் 28 அன்று வெளியிட்ட அறிக்கையே சான்றாகும்.அவர்களின் அறிக்கையிலிருந்து சிலவரிகள்.....
"பேருந்தில் குழித்தறையிலிருந்து ஏறிய ராபி என்கிற ராபின்சன்( பள்ளியாடி) பேருந்துல் பயணம் செய்கிறான் . வெள்ளியோட்டை நெருங்கியபோது ஏசுதாசன்(தக்கலை) என்பவனால் பேருந்து நிறுத்தபடுகிறது. இருவரும் சேர்ந்து இருவாசல்களிலும் தீவைக்கின்றனர். சம்பவ இடத்தில் டேவிட்( பள்ளியாடி) என்பவனும் ரங்கனாதன்(பத்மனாபபுரம்) என்பவனும் இருவருக்கும் துணையாக இருந்தனர். இவர்கள் நால்வரும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள். இந்த வன்முறை சம்பவத்திற்கு சதிதிட்டம் தீட்டு பின்புலமாக இருந்தது காங்கிரஸ் பொறுப்பாளர் மற்றும் தக்கலையருகே இரண்டு மருத்துவமனைகளை நடத்தி வந்த மருத்தவருமான ஜோசப் என்பவர் . இந்த வழக்கை குற்றவாளிகள் சம்பவ இடத்தில் விட்டுச்சென்ற சைக்கிள் துணையோடு அதன் உரிமையாளரை பிடித்து விசாரித்து அடுத்த நான்கு நாட்களில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்"...
இனி பாதிக்கபட்டவர்கள் தீயணைக்க முயற்சிசெய்த இருவருடன் பேசியதில் கிடைக்கபெற்ற உண்மைகள் அடிப்படையில்......
காட்டாத்துறைக்கு முன்பாக ராபி பேருந்தில் ஏறியதாகவும் ஏசுதாசன் பேருந்தை மறித்ததாகவும். ராபி பேருந்தினுள் இருந்து பின்வாசல் வரையும் ஏசுதாசன் முன்வாசலிலும் எரிபொருளை தெளித்தனர் என்றும் பேருந்திற்குள் தெளிக்கபட்டது பாஸ்பரஸ் என்று ஒருவரும் மற்றொருவர் அக்கினிபாசானம் என்றும் தெரிவித்தார். அதனால் தான் நச்சு புகைகளால் நிரந்தர பார்வைக்கோளாறுகளில் பலர் பாதிக்கபட்டனர் என்றனர். மேலும் தீகாயங்கள் போலல்லாத அமிலக்காயங்கள் போன்ற தழும்புகள் பலர் உடலில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்கள்.......
சம்பவம் நடந்த அடுத்த நாள் செய்தி தாள்களில் காவலர்கள் மற்றும் காயம்பட்டவர்கள் சொன்ன செய்தியாக மேல்சொன்னதையே வெளியிட்டிருந்தது.ஆனால் பின்னர் வந்த காவல்துறை அறிக்கையில் உபையோகிக்கபட்ட எரிபொருள் பெட்ரோல் என்றே குறிப்பிட பட்டிருந்தது........
இரண்டு ஆண்டுகளில் அரசியல் பின்புலத்தில் தண்டனை பெறாமல் வெளியேவந்தவர்களை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்யவில்லை.பேருந்தில் இறந்த ஒரு பெண்ணின் குடும்பத்தினர் பத்தாயிரம் நிவாரண தொகை போதாது என மேல்முறையீடு செய்து வெகுகாலம் வழக்கு நடத்தினர்................
நிறைவாக எங்கே அரசியல் கட்சியினர் மூர்க்கத்தனமாக தங்கள் தலைவர்களுக்காக கொலை பல செய்தாலும் அவர்கள் ஒரு காலமும் தண்டனை பெறுவதில்லை. அந்த தலைவர்களின் அன்பை பெற்றவர்களாக வழக்கிலிருந்து விடுதலை பெற்று கட்சி பதவிகளை சுகித்தே வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் இப்படியான பல சம்பவங்கள் உண்டு அவற்றிர்க்கெல்லாம் முன்னோடியும் அவற்றையெல்லாம் விடவும் கொடூரமானதும் குமரி மாவட்டத்தில் நடந்த வெள்ளியோடு தீகொளுத்தி சம்பவம் தான். இனிமேல் காங்கிரஸில் யாராவது அறம் போதிக்கும்போது இந்த சம்பவத்திற்கான நீதி பற்றி அவர்களின் கருத்தை பதிவு செய்ய சொல்லிவிட்டு அறம் போதிப்பது சரியாக இருக்கும்...........
சம்பவத்திற்கான சான்றுகள் :
1. 1978 டிசம்பர் 20 முதல் 28 வரை வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ்,தினத்தந்தி மற்று மாலை செய்திதாள்கள்
2. சம்பவத்தில் தாயை இழந்த ஒருவரோடான உரையாடல்
3.சம்பவத்தில் நேரடியாக தீயணைக்க முயற்சித்த ஒருவருடரான உரையாடல் ( இரண்டிர்க்கும் வீடியோ ஆதாரம் உள்ளது வயோதிகர்களான அவர்களது பாதுகாப்பினை காரணம் கொண்டு பெயர்களை வெளியிட முடியாது)
#🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋♂ நாம் தமிழர் கட்சி #📰தமிழ்நாடு அரசியல்📢


